திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

ராசிபலன்

ராசி பலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்

மார்ச் 23 முதல் ஏப்ரல் 5 -ம் தேதி வரை

மேஷம்:

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சூரியனும் 12-ல் நிற்பதால் தூக்கமின்மை, டென்ஷன், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

தொடர்வதால் எந்த நேரம் எந்த ஆபத்து நேருமோ, பெயர் கெட்டுவிடுமோ என அவ்வப்போது அச்சப்படுவீர்கள்.

புதன் 12-ல் நிற்பதால் திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை மனம்கோணாமல் நடத்துங்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சக ஊழியர்களிடம் நிதானமாகப் பழகுங்கள். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்தப் போராட வேண்டியிருக்கும்.

திட்டமிடுதல் மூலம் காரியம் சாதிக்கும் நேரம் இது!

ரிஷபம்

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. சூரியனும், 25-ம் தேதி முதல் புதனும் 11-ம் வீட்டில் நிற்பதால் சுப நிகழ்ச்சிகளில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பயணங்கள் சிறப்பாக அமையும்.

குரு 9-ம் வீட்டில் வலுவாகத் தொடர்வதால் உங்களின் புகழ், கெளரவம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத்துறையினரின் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெற வேண்டிய காலம் இது!

மிதுனம்

ராசிபலன்

சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் நீண்ட நாளாகத் தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், எட்டில் மறைந்திருக்கும் குரு சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்குவார். வியாபாரத்தில் சில அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் நேரம் இது!

கடகம்

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பெற்றோரின் உடல் நலம் சீராகும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுக்கிரன் 9-ல் செல்வதால் புகழ், கௌரவம் உயரும். பழுதான ஆடியோ, வீடியோ சாதனங்களை மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

9-ம் வீட்டில் சூரியனும் நிற்பதால் தந்தைக்கு கை, கால் வலி வந்து போகும் குருவும், உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் சவாலான விஷயங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். கலைத்துறையினர் வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவார்கள்.

தன்னம்பிக்கையால் வெற்றிவாகை சூடும் காலம் இது!

சிம்மம்

ராசிபலன்

சுக்கிரன் 8-ல் மறைந்திருப்பதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். 8-ல் சூரியன் மற்றும் புதனும் மறைந்திருப்பதால் திடீர் பணவரவு உண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

குரு 6-ல் நிற்பதால் சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். தாழ்வுமனப்பான்மை, விபத்து, டென்ஷன், கணவன்-மனைவி பிரிவு, மனஇறுக்கம் வந்து போகும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் வரும்.

கடின உழைப்பால் சாதிக்க வேண்டிய நேரம் இது!

கன்னி

ராசிபலன்

குருபகவானின் அனுக்கிரகம் தொடர்வதால் தொட்ட காரியம் துலங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ராசிநாதன் புதன் 25 - ம் தேதி முதல் ராசியைப் பார்ப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. பணப்புழக்கம் கணிசமாக உயரும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். சுக்கிரன் 7-ல் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

குரு 5 - ல் தொடர்வதால் பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய தருணம் இது!

துலாம்

ராசிபலன்

சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. ஆனால் 25 - ம் தேதி முதல் புதன் 6-ல் மறைந்திருப்பதால் சாதகமற்ற பலன்கள் ஏற்படும். ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். சுக்கிரனும் 6-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வீண் செலவு, ஏமாற்றம், தொண்டை வலி, காய்ச்சல் வந்து நீங்கும். மனைவியுடன் வாக்குவாதம் வரக்கூடும். பயணத்தில் கவனம் தேவை.

4-ல் குரு தொடர்வதால் அலைச்சல், டென்ஷன், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினர் மறைமுகப் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் இருக்கும்.

கோபம் விடுத்து அனைவரோடும் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம் இது!

விருச்சிகம்

ராசிபலன்

5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவு, டென்ஷன் வந்து போகும். குரு 3-ல் நிற்பதால் அசதி, சோம்பல் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதன் சாதகமாக நிற்பதால் கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுக்கிரன் பூர்வ புண்ணிய வீடான 5-ல் நுழைந்திருப்பதால் மன அமைதி நிலவும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனம் புதுசு வாங்குவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். பங்குதாரர் உங்களின் கருத்துக்களைக் கேட்டு நடப்பார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் நேரம் இது!

தனுசு

ராசிபலன்

சுக்கிரன் 4-ல் அமர்ந்திருப்பதால் கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். நல்ல வரன் அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். தந்தையின் உடல் நலம் சீராகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

குரு சாதகமாக இருப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். லோன் கிடைக்கும். சிலர் வேலை மாற நினைப்பீர்கள். வியாபாரத்தில் வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். மேலதிகாரி பாராட்டும்படியாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.

வெற்றிக் கனியைப் பறிக்கும் தருணம் இது!

மகரம்

ராசிபலன்

சுக்கிரன் 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.

ஜன்ம குரு உங்களை அடிக்கடிக் கோபப்பட வைப்பார். எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தை உண்டாக்குவார். உங்கள் திறமைகள் யாவும் மங்கி விட்டதாக நினைக்க வைப்பார். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவார்கள்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரம் இது!

கும்பம்

ராசிபலன்

சுக்கிரன் 2-ல் அமர்வதால் முக தேஜஸ் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதன் சாதகமாக இருப்பதால் நயமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ஆனால் சூரியன் 2-ல் தொடர்வதால் சில நேரங்களில் கடுமையான கண் வலி மற்றும் ஒற்றை தலை வலி வந்து நீங்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

குரு 12-ல் தொடர்வதால் வீண் செலவுகள் வந்துகொண்டேயிருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் உஷாராக இருங்கள். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் உயரும். ஆனால் வீண் வதந்திகளுக்குப் பஞ்சமிருக்காது.

தடைகளைத் தாண்டி வெற்றி நடைபோடும் தருணம் இது!

மீனம்

ராசிபலன்

ராசிக்குள் சுக்கிரன் நிற்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். திடீர் யோகம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வர். உடல் ஆரோக்கியம் சீராகும். ராசிக்குள் சூரியனும் நிற்பதால் முன்கோபம், வீண் வாக்குவாதம் வரக்கூடும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போகும்.

11-வது வீட்டிலேயே குரு தொடர்வதால் உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். சவாலான விஷயங்களைக் கூட எளிதில் முடிப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். கோபம் குறையும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் இருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். கலைஞர்கள், கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக இருந்தாலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அமைதியாகக் காத்திருந்து வெற்றி பெற வேண்டிய காலம் இது!