Published:Updated:

ராசி பலன்கள்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

சக்தி விகடன் ராசிபலன் - அக்டோபர் 19 முதல் நவம்பர் 1 வரை

ராசி பலன்கள்

அக்டோபர் 19 முதல் நவம்பர் 1 வரையிலான ராசிபலன்களைப் பகிர்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

மேஷம்:

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 7-ல் அமர்ந்ததால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 30-ம் தேதி வரை 6-ல் புதன் நிற்பதால் வீண் பகை, உறவினர்களிடம் மனஸ்தாபம் வரக்கூடும். 31-ம் தேதி முதல் புதன் 7 - ம் வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சி பெருகும். திட்டமிட்டுச் சில காரியங்களைச் செய்வீர்கள்.

மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். குரு 10-ல் நிற்பதால் மறை முகத் தொந்தரவு, வீண் பழி வந்து செல்லும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

இறை அருளால் தொட்டது துலங்கும் காலம் இது!

ராசி பலன்கள்

ரிஷபம்:

சூரியன் 6 - ல் நிற்பதால் பணவரவு திருப்தி தரும். கடனை அடைக்கப் முயல்வீர்கள். என்றாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனம் தேவை. சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் உடல்நலம் சீராகும். வீட்டில் நல்லது நடக்கும். வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் கிடைக்கும். 30-ம் தேதி வரை புதன் 5-ம் வீட்டிற்குள் நிற்பதால் புத்துணர்ச்சி பெருகும். திட்டமிட்டுச் சில காரியங்களைச் செய்வீர்கள்.

குருபகவான் வலுவாக இருப்பதால் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றிப் புது வீடு வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் உயரதிகாரி வெறுப்பாகப் பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும் நேரம் இது!

ராசி பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாய்வழியில் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் குடும்பத்தில் சலசலப்பு வந்துபோகும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். 8- ல் குரு தொடர்வதால் நம்பிக்கையின்மை, இனந்தெரியாத கவலைகள், விரக்தி வந்து செல்லும்.

சூரியன் 5 - ம் வீட்டில் நுழைந்திருப்பதால் முன்கோபம், வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்பர். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும் காலம் இது!

ராசி பலன்கள்

கடகம்:

புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் தடைப்பட்ட சில காரியங்களை சாமர்த்தியாக முடித்துக் காட்டுவீர்கள். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். 30-ம் தேதிவரை சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்பதால் கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குருபகவான் வலுவாக இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.

சூரியன் 4-ல் அமர்ந்ததால் தடைகள் உடைபடும். மேல்மட்ட அரசியல் வாதிகள் உதவுவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத் துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

எதிர்பாராத வெற்றிகள் சூழும் தருணம் இது!

ராசி பலன்கள்

சிம்மம்:

சூரியன் 3 - ல் நிற்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். தாய்வழியில் அனுகூலம் உண்டு.

ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். குரு 6-ல் மறைந்திருப்பதால் நெடுங்கால நண்பர்கள்கூட உங்களைக் குறை கூறுவார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். கலைத்துறையினரை உதாசினப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

புதிய பாதையில் சென்று சாதிக்கும் காலம் இது!

ராசி பலன்கள்

கன்னி:

குரு வலுவாக இருப்பதால் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் உங்களின் தாழ்வுமனப்பான்மை, வீண் பயம் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கலகமூட்டியவர்களை ஓரங்கட்டுவீர்கள். மனைவியின் உடல்நிலை சீராகும்.

சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்ந்ததால் முன்பைவிட இப்போது ஓரளவு டென்ஷன் குறையும். ஆனால் பேச்சால் பிரச்னை வரும். சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

புகழ், கௌரவம் கூடும் காலம் இது!

ராசி பலன்கள்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தோற்றப் பொலிவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் இனி பேசுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். 4-ல் குரு நிற்பதால் வீண் பழி, கடன் தொந்தரவு வந்து போகும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பிரபலங்களின் உதவியுடன் சுமுகமாக முடிப்பீர்கள். ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் முன்கோபம், மனஉளைச்சல், தலைவலி வந்து போகும். ஆனால் வீடு, வாகன வசதி பெருகும். வியாபாரம் சூடு பிடிக்கும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

நிர்வாகத் திறன் அதிகரிக்கும் காலம் இது!

ராசி பலன்கள்

விருச்சிகம்:

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். அரசாங்க வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.

3-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், சாமர்த்திய பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். சூரியன் 12-ல் அமர்ந்ததால் திடீர்ப் பயணங்கள், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

விட்டுக் கொடுத்து வெற்றிபெறும் நேரம் இது!

ராசி பலன்கள்

தனுசு:

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பால்ய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் வீடு மாறுவீர்கள். சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்ததால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள். வீட்டை அழகுபடுத்து வீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

குரு 2-ல் நிற்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்கள் இனி முரண்டு பிடிக்கமாட்டார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

வசதி-வாய்ப்புகள் பெருகும் நேரம் இது!

ராசி பலன்கள்

மகரம்:

சூரியன் 10-ல் அமர்ந்ததால் புது பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாட்டு வேலைகளுக்குச் செல்ல எடுத்த முயற்சிகள் இப்போது வெற்றி அடையும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க வேலைகளை அலைந்து திரிந்து முடித்துவிடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்; கோயில் பணிக்கு நன்கொடை தருவீர்கள்.

குருபகவான் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர யுக்தி களைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சக ஊழியர்களைக் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.

நட்பு வட்டம் பெருகும் காலம் இது!

ராசி பலன்கள்

கும்பம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 12-ல் குரு தொடர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

சூரியன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தந்தைக்குக் கை, கால், முதுகு வலி, வாழ்க்கைத் துணைவருடன் பிணக்குகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் சில மாற்றங்களைச் செய்யுங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் காலம் இது!

ராசி பலன்கள்

மீனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்ததால் கணவன்-மனைவிக்குள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும்.

புது சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். அனுபவமிகுந்த புது வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற வேண்டிய தருணம் இது!