திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

நவம்பர் 2 முதல் 15-ம் தேதிவரை

நவம்பர் 2 முதல் 15-ம் தேதி வரையிலுமான ராசிபலன்களை வழங்குகிறார் ஜோதிட ரத்னா `முனைவர்' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்

மேஷம்:

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க முயல்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகளுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

சூரியன் 7-ல் நிற்பதால் பெற்றோருக்கு இருந்து வந்த உடல் நலப் பிரச்னை சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. 7-ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நேரம் இது!

ராசி பலன்கள்

ரிஷபம்:

சுகாதிபதி சூரியன் நீசமாகி 6-ல் நிற்பதால் வண்டி, வாகனச் செலவு அதிகமாகும். நெருக்கமான நண்பர் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

6-ல் புதன் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். ஆனால் 6-ல் செவ்வாய் இருப்பதால் தைரியம் பிறக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். பணவரவுக்கும் வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் காலம் இது!

ராசி பலன்கள்

மிதுனம்:

சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் செல்வாக்கு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வீடு வாங்குவது, மாறுவது சாதகமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். 5-ல் சூரியன் நிற்பதால் பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படக்கூடும்.

5-ல் புதனும் செவ்வாயும் நிற்பதால் பிள்ளைகளால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவும் லாபமும் ஏற்படும். வி.ஐ.பிகள் அறிமுகம் ஆவார்கள். அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத் துறையினர் குறித்து வதந்திகள் வரக்கூடும்; கவனம் தேவை.

சகிப்புத்தன்மை தேவைப்படும் தருணம் இது!

ராசி பலன்கள்

கடகம்:

சூரியனும் புதனும் 4-ல் நிற்பதால் சமயோசிதமாகப் பேசி சாதிப்பீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். தந்தையில் வழியில் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். செவ்வாய் 4-ல் அமர்ந்திருப்பதால் சகோதரிக்கு வேலை கிடைக்கும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும்.

சுக்கிரன் 6-ல் நிற்பதால் வீட்டில் பராமரிப்புப் பணிகள் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

சொன்னதைச் செய்து காட்டும் நேரம் இது!

ராசி பலன்கள்

சிம்மம்:

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் நிற்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

சூரியன் வலுவாக 3-ம் வீட்டில் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். செவ்வாய் வலுவாக அமர்ந்ததால், புதிய யோசனைகள் பிறக்கும்; புதுப் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பண வரவு திருப்தி தரும். வியாபாரத்தில் எதிர்பார்ததைவிட லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.

உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் காலம் இது!

ராசி பலன்கள்

கன்னி:

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சலிப்பு, சோர்வு நீங்கும்; உற்சாகம் பிறக்கும் பணம் வரும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உறவினர் வீட்டுக் கல்யாணத்தைத் திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வீண் செலவுகளைக் குறைக்க முயல்வீர்கள்.

சூரியன் 2-ல் நிற்பதால் பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். செவ்வாய் 2-ல் நிற்பதால் ஷேர், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப் பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவீர்கள்.

அந்தஸ்து ஒருபடி உயரும் தருணம் இது!

ராசி பலன்கள்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான ஸ்தானத்தில் நிற்பதால் சோர்ந்து கிடந்த நீங்கள், சுறுசுறுப்பாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப்பொலிவு கூடும். வாகனம், வீடு வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தில் கூச்சல் குழப்பங்கள் நீங்கும்; மகிழ்ச்சி தங்கும். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

ராசிக்குள்ளேயே நிற்கும் சூரியனும், செவ்வாயும் உங்களை அவ்வப் போது சீண்டிப் பார்ப்பார்கள். அவ்வப்போது ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினருக்கு சம்பளப்பாக்கி கைக்கு வரும். புதிய வாய்ப்புகள் உங்களை மலர வைக்கும்.

பழைய கடனில் ஒரு பகுதி அடைபடும் காலம் இது!

ராசி பலன்கள்

விருச்சிகம்:

சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். களைப்பு நீங்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வீண் அலைச்சல் குறையும். ஷேர் மூலம் பணம் வரும்.

புதன் சாதகமாக இருப்பதால் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சூரியனும், செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, வீண் டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரத்தில், புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். லாபம் உயரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! அலட்சியப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

விமர்சனங்களைத் தாண்டி முன்னேறும் காலம் இது!

ராசி பலன்கள்

தனுசு:

செவ்வாய், புதன், சூரியன் லாப வீட்டில் அமர்ந்ததால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

சுக்கிரன் வலுவாக நிற்பதால் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். வீடு, மனை சேர்க்கை உண்டு. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர், சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாட்டுப் புது நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும்.

செலவுகள் குறைந்து சேமிக்கத் தொடங்கும் நேரம் இது!

ராசி பலன்கள்

மகரம்:

சூரியன் 10-ல் நிற்பதால் புது உத்தியோகம் அமைய வாய்ப்பு உண்டு. சம்பள பாக்கி கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக அமர்ந்திருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். ஷேர் மூலம் கொஞ்சம் பணம் வரும். வீட்டை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவீர்கள்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய காலம் இது!

ராசி பலன்கள்

கும்பம்:

சூரியன் 9-ல் நிற்பதால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். தந்தைக்குக் கை, கால் அசதி, அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். 10-ல் சுக்கிரனும், புதனும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும்.

செவ்வாய் 9 - ல்அமர்ந்திருப்பதால் பணவரவு, திடீர் யோகம் உண்டு. பேச்சில் கம்பீரம் பிறக்கும். புதிய சொத்து வாங்க முன்பணம் கொடுத்தவர்கள், மீதிப் பணத்தையும் கொடுத்து பத்திரப் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மாற்றம், புது வேலை கிடைக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

வழக்குகள் சாதகமாக முடியும் நேரம் இது!

ராசி பலன்கள்

மீனம்:

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் நிற்பதால் பணபலம் உயரும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். மனதில் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷம் பிறக்கும். சிலருக்குத் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகமாகும்.

8-ல் சூரியன் நிற்பதால் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள், வாக்குவாதம் வந்து விலகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த அதிகாரி உங்களைப் புரிந்து கொண்டு உதவுவார். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சாதித்துக் காட்டும் காலம் இது!