Published:Updated:

ராசி பலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

19.4.22 முதல் 2.5.22 வரையிலான ராசிபலன்கள்

ராசி பலன்

19.4.22 முதல் 2.5.22 வரையிலான ராசிபலன்கள்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 19.4.22 முதல் 2.5.22 வரையிலுமான ராசிபலன்கள்

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்: தனாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய சொந்த பந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. புதனும் வலுவாக அமர்ந்திருப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் கண், பல் வலி, நெஞ்சு எரிச்சல், முன்கோபம் வந்து விலகும்.

குரு 12 - ல் மறைந்திருப்பதால் வீண் பழி, தூக்கமின்மை, அலைச்சல் வந்து போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

புகழும் கௌரவமும் உயரும் காலம் இது!

ராசி பலன்

ரிஷபம்: லாப வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி தொடரும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களால் பயனடைவீர்கள்.

12 ல் சூரியன் மறைந்திருப்பதால் கனவுத்தொல்லை, திடீர் பயணங்கள், பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். சுக்கிரனும், புதனும் ஓரளவு சாதகமாக இருப்பதால் கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னை நீங்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பல ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினர் தீவிரமாகப் பேசி சம்பள பாக்கிகளை வசூலிப்பீர்கள்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது!

ராசி பலன்

மிதுனம்: சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். பிள்ளைகள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். திடீர் பணவரவு உண்டு. செல்வாக்கு கூடும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.

ஆனால் 10 - ல் குரு நிற்பதால் செய்யும் வேலை அலைச்சலின் பேரில் முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

திடீர் திருப்பங்கள் நிறைந்து காணப்படும் நேரம் இது!

ராசி பலன்

கடகம்: உங்களின் தனாதிபதி சூரியன் 10 - ல் பலமாக நுழைந்திருப்பதால் பெரிய திட்டங்கள் எல்லாம் சாதாரணமாக நிறைவேறும். அரசியலில் செல்வாக்குக் கூடும். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். புது வேலை கிடைக்கும். சுக்கிரனும், குருவும் சாதகமான வீட்டில் நிற்பதால் பணவரவு அதிகரிக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாங்க கட்ட லோன் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும்; நகை வாங்குவீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார்கள். கலைத்துறையினரைப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

தடைகளை எதிர்த்து சாதித்துக் காட்டும் நேரம் இது!

ராசி பலன்

சிம்மம்: குருபகவான் வலுவாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மூத்த சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 28-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந் திருப்பதால் வாகனம் அடிக்கடி தண்டச் செலவு வைக்கும். சாலையைக் கடக்கும் போது நிதானம் தேவை. சூரியன் 8 - ல் மறைந்ததால் அலைச்சல், டென்ஷன் குறையும். தந்தைவழியிலிருந்த மோதல்கள் விலகும். சொந்த

ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். அவ்வப்போது குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த பணியாளர்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். வர வேண்டிய சம்பளம் கைக்கு வரும்.

விவேகமான முடிவுகள் எடுத்து வெற்றி பெறும் நேரம் இது!

ராசி பலன்

கன்னி: புதனும், சுக்கிரனும் ஓரளவு சாதகமாக நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். மகனின் பிடிவாதம் குறையும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள்.

குருவால் வீண் செலவு, டென்ஷன், மனக்குழப்பம் வந்து போகும். சூரியன் உச்சமாகி நிற்பதால் உடல் நிலை சீராகும். நிர்வாகத் திறமை கூடும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகும். ஆனால் தந்தையாருடன் மனவருத்தங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர் களிடம் கனிவு தேவை. உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத்துறையினருக்கு அதிரடி சலுகையுடன் எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடி வரும்.

சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் தருணம் இது!

ராசி பலன்

துலாம்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு கட்ட வங்கி உதவும். ஆடை, ஆபரணம் சேரும். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். சூரியன் 7 - ல் நிற்பதால் வாழ்க்கைத் துணைக்கு உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.

குரு பகவான் 6-ல் நிற்பதால் அவ்வப்போது முன்கோபம் வந்து போகும். யோகா, தியானம் செய்வது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்துச் செய்வது நல்லது; அகலக் கால் வைக்க வேண்டாம். அதேநேரம் லாபம் சிறிது உயரும். பங்குதாரர்களுடன் வளைந்துகொடுத்துப் போங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரி யின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

பொறுமையைக் கடைப்பிடித்து வெல்ல வேண்டிய நேரம் இது!

ராசி பலன்

விருச்சிகம்: சூரியன் வலுவாக அமர்ந்ததால் தைரியம் கூடும். திடீர் முன்னேற்றம், அரசால் ஆதாயம் உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். குடும்பத்தினருடன் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்வீகச் சொத்துச் சிக்கல் முடிவுக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் அந்தஸ்து உயரும். 28-ம் தேதி வரை புதனின் போக்கு சரியில்லாததால் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில், புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் வந்துசேரும். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்.

தடைகளும் சிரமங்களும் விலகும் காலம் இது!

ராசி பலன்

தனுசு: சூரியன் 5-ல் நிற்பதால் முன்கோபம், ஒற்றைத் தலை வலி வந்து நீங்கும். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 28-ம் தேதி வரை புதன் சாதகமாக இருப்பதால் மனத்தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும்.

சுக்கிரனும், குருவும் ஓரளவு வலுவாக அமர்ந்ததால் வாகனப் பழுது நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில், உங்களை நிரூபிக்கத் தக்க வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் வேற்று மொழி வாய்ப்புகளால் ஆதாயம் அடைவார்கள்.

சுபச் செய்திகளால் மனம் மகிழும் காலம் இது!

ராசி பலன்

மகரம்: சூரியன் 4 - ல் நிற்பதால் வேலைச்சுமை, முதுகு வலி, தாயாருடன் கருத்து மோதல்கள், உறவினர் பகை வரக்கூடும். ஆனால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். 3-ல் குரு அமர்ந்திருப்பதால் வி.ஐ.பிகளால் அலைச்சல் இருக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. வாகன வசதி பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை கைகூடும். வீடு கட்ட வாங்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைஞர்களின் படைப்புகள் பலராலும் பாராட்டப்படும்.

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் காலம் இது!

ராசி பலன்

கும்பம்: சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்ததால் புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு. மனக்குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிட்டும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

குருவும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைக்கும். நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். சொந்த - பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்குச் சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

பழைய சிக்கல்களில் ஒன்று தீரும் நேரம் இது!

ராசி பலன்

மீனம்: குரு ராசிக்குள் நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள் வரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். நகை களை இரவல் தர வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும்.

ராசிக்கு 2-ல் சூரியன் அமர்ந்ததால் வீண் டென்ஷன், கண் வலி, மனஉளைச்சல் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்கவேண்டாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கலைத்துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய காலம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism