Published:Updated:

ராசி பலன்கள்

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

ஜூன் 28 முதல் ஜூலை 11-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூன் 28 முதல் ஜூலை 11-ம் தேதி வரை

Published:Updated:
கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த

ஜூன் 28 முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்:

சூரியன் 3-ல் வலுவாக இருப்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும்.

ராசிக்குள் நிற்கும் ராகுவுடன் செவ்வாயும் நிற்பதால் கணுக்கால் மற்றும் கழுத்து வலி, வாகன விபத்துகள் வரக்கூடும். முன்கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் உங்களை நம்பிச் சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

ஈகைக் குணத்தால் எல்லோராலும் பாராட்டப்படும் நேரம் இது.

ராசி பலன்கள்

ரிஷபம்:

புதன் 2-ல் நிற்பதால் கடனாகக் கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக் கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால் 2-ல் நிற்கும் சூரியன் சேமிப்புகளைக் கரைப்பார். பணப் பற்றாக்குறையை ஏற்படுத்துவார். கண் வலி வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால், எதிர்நீச்சல் போட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்கள் உதவுவார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை அழகுபடுத்துவீர்கள். 12-ல் செவ்வாயும், ராகுவும் நிற்பதால் தூக்கமின்மை, மூட்டு வலி, ரத்த சோகை வரக்கூடும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

ஏமாற்றங்கள், எதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் நேரம் இது.

ராசி பலன்கள்

மிதுனம்:

சூரியன் ராசிக்குள் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால், வி.ஐ.பிகள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். புதன் ராசிக்குள் நிற்பதால் இதமாகப் பேசி சாதிப்பீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள்.

செவ்வாய், ராகு லாப வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். பெரிய முதலீடு களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வந்துபோகும்; சமாளிப்பீர்கள். கலைத் துறை யினரின் கற்பனைத்திறன் வளரும்.

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.

ராசி பலன்கள்

கடகம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கார் பழுதைச் சரி செய்வீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 12-ல் நிற்கும் புதனால் பழைய நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். ராசிக்கு 12-ல் சூரியன் நிற்பதால் முன்கோபம், தூக்கமின்மை, எதிர்பாராத செலவுகள், திடீர் பயணங்கள் வந்து போகும். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

செவ்வாய் 10-ல் நிற்பதால் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில், மேலதிகாரியிடம் நற்பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் அனுசரித்துப் போவார்கள். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்.

வெற்றிப் பயணத்தைத் தொடரும் நேரம் இது.

ராசி பலன்கள்

சிம்மம்:

லாப வீட்டில் ராசிநாதன் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வீடு கட்ட அரசிடமிருந்து ப்ளான் அப்ரூவல் வந்து சேரும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் உதவி கிடைக் கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பிள்ளைகளின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாண விஷயம் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால் தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், வீண் பழி வந்து செல்லும். கலைத்துறையினர் புதுமையான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

ராசி பலன்கள்

கன்னி:

சூரியன் 10-ல் நிற்பதால் தடைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத் திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புதனும், சுக்கிரனும் சாதகமாக நிற்பதால் கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

8-ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் முன்யோசனை இல்லாமல் அவசர முடிவுகள் எடுத்துப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புக அடைவார்கள்.

இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் நேரம் இது.

ராசி பலன்கள்

துலாம்:
ரா
சிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் ஓரளவு பணம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். 9-ல் சூரியன் நிற்பதால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்து போகும். புதன் வலுவாக நிற்பதால் பழைய நண்பர்கள் ஆதரவாக இருப்பர். உறவினர்களில் சிலர் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள்.

7-ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் மறதி, ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பு வேண்டாம்; விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை குறித்து ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரிகள் ஆதரிப்பார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

சலிப்புக் கொள்ளாமல் பணியாற்ற வேண்டிய காலம் இது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

சுக்கிரன் 7-ல் தொடர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சில இடங்களில் சிலரிடத்தில் வளைந்து கொடுப்பீர்கள். வாழ்க்கைத்துணை யதார்த்தமாக ஏதேனும் அறிவுரை சொன்னால், ஏற்றுக்கொள்ளுங்கள். பணவரவு உண்டு. விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

சூரியன் 8-ல் நிற்பதால் செலவுகள் அதிகமாகும். திடீர் பயணங்கள் உண்டு. ஆனால் அரசு வேலை முடியும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செவ்வாய் 6-ல் அமர்ந்ததால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் வரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். கலைத் துறை யினருக்கு, தடைப்பட்ட வாய்ப்பு கூடி வரும்.

புது எண்ணங்களால் புகழடையும் நேரம் இது.

ராசி பலன்கள்

தனுசு:

புதன் சாதகமாக இருப்பதால் விலகிச் சென்ற பழைய சொந்தங் கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சுக்கிரன் ராசிக்கு 6-ல் தொடர்வதால் வாழ்க்கைத்துணைக்கு உடல் நலக் கோளாறுகள், அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

சூரியன் 7-ல் நிற்பதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்தப் பாருங்கள். 5-ல் செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் நிற்பதால் பிள்ளைகள் வழியில் சில சிரமங்கள் உண்டு. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி களிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். கலைத்துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் வரும்.

கவனமுடன் கால் பதித்து மெள்ள முன்னேறும் காலம் இது.

ராசி பலன்கள்

மகரம்:

சுக்கிரன் 5-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத் தில் இடம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

6-ல் சூரியன் நிற்பதால் அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 6-ல் புதன் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், இறுமல், கழுத்து வலி வந்து போகும். 4-ல் நிற்கும் செவ்வாய், ராகுவால் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தி யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவார்கள்.

கடின முயற்சியால் புதிய பாதை தெரியும் நேரம் இது.

ராசி பலன்கள்

கும்பம்:

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளும், ஏமாற்றங் களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரிப்பார்கள். 5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசாங்க விஷயங்களில் அவசரம் வேண்டாம். புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டு.

செவ்வாயும், ராகுவும் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். முன்பணம் கொடுத்திருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தம் தாமதமாக முடியும்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய நேரம் இது.

ராசி பலன்கள்

மீனம்:

சுக்கிரன் வலுவாக 3-ம் வீட்டில் நீடிப்பதால் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கைமாற்றுக் கடனைத் திருப்பித் தருவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சாதுக்கள் உதவுவார்கள். சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

2-ல் செவ்வாய், ராகு நிற்பதால் பேச்சில் நிதானம் தேவை. முதுகு மற்றும் மூட்டு வலி வந்து போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக் குறை நீடிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி சக ஊழியர்களிடம் பேச வேண்டாம். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் நேரம் இது.