திருக்கதைகள்
Published:Updated:

ராசி பலன்

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.பி.வித்யாதரன்

நவம்பர் 1 முதல் 14-ம் தேதி வரை

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரனின் துல்லியமான கணிப்பில், நவம்பர் 1 முதல் 14-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்.

மேஷம்: சுக்கிரன் 7-ல் தொடர்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். வீட்டு உபயோக சாதனங்களை வாங்குவீர்கள். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணியை முடித்துவிட வேண்டுமென்பதில் ஈடுபாடு காட்டுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 3-ல் நீடிப்பதால் முன்கோபம் விலகும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. மகனுக்குத் தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணம் கூடி வரும்.

புதனும் வலுவாக இருப்பதால் தைரியமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு உண்டு. மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சின்னச் சின்னப் பிரச்னைகள் வெடிக்கும். கலைத்துறையினர் தங்கள் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

ராசி பலன்

ரிஷபம்: செவ்வாய் 2 - ல் நிற்பதால் இழுபறி நிலை மாறும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். சொத்துத் தகராறு தீரும். 11 - ம் தேதி வரை ராசிநாதன் சுக்கிரன் 6 - ல் தொடர்வதால் தொண்டைவலி, பார்வைக் கோளாறு, வாகன விபத்து, டென்ஷன் வரக்கூடும். 9 - ம் தேதி வரை புதனும் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் பழைய நண்பர்களுடன் மோதல்கள் வரும்.

சூரியன் 6-ல் நிற்பதால் வழக்கில் வெற்றி, அரசால் அனுகூலம் உண்டு. ஆனால் உங்கள் சுகாதிபதியாகவும் சூரியன் வருவதால் வீண் அலைச்சல், செலவுகள் இருக்கும். வீட்டில் குடிநீர் பிரச்னை, கழிவுநீர் பிரச்னைகள் வரக்கூடும். பால்ய நண்பர்களிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் போகும். புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினர் இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள்.

தாணுன்டு தன் வேலை உண்டு என்றிருக்க வேண்டிய காலம் இது.

ராசி பலன்

மிதுனம்: பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் 5-ம் வீட்டில் தொடர்வதால் குழந்தையில்லாத தம்பதியர் சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணவரவு, காரியத்தில் வெற்றி உண்டு. குடும்பத்தில் எப்போதும் நிலவி வந்த சண்டை சச்சரவுகள் இனி மாறும். உறவினர்களால் ஆதாயமுண்டு. செவ்வாய் ராசிக்குள் நீடிப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

9-ம் தேதிவரை புதன் வலுவாக இருப்பதால் உறவினர்கள் இனி உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். திடீர் பயணங்களால் ஆதாயமுண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிட்டும். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நேரம் இது.

ராசி பலன்

கடகம்: சூரியன் பலமாக இருப்பதால் மனதில் புத்துணர்ச்சி ததும்பும். அரசாங்கக் காரியங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்கள், கல்வியாளர்களைச் சந்திப்பீர்கள். 12-ல் செவ்வாய் மறைவதால் சகோதரர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் தலைத்தூக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். வியாபாரத்தில் அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களுக்காகப் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

கடனில் ஒரு பகுதி கரையும் காலம் இது.

ராசி பலன்

சிம்மம்: ராசிக்கு 3-ல் சுக்கிரன் தொடர்வதால் புதுத் திட்டங்களுக்கு வழிவகுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் சுபகாரியங்களில் ஏற்பாடாகும். குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். ராசிநாதன் சூரியன் பலமாக இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். திடீர் யோகம் உண்டாகும்.

புதன் சாதகமாக இருப்பதால் வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். பழைய நண்பர்கள் தேடிப்பிடித்து வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் மூத்த அதிகாரியைத் திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும்.

உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவேண்டிய காலம் இது.

ராசி பலன்

கன்னி: ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் கனிவான பேச்சாலேயே தடைப்பட்ட பல காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமணம், எதிர்காலம் பற்றிய கவலைகள் விலகும். 2-ல் சூரியனும் நிற்பதால் கண் எரிச்சல், தூக்கமின்மை வரக்கூடும். செவ்வாய் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்வதால் உங்களின் திறமைகள் கூடும்.

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் மன தைரியத்துடன் சில காரியங்களைச் செய்துமுடிப்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரம் தழைக்கும். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டுக் கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். கலைத்துறையினரின் வருமானம் உயர வழி பிறக்கும்.

அனுபவ அறிவால் சாதிக்கும் நேரம் இது.

ராசி பலன்

துலாம்: புதனும், உங்கள் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். பணவரவால் சேமிக்கத் தொடங்குவீர்கள். ராசிக்குள் நிற்கும் சூரியனால் கண்-காது-மூக்கு-தொண்டை வலி இருக்கும். முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள்.

செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்வதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். திடீரென்று அறிமுகமானவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். அலுவலக நிமித்தமாக சிலர் வெளி மாநிலம், அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் நேரம் இது.

ராசி பலன்

விருச்சிகம்: 12-ல் சுக்கிரன் நிற்பதால் சுபச்செலவுகள் வரும். வீட்டில் நடக்கும் விசேஷங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். 12-ல் சூரியன் நிற்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியிடம் மனஸ்தாபம் வந்துபோகும். 8-ல் செவ்வாய் அமர்வதால் சகோதர வகையில் டென்ஷன் வந்து போகும்.

புதன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளின் ஒத்துழைப்பு உண்டு. வேற்று மொழிக்காரர்களால் நன்மைகள் உண்டு. வியாபாரத்தில் திடீர் யோகம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினர் புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

தன்னடக்கத்தால் தடைகளை தாண்டும் காலம் இது.

ராசி பலன்

தனுசு: சுக்கிரனும், சூரியனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மன தைரியம் அதிகரிக்கும். ஓரளவு பணம் வரும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது சொத்து வாங்குவீர்கள்.

புதனும் வலுவாக அமைந்திருப்பதால் திட்டமிட்டபடி வேலைகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பாராட்டுகளும் கிடைக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் காலம் இது.

ராசி பலன்

மகரம்: ராசிக்கு 10-ல் சுக்கிரன் ஆட்சிப்பெற்றிருப்பதால் பிரபலங்களைச் சந்திப்பீர்கள். வழக்குகளில் சாதமான நிலை ஏற்படும். கன்னிப்பெண்கள் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். சூரியன் 10-ல் பலம்பெற்றிருப்பதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. அரசாங்கக் காரியங்களில் வெற்றி கிட்டும். செவ்வாய் 6-ல் அமர்வதால் கோபம் குறையும். குழப்பம் தீரும். பிள்ளைகளிடமிருந்த பிடிவாதம் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும்.

புதனும் வலுவாக இருப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வாகனத்தை மாற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவீர்கள். உத்தியோகத்தில் புதுப் பொறுப்புகளை ஏற்பீர்கள். கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய காலம் இது.

கும்பம்: சுக்கிரன் வலுவாக இருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திரும்பித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 9-ல் சூரியன் நிற்பதால் தந்தையாருக்கு உடல்நலம் பாதிக்கும். அவர்வழி உறவினர்களிடையே மனக்கசப்புகள் வந்துநீங்கும். செவ்வாய் 5-ல் அமர்வதால் கால் வலி, கழுத்து வலி, மனஇறுக்கம் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபரமாக அமையும்.

9-ம் வீட்டில் புதன் வலுவாக இருப்பதால் தந்தையாருடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அவர்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்கும் யுக்தியைக் கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்கள் உங்களின் திறமையைக் கண்டு வியப்பார்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்.

பழைய வழக்கு முடிவுக்கு வரும் நேரம் இது.

ராசி பலன்

மீனம்: 8-ல் சூரியன், சுக்கிரன் நிற்பதால் திடீர் பணவரவு, கொஞ்சம் அலைச்சல், பயணம் என வரக்கூடும். அரசாங்கக் காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும். சில நேரங்களில் ஏதோ இனம் புரியாத சோகம் உங்களை வாட்டியெடுக்கும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சகோதர வகையில் பயனடைவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும்.

புதன் 8-ல் நிற்பதால் வீண் அலைச்சல், சகோதர வகையில் செலவு, நண்பர்களிடம் பகை என வரக்கூடும். பிற்பகுதியில் உறவினர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்து கொண்டு உதவுவார். கலைத்துறையினர்ருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

கடின உழைப்பால் சாதித்துக் காட்டும் காலம் இது.