Published:Updated:

ராசிபலன்: ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 12 -ம் தேதி வரை

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் தருணம் இது

ராசிபலன்: ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 12 -ம் தேதி வரை

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் தருணம் இது

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

னாதிபதி சுக்கிரன் 4 -ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் செயலில் வேகம் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்களின் சொற்படி நடந்துகொள்வார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் நல்லது நடக்கும். புது வேலை அமையும்.

மேஷம்
மேஷம்

சூரியனும் ராசிநாதன் செவ்வாயும் 9-ம் தேதி வரை 4-ம் வீட்டில் நிற்பதால், பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டு. சகோதர வகையில் அலைச்சல் நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டை விரிவுபடுத்த முடிவெடுப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாள்கள் மற்றும் பங்குதாரர்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினர் வேற்றுமொழிப்பட வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

புது முயற்சிகளில் வெற்றி காணும் தருணம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

செவ்வாயும் சூரியனும் 9- ம் தேதி வரை 3 -ம் வீட்டில் நிற்பதால், வழக்கில் வெற்றிபெறுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் விலகும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக நிற்பதால் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். எதிர்மறை எண்ணங்களும் தாழ்வுமனப்பான்மையும் நீங்கும். கண், காது வலி நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

ரிஷபம்
ரிஷபம்

பூர்வபுண்ணியாதிபதி புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அஷ்டமச் சனி தொடர்வதால், சின்னச் சின்ன மனக்குழப்பங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில், அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில், அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கலைத்துறையினருக்குப் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் நிற்பதால், உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு, மனை வாங்குவதற்குக் கடனுதவி கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்
மிதுனம்

சூரியன் 2 -ம் வீட்டில் தொடர்வதால், பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. 9 - ம் தேதி வரை செவ்வாய் 2-ம் வீட்டில் தொடர்வதால் டென்ஷன், படபடப்பு குறையும். சொத்துத் தகராறு தீரும். 7-ம் வீட்டில் சனியும் 6-ம் வீட்டில் குருவும் நீடிப்பதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றியடைவார்கள்.

தொட்டது துலங்கும் நேரம் இது.

கடகம்

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் உற்சாகம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். எதிர்ப்புகள் குறையும். பிள்ளை களைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால், துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.

கடகம்
கடகம்

சூரியனும் செவ்வாயும் 9-ம் தேதி வரை ராசிக்குள் நிற்பதால், அவ்வப்போது கண் எரிச்சல் அதிகமாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குருபகவான் சாதகமாக இருப்பதால், எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்பு களுக்கு வேறொருவர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு.

விடாப்பிடியாகச் செயல்பட்டு வெற்றி பெறும் வேளை இது.

சிம்மம்

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சுக்கிரன் 12-ம் வீட்டில் இருப்பதால், வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட கடன் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.

சிம்மம்
சிம்மம்

ராசிநாதன் சூரியனும் செவ்வாயும் 9-ம் தேதி வரை 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு வகை காரியங்கள் தாமதமாக முடியும். ராகு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

வெற்றியாளர்களைச் சந்திக்கும் நேரம் இது.

கன்னி

சூரியனும் செவ்வாயும் 9-ம் தேதி வரை 11-ம் வீட்டில் நிற்பதால், அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தாய்வழியில் ஆதரவு பெருகும். சவால்களில் வெற்றிபெறுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி

பிரபல யோகாதிபதியான சுக்கிரன் லாப வீட்டில் நுழைந்திருப்பதால் செல்வம், செல்வாக்கு கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புது பதவிகள் தேடி வரும். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

நினைத்ததை முடிப்பீர்கள்.

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வீட்டை அழகுபடுத்துவீர்கள். சூரியனும் புதனும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். பணவரவு உண்டு. பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும்.

துலாம்
துலாம்

9-ம் தேதி வரை செவ்வாய் 10-ம் வீட்டில் தொடர்வதால், தந்தையின் உடல்நலம் சீராகும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். உங்கள் ரசனைப்படி வீடு, மனை அமையும். சனியும் கேதுவும் 3-ம் வீட்டில் நீடிப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெரிய அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். கலைத்துறையினருக்கு மதிப்பு, மரியாதை கூடும்.

பிரச்னைகள் முடிவுக்கு வரும் வேளை இது.

விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், வீண் செலவுகள் குறையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேர்வார்கள். சுக்கிரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் டென்ஷன் குறையும். பற்றாக்குறை நீடிக்கும்.

விருச்சிகம்
விருச்சிகம்

3-ம் தேதி முதல் புதன் 9-ம் வீட்டில் நிற்பதால், புது முயற்சிகள் பலிதமாகும். வி.ஐ.பிகளின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், தந்தையுடன் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். ஜன்ம குரு, ஏழரைச் சனி தொடர்வதால் அக்கம்பக்கத்தாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங் களைப் பகிரவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில், மேலதிகாரியுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் நட்பு கிடைக்கும்.

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் தருணம் இது.

தனுசு

சுக்கிரன் ஓரளவு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. வாகன வசதி பெருகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால், சுற்றத்தார் மத்தி யில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சாதுர்யமான செயல் பாடுகளால் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு
தனுசு

சூரியன் 8-ம் வீட்டில் நிற்பதால், அரசு தொடர்பான வேலைகளில் அலைச்சல் உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. செவ்வாய் சாதகமாக இல்லாததால் முதுகுவலி, வயிற்றுக் கடுப்பு வந்து நீங்கும். சகோதர வகையில் சச்சரவுகள் வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும்.

மகரம்

குரு லாப வீட்டில் நிற்பதால் மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு - மரியாதை கூடும். சுக்கிரன் 7 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணம் வரும். புதுத் தெம்பு பிறக்கும். முகப்பொலிவு கூடும். வாகனப் பழுது நீங்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்றுசேர்வார்கள்.

மகரம்
மகரம்

3-ம் தேதி முதல் புதன் வலுவடைவதால், புதிய சிந்தனைகள் தோன்றும். தந்தைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். 9- ம் தேதி வரை செவ்வாய் 7 - ம் வீட்டில் நிற்பதால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, குறிப்பிட்ட நபரை விலக்குவீர்கள். உத்தியோகத்தில், அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினர், வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் வேளை இது.

கும்பம்

சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் சிக்கல்களைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசால் ஆதாயம் உண்டு.அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். சுக்கிரனும் புதனும் 3-ம் தேதி முதல் சாதகமாக இல்லாததால் சோர்வு வந்து நீங்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.

கும்பம்
கும்பம்

செவ்வாய் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில், புது முதலீடுகளை யோசித்துச் செய்வது நல்லது. பங்குதாரர்களுடன் வளைந்துகொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கவேண்டாம். கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும் நேரம் இது.

மீனம்

சுக்கிரன் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சிலருக்குக் குழந்தைப்பேறு வாய்க்கும். நவீனரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மீனம்
மீனம்

3-ம் தேதி முதல் புதன் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். சூரியன் 5 - ம் வீட்டில் நிற்பதால், சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

விருப்பங்கள் நிறைவேறும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism