திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜனவரி 11 முதல் 24-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த... ஜனவரி 11 முதல் 24-ம் தேதி வரையிலுமான ராசிபலன்கள்

ராசிபலன்
ராசிபலன்

மேஷம்:

புதன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுக்கிரன் 9-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வாகனம் வாங்குவீர்கள்.

சூரியன் 10-ல் நிற்பதால் எதிலும் மகிழ்ச்சியுண்டு. புது வேலை கிடைக்கும். தந்தையுடனான பிணக்கு நீங்கும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். ராசிக்கு 11-ம் வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் புது முயற்சிகளில் வெற்றியுண்டு. வி.ஐ.பிகள் சிலரின் ஆலோசனையால் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வியாபாரத்தில், சலுகைகளால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவீர்கள். உத்தியோகத் தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் முகம் சுளிக்காமல் பாருங்கள். கலைத்துறையினர் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.

தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும் நேரம் இது.

ராசிபலன்

ரிஷபம்:

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிர்த்தவர்களும் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மதிப்பு கூடும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். புதன் 8-ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் செலவு வந்து நீங்கும்.

சுக்கிரன் 8-ல் மறைந்து நிற்பதால், உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தாரைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். 10-ல் குரு நிற்பதால் சின்னச் சின்ன அவமானங்கள், வேலைச்சுமை வந்து போகும். வியாபாரத்தில், சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

புது முயற்சிகளில் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

மிதுனம்:

சூரியனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வி.ஐ.பி களின் ஆதரவால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் பெற்று, குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் நல்ல செய்திகள் வரும். 9-ல் குரு பலம் பெற்றிருப்பதால் இழுபறியான காரியங்களை முடிக்கும் விதமாக நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவான பேச்சால் நிம்மதியடைவீர்கள். கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

வளைந்துகொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

கடகம்:

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கறாராகப் பேசுவீர்கள். அரசு வேலைகள் குறையின்றி முடியும். கண் வலி குணமாகும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். தொண்டைப் புகைச்சல், காய்ச்சல் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணைவருடன் மனத்தாங்கல் வரும்.

புதன் 6-ல் மறைந்திருப்பதால் அவ்வப்போது வீண் டென்ஷன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 8-ல் குரு மறைந்தாலும் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது!

ராசிபலன்

சிம்மம்:

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் சுறுசுறுப்புடன் செயல்பட்டுத் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... நல்ல பதில் வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

14-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசால் அனுகூலம் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும். இளைய சகோதரருடன் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். குரு வலுவாக அமைந்திருப்பதால், பழைய பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். கன்னிப்பெண்களுக்குத் தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். கலைத் துறையினரைப் பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

மதியூகத்தால் முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

கன்னி:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். புதன் 4-ல் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

14-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் அரசுக் காரியங்கள் இழுபறியாகும். எவரையும் விமர்சிக்க வேண்டாம். 6-ம் வீட்டில் குரு அடங்கிக் கிடப்பதால் உங்களுக்குக் கீழே இருப்பவர்கள்கூட உங்களை விமர்சிப்பார்கள். சிறு சிறு விபத்துகள் நிகழக்கூடும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வரலாம். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

தன்னடக்கத்துடன் செயல்பட்டு சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

துலாம்:

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசியலில் செல்வாக்கு கூடும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதன் வலுவாக இருப்பதால் சாதுர்ய மாகப் பேசி சாதிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். கடன் பிரச்னையைத் தீர்க்கப் புது வழி கிடைக்கும்.

குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும் காலம் இது.

ராசிபலன்

விருச்சிகம்:

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். புதுச் சொத்து வாங்குவீர்கள். பதவிகள் தேடி வரும். உறவினர்களால் நன்மை உண்டு. சூரியன் 14-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். புது வேலை அமையும். திருமணம் கூடி வரும்.

4-ல் குரு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். அதேநேரம், வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பங்குதாரர் களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில், சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

கோபத்தைக் குறைக்க வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

தனுசு:

ராசிக்குள் சுக்கிரன் நிற்பதால் பொலிவு, செயல்வேகம் கூடும். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பெற்றோர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். 14-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகி சூரியன் 2-ல் நுழைவதால் உடல் வலி, முன்கோபம் விலகும். ஆனால் பேச்சில் நிதானம் தேவை.

குரு 3-ல் நிற்பதால் பலவருடங்கள் நெருக்கமாகப் பழகியவர்கள்கூட உங்களைக் குறை கூறுவார்கள். முக்கிய வேலைகள் கூடத் தடைப்பட்டு முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

தோல்விகள் நீங்கி தலைநிமிரும் நேரம் இது.

ராசிபலன்

மகரம்:

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத்திறமை கூடும். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். 12-ல் மறைந்திருக்கும் சூரியன் 14-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் தலைச்சுற்றல், வேனல்கட்டி, பெற்றோருடன் வாக்குவாதம், முன்கோபம் வந்து செல்லும்.

குருபகவான் 2-ல் நிற்பதால், தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப் படுவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். சுபச்செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். எனினும் மேலதிகாரியால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

போராடி வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

கும்பம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த இடத்திலிருந்து கடனுதவி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த கசப்பு உணர்வுகள் மறையும். புது வீடு, வாகன வசதி பெருகும். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வெளி வட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

14-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். ஜன்ம குருவால் வேலைச்சுமை, தூக்கமின்மை, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்கு வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உதவுவார். சக ஊழியர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். கலைத்துறையினருக்கு, வெகுநாள்களாக தடைப்பட்ட வாய்ப்பு கூடி வரும்.

திறமைகளால் வெளிச்சத்திற்கு வரும் நேரம் இது.

ராசிபலன்

மீனம்:

சூரியனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதுத் திட்டங்கள் நிறைவேறும். பெரிய பதவிகள், புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோச னையை ஏற்பார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள்.

12-ல் குரு மறைந்திருப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். சுக்கிரன் வலுவடைந்திருப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக் கும். புது நகை வாங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் காலம் இது.