பிரீமியம் ஸ்டோரி

`திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. திருமணத்துக்குப் பின்னரும் நம் வாழ்க்கை சொர்க்கமாகத் திகழவேண்டும் என்பதே பெரியோர்களின் விருப்பமும் வழிகாட்டலும் ஆகும். அவ்வகையில் இல்லறம் நல்லறமாகத் துலங்க ஜோதிடம் வழிகாட்டுகிறது.

ராசிப் பொருத்தம் 
பார்ப்பது எப்படி?

திருமணத்தில் இணையப்போகும் ஆண் - பெண் இருவரது ஜாதகத்திலும் பத்துப் பொருத்தங்கள் பார்ப்பது அவசியம். தினம், கணம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை ஆகியவற்றை தசவித பொருத்தங்கள் என்பார்கள். இவற்றில் ராசிப் பொருத்தம் மிக முக்கியமானது.

ராசிப் பொருத்தம்

ருவரது நட்சத்திரம், நட்சத்திர பாதம் வைத்தே அவரவர் ராசி அமைகிறது. பொதுவாக ஜோதிட ரீதியாக தினப் பலனோ, மாதப் பலனோ கணிக்கப்படும்போது, ராசியை வைத்து கணித்துதான் ‘ராசி பலன்’ சொல்லப்படுகிறது. இந்தப் பலன்கள் மூலம் ஒவ்வொருவருக்குக் கிட்டும் சௌகரியம் (செல்வங்கள்), சௌபாக்கியம் (சுகமான வாழ்க்கை) ஆகியவை பற்றித் தெரிந்துகொள்கிறோம். அதனால் திருமணப் பொருத்தம் பார்க்க ராசிப் பொருத்தம் மிக அவசியம்.

பல சமுதாயங்களில், வெறும் ராசிப் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஸ்திரீ ராசியிலிருந்து புருஷ ராசி வரைக்கும் எண்ணினால் வரும் எண்ணிக்கையைப் பொருத்து ராசிப் பொருத்தம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஸ்திரீ ராசியில் இருந்து புருஷ ராசி வரையிலுமான எண்ணிக்கை 2 முதல் 6 வரை இருந்தால் திருமணப் பொருத்தம் இருக்காது.

உதாரணம்: பெண் அசுவினி நட்சத்திரம் எனில், அவளுடைய ராசி மேஷம் ஆகும். எனவே, மேஷத்துக்கு துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் அமையும் சித்திரை முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களுக்கு ராசிப் பொருத்தம் உண்டு எனக் கொள்ளலாம்.

இனி, ஷஷ்டாஷ்டமம் அதாவது 6- வது 8-வது ராசித் தொடர்பு குறித்து அறிவோம்.

பெண்ணின் ராசிக்கு புருஷ ராசி 6-வதாக வந்தால், புருஷ ராசிக்கு பெண்ணின் ராசி 8-வதாக வரும். மேஷத்துக்கு 6-வது ராசி கன்னி. இந்த கன்னிக்கு எட்டாவதாக மேஷம் வரும். இதை ஷஷ்டாஷ்டமம் என்பார்கள் (ஷஷ்டம் - 6 அஷ்டமம் 8).

பொதுவாக, ஷஷ்டாஷ்டம நட்சத்திரங்களுக்குத் திருமணப் பொருத்தம் சேராது; இது, புத்திர நாசத்தை ஏற்படுத்தும் என்று எடுத்துக்கொள்வார்கள். எனினும், இந்த ஷஷ்டாஷ்டகத்துக்கு விதி விலக்குகள் உண்டு.

ராசிப் பொருத்தம் 
பார்ப்பது எப்படி?

ஷஷ்டாஷ்டம விதி விலக்குள்ள ராசிகள் விவரம்:

பெண் ராசி - ஆண் ராசி

மேஷம் - கன்னி

மிதுனம் - விருச்சிகம்

சிம்மம் - மகரம்

துலாம் - மீனம்

தனுசு - ரிஷபம்

கும்பம் - கடகம்

இவை, சுப ஷஷ்டாஷ்டமம் அல்லது அனுகூல ஷஷ்டாஷ்டமம் எனப்படும். இந்த விதிவிலக்கின்படி நடக்கும் திருமணம் சிறப்பாக அமையும். பிருஹத் ஜாதகம் (கால விதானம், தேவ கேரளம்) போன்ற நூல்களில் இக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ராசிப் பொருத்தத்தைப் போன்றே ராசி அதிபதி பொருத்தமும் அவசியம்.

ராசி அதிபதி பொருத்தம்

வகிரகங்களில் உள்ள 7 கிரகங்கள், 12 ராசிகளுக்கு அதிபதிகளாவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு, சமநிலை, பகை உள்ளவர்களாக இருப்பார்கள்.

* ஆண், பெண் ராசி அதிபதிகளின் உறவு நட்பு - சமம் ஆனால், திருமணப் பொருத்தம் உத்தமம்

* ஆண், பெண் ராசி அதிபதிகளின் உறவு பகை- நட்பானாலும்; சமம் - பகை ஆனாலும் நட்சத்திர அதிபதி பொருத்தம் அமையாது.

ராசி அதிபதிகள் பொருத்தம் சேர்ந்திருந்தால், ராசிப் பொருத்தமும் சேர்ந்துவிடும். கணவன்- மனைவி ஒருவரையருவர் புரிந்து ஏற்றுக் கொண்டு, குடும்பப் பெரியவர்களின் உறவை சுமுகமாக்கி, அமைதியும் செழிப்பும் மிக்க வாழ்க்கை வாழ, ராசி அதிபதிப் பொருத்தம் மிக அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு