Published:Updated:

ராசி பலன்

நவம்பர் 16 முதல் 29-ம் தேதி வரை ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

நவம்பர் 16 முதல் 29-ம் தேதி வரையிலான ராசிபலங்களைக் கணித்து வழங்குகிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசி பலன்

மேஷம்: குரு 11 - ல் அமர்வதால் பணவரவு உண்டு. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மூத்த சகோதரர் பாசமாக இருப்பார். எனினும் தவிர்க்க முடியாத செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும். வாகனம் அடிக்கடி வேலை வைக்கும். வீட்டில் கூடுதல் அறை கட்ட யோசிப்பீர்கள்.

ராசி பலன்

சூரியன் 8-ல் அமர்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும் என்றாலும் கேதுவுடன் சேர்வதால் வீண் சந்தேகம் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். பல், காது வலி, தொண்டை புகைச்சல் வந்து போகும். 17 - ம் தேதி முதல் புதன் 8-ல் மறைவதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அவர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். போட்டிகளை வெல்வீர்கள் உத்தியோகத்தில் உயரதிகாரி சில நேரங்களில் உங்களைக் கடிந்து பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

மதிப்பு - மரியாதை கூடும் காலம் இது!

ராசி பலன்

ரிஷபம்:

உங்கள் சுகாதிபதி சூரியன் 7-ல் அமர்வதால் எரிச்சல், கோபம் விலகும். தடைப்பட்ட அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். என்றாலும் சூரியன் கேதுவுடன் சேர்வதால் முதுகு வலி, முழங்காலில் அடிப்படுதல் வந்து போகும்.

சுக்கிரன் 8-ல் மறைவதால் சுறுசுறுப்பாவீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் விரைந்து முடியும். என்றாலும் திடீர் பயணங்களும், செலவு களும் வந்து போகும். 17-ம் தேதி முதல் புதன் சாதகமாக அமர்வதால் பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுப்படுத்திக் கட்ட முடிவு எடுப்பீர்கள். குரு 10 - ல் நுழைவதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

துணிவே துணை என்று செயல்பட வேண்டிய நேரம் இது!

ராசி பலன்

மிதுனம்:

சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால் புகழ், கௌரவம் கூடும். பிள்ளை களின் பிடிவாதம் தளரும். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்ட தொடங்குவீர்கள். 17-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால் சளித் தொந்தரவு, நண்பர்கள், உறவினர்களால் அலைச்சல், பிரச்னைகள் வந்து நீங்கும். சுக்ரன் 7-ல் அமர்வதால் மனைவியுடன் இருந்த மோதல்கள், பிணக்குகள் நீங்கும்.

குரு 9-ம் வீட்டிற்கு வருவதால் பணத்தட்டுப்பாடு விலகும். வெளி நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். வேலையாட்களால் விரயம் வரும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினரை உதாசீனப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

அறிவுபூர்வமாக செயல்பட்டு முன்னேறும் தருணம் இது!

ராசி பலன்

கடகம்:

சூரியன் 5-ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து போகும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்து, தொண்டை புகைச்சல், கழுத்து வலி, வாகனப் பழுது வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை, வாக்குவாதம் வந்து போகும். பூர்வீகச் சொத்தினைச் சீர்திருத்தம் செய்வீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் இளைய சகோதரர்களால் நிம்மதி உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குரு 8-ல் நுழைவதால் வீண் அலைச்சல், பகை வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்துபோகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினர், தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

வளைந்து கொடுத்து வெற்றி பெற வேண்டிய காலம் இது!

ராசி பலன்

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் 4-ல் அமர்ந்திருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். சூரியன் கேதுவுடன் சேர்வதால் வேலைச்சுமையால் ஓய்வின்மையும், தூக்கமின்மை யும் வந்து போகும்.

புதன் வலுவாக நிற்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். குரு 7-ல் நுழைவதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பிப் புதுப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

புதிய கண்ணோட்டத்தில் பயணிக்கும் காலம் இது!

ராசி பலன்

கன்னி:

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் தோன்றும். திடீர் பணவரவு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தங்கள் தேடி வரும். நட்பு வட்டம் விரியும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.

சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் உங்களின் முதிர்ச்சியான பேச்சால் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள்.

விடாமுயற்சியால் சாதிக்கும் வேளை இது!

ராசி பலன்

துலாம்:

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் செல்வாக்கு, புகழ் கூடும். வீட்டு விசேஷங்கள், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். புது டிசைனில் தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

சூரியன் ராசியை விட்டு விலகுவதால் உடல் நலம் சீராகும். ஆனால் பேச்சில் கோபம் வேண்டாம். அரசுக் காரியங்கள் தள்ளிப் போய் முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியாகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

வெற்றிகள் குவியும் காலம் இது!

ராசி பலன்

விருச்சிகம்:

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் இங்கிதமாகப் பேசிக் கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவியின் உடல் நலம் சீராகும். ராசிக்குள் நிற்கும் கேதுவுடன் சூரியனும் சேர்வதால் முன்கோபம், உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும்.

குரு 4-ல் அமர்வதால் டென்ஷன் குறையும். எனினும் தொழிலில் சுணக்கம் ஏற்படும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். தொழில் ரகசியங்களை எவரிடமும் பகிரவேண்டாம். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

மன உறுதியுடன் போராடி வெல்ல வேண்டிய தருணம் இது!

ராசி பலன்

தனுசு:

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கேது, சூரியனுடன் சேர்ந்து 12-ல் நிற்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள்.

குரு பகவான் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகம் உண்டு. அதேநேரம் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

புதுத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் நேரம் இது!

ராசி பலன்

மகரம்:

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். வீடு கட்டுவது, வாங்குவது சாதகமாக அமையும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

குரு 2-ல் நிற்பதால் சோர்வு, களைப்பு, எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

சாமர்த்தியமாகக் காய்நகர்த்த வேண்டிய தருணம் இது!

ராசி பலன்

கும்பம்:

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் புது வேலை கிடைக்கும். அரசாங்கத் தால் ஆதாயம் அடைவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். குரு ராசிக்குள் நுழைவதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

சூழலுக்கேற்ப செயல்படவேண்டிய காலம் இது!

ராசி பலன்

மீனம்:

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தை மாற்றிப் புது வீடு வாங்குவீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சூரியன் 9-ல் நிற்கும் கேதுவுடன் சேர்வதால் தந்தைக்கு நெஞ்சு வலி, அவருக்கு வேலைச்சுமை வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும். குரு 12-ல் நிற்பதால் ஓரளவு பணப்புழக்கம் உண்டு. தந்தைவழிச் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத் துறையினரின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

எதிர்பாராத வெற்றிகளைச் சந்திக்கும் காலம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு