Published:Updated:

ராசி பலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூன் 14 முதல் 27-ம் தேதி வரை

ராசி பலன்

ஜூன் 14 முதல் 27-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த ஜூன் 14 முதல் 27-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்!

ராசி பலன்

மேஷம்:

ங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 15-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கும். வி.ஐ.பிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு.

ராசி பலன்

வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கிக் கடன் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் ஆதாயம் உண்டு. உயர்கல்வித் தடைகள் நீங்கும். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வீண் பயம் வந்துபோகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத் தில் உங்கள் கை ஓங்கும். சில ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் வேளை இது.

ராசி பலன்

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலர், வீடு மாற நினைப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவும் அதற்கேற்ப செலவுகளும் உண்டு. 15-ம் தேதி முதல் சூரியன் 2-ல் அமர்வதால் பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.

குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் தடைப்பட்ட வேலைகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்க மாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறைகூறத்தான் செய்வார்கள். அவர்களிடம் அதீத உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினரின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

பொறுமையுடன் காரியம் சாதிக்க வேண்டிய காலம் இது.

ராசி பலன்

மிதுனம்:

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். சுக்கிரன் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால், சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டுப் புது வீடு வாங்குவீர்கள்.

15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அலைச்சல், காரிய தாமதம், சைனஸ் தொந்தரவு, தொண்டை வலி வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். கலைத் துறையினருக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

மன உறுதியுடன் போராடி வெற்றிபெறும் தருணம் இது.

ராசி பலன்

கடகம்:

லாப வீட்டில் சுக்கிரனும் 9-ல் குருவும் வலுவாக இருப்பதால் எதையும் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் திடீர்ப் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சூடுபிடிக்கும். கடையை நவீனமயமாக்கு வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

புயலாய் இருந்த நிலை மாறி தென்றல் வீசும் காலம் இது.

ராசி பலன்

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் 15-ம் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சேமிப்பைப் பயன்படுத்தி புறநகர்ப் பகுதியில் மனை வாங்க எண்ணுவீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவார்கள்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் அதிர்ஷ்டகரமான நேரம் இது.

ராசி பலன்

கன்னி:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும்.

குருபகவான் ராசியைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். விலகி யிருந்த சொந்தங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் மொத்த வணிகத்துக்கு மாறுவீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் காலம் இது.

ராசி பலன்

துலாம்:

புதன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். உறவினர்களால் மகிழ்ச்சியும், நண்பர்களால் ஆதாயமும் உண்டு. தந்தைவழியில் ஆதரவு பெருகும்.

8-ல் சுக்கிரன் நிற்பதால் பொது விழாக்களை முன்னின்று நடத்து வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அவசியச் செலவுகளும் அதிகரிக்கும். சூரியனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனத்தாங்கல் வந்துசெல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு, நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

போராட்டங்களைக் கடந்து சாதிக்கும் தருணம் இது.

ராசி பலன்

விருச்சிகம்:

குருவும் சுக்கிரனும் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் உண்டு. ஆபரணங்கள் சேரும். சாதுர்யமான பேச்சால் கடன் பிரச்னையைச் சமாளிப்பீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 8-ல் சூரியன் நிற்பதால், அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். கலைத் துறையினருக்கு, வருமானம் உயரும்.

எதிலும் ஏற்றம் நிறையும் காலம் இது.

ராசி பலன்

தனுசு:

குருபகவான் ஓரளவு சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். புதனும் சுக்கிரனும் 6-ல் மறைந்திருப்பதால், அலைச்சலும் செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது செய்தாலும் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால், முன்பணம் கொடுத்திருந்த புதுச் சொத்துக்கு மீதிப் பணத்தையும் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 15-ம் தேதி முதல் சூரியன் 7-ல் நுழைவதால் அரசாங்க விஷயத்தில் காரிய தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்து போகும். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத் துறையினர், படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

சிந்தித்து செயல்பட்டு முன்னேறும் காலம் இது.

ராசி பலன்

மகரம்:

சூரியன் 15-ம் தேதி முதல் 6-ல் அமர்வதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அதிக வட்டியில் வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

குரு பகவான் 3-ல் மறைந்தாலும் சாதகமான வீடுகளைப் பார்ப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் கூடும். பிரபலங் களின் சுப காரியங்களில் பங்கேற்கும் அளவிற்கு அவர்களுடன் நெருக்கமாவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்.

வெற்றிக் கனியைத் தட்டிப்பறிக்கும் நேரம் இது.

ராசி பலன்

கும்பம்:

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் மனஉளைச்சல், வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் வந்து செல்லும். பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு வேண்டாம்.

புதன் 4-ல் நிற்பதால் வி.ஐ.பிகள் உதவுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். 2-ல் குரு நிற்பதால் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங் களைச் சொல்லவேண்டாம். பங்குதாரர்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். கலைத் துறையினர் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய தருணம் இது.

ராசி பலன்

மீனம்:

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டு.பூர்வீகச் சொத்தால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 4-ல் அமர்வதால், வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

குரு ராசிக்குள் நிற்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத் தில், போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வந்து நீங்கும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

துணிச்சலுடன் முக்கிய முடிவுகள் எடுக்கும் காலம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism