Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜூலை 16 முதல் 29 - ம் தேதி வரை

மேஷம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சாதுர்யமான பேச்சாலும் சாமர்த்தியமான செயல்பாடுகளாலும் சாதிப்பீர்கள். தடைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சூரியனும் செவ்வாயும் 4 - ம் வீட்டில் அமர்வதால், பிள்ளைகளின் உயர்கல்விச் சேர்க்கை, திருமண விஷயங்களை அலைந்து முடிக்கவேண்டி வரும்.

மேஷம்
மேஷம்

சனியும் கேதுவும் 9-ம் வீட்டில் நிற்பதால் வீண்செலவு குறையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும்.

3 - ம் வீட்டில் நிற்கும் ராகுவால் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில், சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில், மற்றவர்களின் வேலையையும் இழுத்துப்போட்டுச் செய்வீர்கள். கலைத்துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் பெறுவார்கள்.

புதுமுயற்சிகளில் வெற்றி காணும் வேளை இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

சூரியனும் செவ்வாயும் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், ஆரோக்கியம் கூடும். மனஇறுக்கம் நீங்கும். அரசு விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவதும் விற்பதும் சுலபமாக முடிவடையும். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்

புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். அஷ்டமச் சனி நடைபெறுவதால், எதிர்காலம் குறித்த பயம் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பழைய வேலையாள்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கலைத்துறையினருக்குப் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தடைகள் நீங்கி சாதிக்கும் தருணம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிநாதன் புதன் சாதகமாகச் சென்றுகொண்டிருப்பதால், தாழ்வு மனப்பான்மை விலகும். குடும்பத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சூரியன் ராசியிலிருந்து விலகிவிட்டதால் கோபம் விலகும். வேலைச் சுமை குறையும். செவ்வாயும் சூரியனும் 2 - ம் வீட்டில் நிற்பதால், பேச்சால் பிரச்னை வரக்கூடும்; கவனம் தேவை.

மிதுனம்
மிதுனம்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கண்டகச் சனி நடைபெறுவதால், மன அமைதியின்றி காணப்படுவீர்கள். வியாபாரத்தில், கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில், பதவி உயர்வும் சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி அமையும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றியடைவார்கள்.

தொட்டது துலங்கும் நேரம் இது.

கடகம்

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், மனஇறுக்கம் குறையும். தைரியம் பிறக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிய முனைவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால், வாழ்க்கைத்துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கடகம்
கடகம்

சூரியனும் செவ்வாயும் ராசிக்குள் நுழைந்திருப்பதால் சோர்வு, கண் எரிச்சல் வந்துபோகும்; வேலைச்சுமை அதிகமாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கேதுவும் சனியும் 6 - ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலிருந்த அதிருப்தியும் மனவருத்தமும் நீங்கும். வியாபாரத்தில், சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

விடாபிடியாகச் செயல்பட்டு விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.

சிம்மம்

சுக்கிரன் வலுவாக நிற்பதால், பழைய சொத்து ஒன்றை விற்பதன் மூலமாகவோ, பாகப்பிரிவினை மூலமாகவோ பணம் வரும். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், தொட்டது துலங்கும்; செல்வாக்கு அதிகரிக்கும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும்.

சிம்மம்
சிம்மம்

செவ்வாயும் சூரியனும் 12 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் வீண் செலவு, அவப்பெயர், ஏமாற்றம், வீண்பழி ஆகியவை வந்துபோகும். 11-ம் வீட்டில் ராகு நிற்பதால், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க வகையில் அனுகூலம் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில், மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டுகள் கிடைக்கும்.

வெற்றியாளர்களைச் சந்தித்து மகிழும் வேளை இது.

கன்னி

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், தன்னம்பிக்கை துளிர்விடும். மருத்துவச் செலவுகள் குறையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். லாப வீட்டில் சூரியனும் செவ்வாயும் நிற்பதால், அரசால் ஆதாயம் உண்டு; நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

கன்னி
கன்னி

அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால், உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. குரு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலைச் சுமை, வீண்செலவுகள் வந்துபோகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில், அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களுக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். வீடு கட்டுவதற்கு, எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், உங்கள் செல்வாக்கு கூடும்; பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்
துலாம்

சனி பகவான் 3-ம் வீட்டில் நிற்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சூரியனும் செவ்வாயும் 10-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், பண வரவும் அரசாங்கத்தால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில், உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும். கலைத்துறையினருக்கு, மதிப்பு கூடும்.

தடைப்பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும் வேளை இது.

விருச்சிகம்

புதனும் சுக்கிரனும் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களில் சிலர், புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். நட்புவட்டம் விரிவடையும். கணவன், மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்குத் தடைப்பட்டிருந்த திருமணம் கூடிவரும்.

விருச்சிகம்
விருச்சிகம்

சூரியன் 9 - ம் வீட்டில் நிற்பதால், தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை. சேமிப்புகள் கரையும். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

சகிப்புத்தன்மையால் எதையும் சாதிக்கும் தருணம் இது.

தனுசு

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், தொட்டது துலங்கும். செல்வாக்கு கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். வேலைக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு, நல்லதொரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

தனுசு
தனுசு

சூரியனும் செவ்வாயும் 8-ம் வீட்டில் மறைந்து நிற்பதால், பயணங்கள் அதிகரிக்கும். தந்தையாருக்கு, வேலை தொடர்பாக அலைச்சல் ஏற்படும். ஏழரைச்சனி இருப்பதால், எதிலும் அலட்சியம் வேண்டாம். குரு 12-ல் மறைந்திருப்பதால், எவருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சூடுபிடிக்கும். அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் நேரம் இது.

மகரம்

குரு லாப வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். 23-ம் தேதி வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்ப தால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படலாம். கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். 24-ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால், வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் சீராகும்.

மகரம்
மகரம்

சூரியன் 7-ம் வீட்டில் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை; கோபத்தைத் தவிர்க்கவும். ஏழரைச் சனி நடைபெறுவதால், சொந்த வீடு கட்டிக்கொண்டிருக்கும் அன்பர்கள், அரசாங்க விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பிரச்னைக்குரிய வேளையாள்களை நீக்குவீர்கள். அலுவலகச் சூழல் அமைதி தரும். கலைத்துறையினர் புகழடைவார்கள்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் நேரம் இது.

கும்பம்

சூரியன் 6-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கோபம் குறையும்; பயம் விலகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் விரைந்து முடியும். அரசால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். 23-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்ப தால், சிலருக்குக் குழந்தைபாக்கியம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்
கும்பம்

சனியும் கேதுவும் லாப வீட்டில் நிற்பதால், புதிய எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்குவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். 10-ம் வீட்டில் குரு தொடர்வதால், எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில், மற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கலைத்துறையினருக்குப் போட்டியும் சவால்களும் அதிகரிக்கும்.

எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய தருணம் இது.

மீனம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியவர்கள், திருந்துவார்கள். சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலைகள் உண்டாகும். பொது விஷயங்களில் மூக்கை நுழைக்கவேண்டாம்.

மீனம்
மீனம்

குரு பகவான் சாதகமாக இருப்பதால், தாழ்வு மனப்பான்மை நீங்கும்; புதிய சிந்தனைகள் மேலோங்கும். வி.ஐ.பிகள் அறிமுகம் ஆவார்கள். வியாபாரத்தில், பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள்; முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்; அவர்களுடைய படைப்புகள் பாராட்டு பெறும்.

உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் வேளை இது.