சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்கள்

ஜனவரி 10 முதல் 23-ம் தேதி வரை

மேஷம்: சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் சேமிப்புகள் கரையும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். தந்தைக்கு அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால், சகோதரர் வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மேஷம்
மேஷம்


புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண வரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். புது முதலீடுகள் இப்போது வேண்டாம்; அகலக் கால் வைக்காமல் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும்; பணிகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். கலைத் துறையினருக்குத் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்; நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.

ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீட்டில் அமர்ந்திருப்பதால், பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்குப் புது வேலை கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷபம்


சூரியன் 8-ல் நிற்பதால் முன்கோபம், சிறுசிறு காயங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால், எவரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில், புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவீர்கள்.

எதையும் சாதித்துக் காட்டும் நேரம் இது.

மிதுனம்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங் களை வாங்கி மகிழ்வீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்கிறார். ஆகவே, உங்கள் வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். நண்பர்களும் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

மிதுனம்
மிதுனம்


சூரியன் 7-ல் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சகோதர வகையில் பிரச்னை, வீண் டென்ஷன், தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில், உயரதிகாரிகள் வியக்கும்படி பணியாற்றுவீர்கள். உங்களின் செயல்திறமை சக ஊழியர்களைத் திகைக்கவைக்கும். கலைத் துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது.

கடகம்: சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

கடகம்
கடகம்


சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த லோன் கிடைக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். புதன் 6-ல் மறைவதால் உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில், பாக்கி களைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். கலைத்துறை யினருக்கு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம் இது.

சிம்மம்: புதன் சாதகமாகச் செல்வதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. உறவுகள் மத்தியில் மதிப்பும் செல்வாக்கும் கூடும். 6-ல் சுக்கிரன் மறைந்திருக்கிறார். ஆகவே, சிறு சிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் வீண் சச்சரவுகள் வந்து செல்லும். வாகனம் செலவு வைக்கும். வீட்டில் மின்னணு சாதனங்கள் பழுதாகும்.

சிம்மம்
சிம்மம்


சூரியன் 5-ல் நிற்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். செவ்வாய் 10-ம் வீட்டிலேயே வலுவாக நீடிக்கிறார். ஆகவே, சிலருக்குப் புது வேலை கிடைக்கும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள்; எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினர், வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.

அச்சம் விலகி, அதிகாரம் பெருகும் காலம் இது.

கன்னி: சூரியன் 4-ல் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வீடு வாங்குவது, கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜிதமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். ஆடை, அணிகலன் சேரும்.

கன்னி
கன்னி


புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். செவ்வாய் 9-ல் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

தன்னடக்கத்துடன் செயல்படும் காலம் இது.

துலாம்: ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். சொந்த வீட்டை அழகுபடுத்துவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர் களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்கவேண்டும் என எண்ணுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

துலாம்
துலாம்

சூரியன் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிரிகள் அடங்குவார்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய வழி பிறக்கும். செவ்வாய் 8-ல் நிற்பதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம்; கவனம் தேவை. அடிக்கடி முன்கோபம் வந்து போகும். சகோதரர்களால் நிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்த்தபடி பற்று - வரவு உயரும். உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களுக்குச் சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும்.

வெற்றிக்கு வித்திடும் காலம் இது.

விருச்சிகம்: புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக நிற்பதால், அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்


சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். செவ்வாய் 7-ல் நிற்பதால் ஒரு சொத்தை விற்றுவிட்டுப் பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைக் கோபித்தாலும், எதிர்த்துப் பேசவேண்டாம். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயம் உண்டு.

கோபத்தைக் குறைக்க வேண்டிய நேரம் இது.

தனுசு: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

தனுசு
தனுசு


சூரியன் ராசிக்குள் நிற்பதால் தந்தையின் உடல் நலம் சீராகும். உங்களுக்கு வேலைச்சுமை, வீண் செலவுகள் வந்து செல்லும். செவ்வாய் 6-ல் வலுவாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினர் புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பார்கள்.

சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கும் தருணம் இது.

மகரம்: சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். புதன் சாதகமாக இருப்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

மகரம்
மகரம்


12 - ல் சூரியன் நிற்பதால் அலைச்சல்களும், செலவீனங்களும் இருந்து கொண்டேயிருக்கும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களால் நிம்மதி அடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

போராடி வெற்றி பெறும் காலம் இது.

கும்பம்: சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். சுக்கிரனும் புதனும் வலுவாக நிற்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம், கிரகபிரவேசம், காதுகுத்து நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோயில்களுக்குச் சென்று நீண்டநாள் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். உங்கள் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

கும்பம்
கும்பம்


4-ல் செவ்வாய் நீடிப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டு வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நேர்மையை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத்துறையினருக்கு வெகுநாள்களாகத் தடைப்பட்டிருந்த வாய்ப்பு இனி கூடி வரும்.

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் காலம் இது.

மீனம்: சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நாடாளும் வி.ஐ.பிகள் அறிமுகம் ஆவார்கள். புது வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சுக்கிரன் சாதகமாக நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

மீனம்
மீனம்

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவுகள் பலப்படும். விருந்தினர் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். செவ்வாய் வலுவாக 3-ல் நிற்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயரும். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் நேரம் இது.