Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூன் 8 முதல் 21 வரை

ராசிபலன்

ஜூன் 8 முதல் 21 வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் அதிகரிக் கும். வெளியில் கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள். கணவர் முழுமையாக நேசிப்பார். அவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமைவார். மகனுக்கு வேலை அமையும். மாமனார், மாமியார் புதுப் பொறுப்புகளைத் தருவர். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். திடீர் யோகம் உண்டாகும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். சாதிப்பவர்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் நேரமிது.

ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமையும் பிரபலங்களின் ஆதரவும் கிட்டும். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. தோழிகளோடு பேசி ஆறுதல் அடைவீர்கள். சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். கணவரை சந்தேகத்தால் தொந்தரவு செய்யாதீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். மாமியார் ஏதேனும் குறை கூறுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். தன் பலம், பலவீனத்தை உணரும் நேரமிது.

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பதவியில் இருப்பவர் களின் அறிமுகம் கிடைக்கும். கம்பீரமாகப் பேசுவீர்கள். வீட்டில் கூடுதல் அறை கட்டத் திட்டமிடுவீர்கள். கணவருடன் கலந்தாலோசித்து செலவு களைக் குறைக்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். முன்கோபம், அலைச்சல் வந்து போகும். மாமியாருடன் கருத்து மோதல் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விடாமுயற்சியால் இலக்கை எட்டும் நேரமிது.

கடகம்: எதிலும் வெற்றி கிட்டும். பணபலம் உயரும். பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். சிலருக்குப் புது வேலை அமையும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக் கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாமியார் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார். அவ்வப்போது கோபம் அதிக மாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்ட காரியங்கள் துலங்கும் நேரமிது.

சிம்மம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். உறவினரின் அன்புத் தொல்லை குறையும். மாமனாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். மாமியாரின் ஆதரவு கிட்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உடல் அசதி வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். மூளை பலத்தால் முன்னேறும் நேரமிது.

கன்னி: உங்களின் புகழ், கௌரவம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார்கள். தந்தைக்கு உடல்நலம் சீராகும். புது வேலை கிடைக்கும். தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் முடியும். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. வெற்றிக்கு வித்திடும் நேரமிது.

துலாம்: புதிய சிந்தனைகள் தோன்றும். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். மச்சினர், உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். மாமனார் உங்களுக்கு சாதகமாகப் பேசுவார். உங்கள்மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும் மீண்டு வெளியே வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். வளைந்துகொடுத்து முன்னேறும் நேரமிது.

விருச்சிகம்: உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். திடீர்ப் பணவரவு உண்டு. கணவர் உங்களைப் புரிந்துக் கொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார். பிள்ளைகளின் உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். சகோதரர் சாதகமாக இருப்பார். எதிரும், புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்வார்கள். மன உளைச்சல், வீண் டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். அதிரடி முன்னேற்றங்களைச் சந்திக்கும் நேரமிது.

தனுசு: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். கணவருக்கு அலைச்சல், அவருடன் வீண் வாக்குவாதம், காரிய தாமதம் வந்து செல்லும். மாமியார் குறைப்பட்டுக் கொள்வார். நாத்தனார் வகையில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். கண்டுகொள்ளாமல் இருந்த கணவர் கனிவாகப் பேசுவார். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சமையலறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகும். எதிர்ப்புகள் அடங்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சாதுரியமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

கும்பம்: சவால்களைச் சமாளிப்பீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலை தூக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் நேரமிது.

மீனம்: எதையும் தைரியமாக முடிப்பீர்கள். திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணம் வரும். கணவர் உங்களுக்கு ஒத்தாசை யாக சில பணிகளைச் செய்வார். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். வேற்றுமதம், மொழியினர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. மச்சினருக்கு நல்ல வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.