Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

அக்டோபர் 26 முதல் நவம்பர் 8 வரை

மேஷம்: சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் கோபம் குறையும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். மாமியார் ஏதேனும் விமர்சித்தால் கோபப்படாதீர்கள். நாத்தனார் வகையில் உதவிகள் உண்டு. பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் அதிகமாகும். வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரருடன் கருத்து மோதல் வரும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைபார்க்க வேண்டி வரும். பிரபலங்களால் பாராட்டப்படும் நேரமிது.

ரிஷபம்: தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கணவர் முக்கியமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பெற்றோருடன் மனத்தாங்கல் வரும். வீடு மாறுவீர்கள். வாகனம் அவ்வப்போது பழுதாகும். மச்சினர், மாமியார் ஆதரவாகப் பேசுவார்கள். கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடியுங்கள். வியாபாரத்தில் ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும். புத்திசாலித்தனத்தைவிட பொறுமை தேவைப்படும் நேரமிது.

மிதுனம்: அலைச்சல், டென்ஷன் குறையும். கணவருடன் இருந்த மோதல் விலகும். முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். திடீரென்று அறிமுகமாக ஆகிறவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். மாமியாரின் கோபம் குறையும். நாத்தனாருக்கு நல்லது நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் பிற்பகுதியில் லாபம் வரும். வேற்றுமொழியினரால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்து நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். தன்னம்பிக்கையால் உயரும் நேரமிது.

கடகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்க்கப்பாருங்கள். கணவர் அவ்வப்போது கோபப்படுவார். பழைய கசப்பான சம்பவங்களைப் பேசினால் பொறுத்துப்போவது நல்லது. மாமனார் ஆதரவாக இருப்பார். சொத்து பிரச்னை சுமுகமாக முடியும். பள்ளிப் பருவத் தோழியைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யப்பாருங்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். எதிர்நீச்சல் போடும் நேரமிது.

சிம்மம்: தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்கும். மச்சினர், நாத்தனார் வகையில் அலைச்சல் அதிகமாகும். மூத்த சகோதரி உதவுவார். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளின் கோபம் குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கை, கால் வலி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். கணவரின் குற்றம், குறைகளைத் தனியாக இருக்கும்போது சுட்டிக்காட்டுவது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் நெருக்கடி வந்து நீங்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் கடின உழைப்பால் அதிகாரிகள் மனதில் இடம்பிடிப்பீர்கள். புதிய பாதையில் முன்னேறும் நேரமிது.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். ஓரளவு பணம் வரும். பழைய நகையை மாற்றிப் புது டிசைனில் வாங்குவீர்கள். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். கணவர், வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வார். மாமனார், மாமியார் வகையில் அலைச்சல் அதிகமாகும். நாத்தனாருடன் பனிப்போர் வந்து நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேச வேண்டிய நேரமிது.

துலாம்: பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். அனுபவ அறிவு அதிகமுள்ளவர்களின் அறிமுகத்தால் நிம்மதி கூடும். ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். கணவர் ஆதரவாகப் பேசுவார். உங்கள் புதிய முயற்சிகளைப் பாராட்டுவார். மாமியார், நாத்தனார் வகையில் கசப்பு வந்து நீங்கும். சகோதரர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். முன்கோபத்தால் பழைய நட்பை இழந்துவிடாதீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் தொந்தரவுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகள் மதிப்பார்கள். சமயோஜித புத்தியால் முன்னேறும் நேரமிது.

விருச்சிகம்: பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களின் நிர்வாகத் திறமையைக் கணவர் பாராட்டுவார். மாமனார், மாமியார் வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பிள்ளைகளிடமிருந்த பிடிவாத குணம் மாறும். மூத்த சகோதரி ஆதரவாகப் பேசுவார். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமையும் வீண் பழியும் வந்து நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நேரமிது.

தனுசு: தொட்டது துலங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சகோதரர்களுடன் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். கணவரின் வருமானம் உயரும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் கோபம் குறையும். நாத்தனாரின் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடி வரும். நீண்ட நாள் கனவு நனவாகும் காலமிது.

மகரம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். புதிய பதவிகளும் வாய்ப்புகளும் தேடி வரும். கணவர் உங்களை முழுமையாக நம்புவார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர், தோழிகளால் அனுகூலம் உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. நாத்தனாருக்கு நல்ல வரன் அமைவார். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். விட்டுக்கொடுக்க வேண்டிய நேரமிது.

கும்பம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவரை வழி நடத்துவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள். ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உறவினர், தோழிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். மாமியார், நாத்தனார் உங்கள் முடிவை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரி உங்களை மதிப்பார். அடிப்படை வசதிகள் உயரும் நேரமிது.

மீனம்: பழைய பிரச்னைகள் தீரும். தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். கணவர் சுறுசுறுப்படைவார். அவரின் ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தை எடுத்து நடத்துவீர்கள். மாமியார் உங்களைப் புரிந்துகொள்வார். வழக்கு சாதகமாகத் திரும்பும். அவ்வப்போது இனம்தெரியாத கவலைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பழைய வழக்குகளால் மன அமைதி குறையும். அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள்.