Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

ஏப்ரல் 27 முதல் மே 10 வரை

ராசிபலன்கள்

ஏப்ரல் 27 முதல் மே 10 வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

மேஷம்: உங்கள் கை ஓங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கணவர், வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளை களின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். வெளியூர் சென்று வருவீர்கள். பள்ளி, கல்லூரிக் காலத் தோழிகளைச் சந்திப்பீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினர்களையும் சந்தித்து மகிழ்வீர்கள். மாமனார் ஒத்தாசையாக இருப்பார். அவ்வப்போது முன்கோபம் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். வளைந்து நிமிரும் நேரமிது.

ரிஷபம்: நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும். வீடு மாறுவது, விற்பது சாதகமாக அமையும். கணவரைக் கடிந்து பேசி அவரின் கூடாப் பழக்க வழக்கங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். நாத்தனார், மச்சினர் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். சொந்தங்கள் தேடி வருவார்கள். திடீர்ப் பயணங்கள், செலவுகள், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சொந்தங்களால் புகழப்படும் நேரமிது.

மிதுனம்: கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைகூடும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களின் திறமையை மதிப்பார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். குழப்பம் நீங்கி குதூகலிக்கும் நேரமிது.

கடகம்: சவாலில் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். புதிய பொறுப்பும் நல்ல வேலையும் தேடி வரும். வீடு கட்ட அனுமதி கிட்டும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நாத்தனார், மச்சினர் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதரிக்கப்படும் நேரமிது.

சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். கணவர் உங்கள் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு வேலை கிடைக்கும். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். மாமனார், மாமியார் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். அவ்வப்போது வீண் வாக்குவாதம், செலவுகள், முதுகுவலி மற்றும் பல்வலி வந்து போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். செல்வாக்கு கூடும் நேரமிது.

கன்னி: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமெனத் துடிப்பார்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். மாமனார் உதவுவார். வயிற்று வலி, ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும். திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

துலாம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறை வேறும். கணவர் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வார். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் வி.ஐ.பி-க்கள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் நேரமிது.

விருச்சிகம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். கணவருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் நேரமிது.

தனுசு: நினைத்தது நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு என்றாலும் அவர்களால் அலைச்சல்கள் வந்து போகும். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உயரும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

மகரம்: சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னை தீரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். தோழிகள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கணவர் சில நேரங்களில் எடுத்தெறிந்து பேசுவார். உணர்ச்சிவசப்படாதீர்கள். மின் சாதனங்கள் பழுதாகும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். மாமனார், மாமியார் முணுமுணுப்பர். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். மனோபலம் அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். பிள்ளைகளுக்கு இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சொத்து சிக்கல்கள் சுமுகமாக முடியும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். உறவினர்களால் இருந்த தொந்தரவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய தொடர்பால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

மீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார். பிள்ளைகள் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவரால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முற்பகுதியில் முன்னேறும் நேரமிது.