Published:Updated:

ராசிபலன்! ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

vikaராசிபலன்tan
பிரீமியம் ஸ்டோரி
vikaராசிபலன்tan

ராசிபலன் 5 - 18 ஏப்ரல் -

ராசிபலன்! ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன் 5 - 18 ஏப்ரல் -

Published:Updated:
vikaராசிபலன்tan
பிரீமியம் ஸ்டோரி
vikaராசிபலன்tan
மேஷம்
மேஷம்

மேஷம் : ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதரர்களால் இருந்து வந்த அலைச்சல்கள், செலவீனங்கள் குறையும். அவர்களால் ஆதாயமும் உண்டு. சூரியன் சாதகமாக இல்லாததால் முன்கோபம், அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலை வலி வந்து செல்லும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் குருவின் சஞ்சாரம் சரியில்லாததால் சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சொத்துப் பிரச்னை தீரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். வியாபாரத்தில் வெளிப்படையாகப் பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டாம். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

விவேகமான முடிவுகளால் வெற்றி பெறும் நேரம் இது!

ரிஷபம்
ரிஷபம்


ரிஷபம் : 13-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். 14-ந் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் தூக்கமின்மை, டென்ஷன், இழப்பு வந்து போகும். புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 10-ல் செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகும்.

14-ம் தேதி முதல் குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்வதால் ஷேர் லாபம் தரும். சுப நிகழ்ச்சி, பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

வெற்றிகளைக் குவித்து விஸ்வரூபமெடுக்கும் காலம் இது!

மிதுனம்
மிதுனம்

மிதுனம் : சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் வழக்கு சாதகமாகும். தாய்வழியில் இருந்த மனவருத்தம் நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்குவீர்கள். சுக்கிரனும், ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும்.

9-ல் குரு நிற்பதால் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பணவரவும் திருப்திகரமாக இருக்கும் ஆனால் 14 - ம் தேதி முதல் 10 - ல் நிற்கும் குரு உங்களுக்கு அவமானம், விமர்சனம், அடிமனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவார். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்பச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

கடின உழைப்பால் தலைநிமிர்ந்து நிற்கும் நேரம் இது!

கடகம்
கடகம்

கடகம் : புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் உதவி செய்வார்கள். மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப்பெண் அமைவார். நட்பால் ஆதாயம் உண்டு. 13-ம் தேதிவரை சூரியன் 9-ல் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள், அலைச்சல் வந்து நீங்கும். 14-ந் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால் முன்கோபம் விலகும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். செவ்வாயும் சரியில்லாததால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள்.

14-ம் தேதி முதல் குரு வலுவாக அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகள் அறிவிப்பதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

பணிவால் அனைத்தையும் சாதிக்கும் காலம் இது!

சிம்மம்
சிம்மம்

சிம்மம் : சுக்கிரனும், புதனும் வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் உண்டு. என்றாலும் செலவுகள் அதிகமாகும். நீண்ட நாள்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். சூரியனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டார் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

செவ்வாயும் 6-ம் தேதி முதல் 7-ல் அமர்வதாலும் 14-ம் தேதி முதல் குரு 8-ல் மறைவதாலும் கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பாதிக்கும். முக்கிய விஷயங்களை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

நிதானமும், சிக்கனமும் தேவைப்படும் காலம் இது!

கன்னி
கன்னி

கன்னி : 6-ல் நிற்கும் குருவால் சங்கடங்கள், சச்சரவுகள் வந்து போகும். ஆனால் 14-ம் தேதி முதல் குரு வலுவாக அமர்வதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால் வாழ்க்கைத்துணைக்கு உடல்நலக்குறைவு, சொத்துத் தகராறு, சிறுசிறு நெருப்பு காயங்கள் வரக்கூடும்.

செவ்வாய் 6-ல் வலுவாக இருப்பதால் பழைய சொத்துப் பிரச்னைகள் தீரும். சுக்கிரன் 6-ம் வீட்டில் சென்று மறைவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிறுசிறு வாகன விபத்துகளும் ஏற்படக்கூடும். புதன் 8 - ல் நிற்பதால் உறவினர்கள், நண்பர்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் காலம் இது!

துலாம்
துலாம்

துலாம் : 13-ம் தேதிவரை சூரியன் 6-ல் நிற்பதால் பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால் மனைவியுடன் கருத்து மோதல்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். 5-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கும். 14-ம் தேதி முதல் குரு 6 -ல் மறைவதால் பழைய கடன் பற்றிய கவலைகள், வீண் பயம் வரக்கூடும். ராசிநாதன் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும்.

கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் வதந்திகளுக்கு உள்ளாவீர்கள்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலகட்டம் இது!

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம் : 14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 6-ல் நுழைவதால் திடீர் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். தடைப்பட்ட அரசு வேலைகள் உடனே முடியும். 14-ம் தேதி முதல் குரு 5-ல் அமர்வதால் தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புகழ்வார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதன் சாதகமாக இல்லாததால் டென்ஷன், கோபம், சிறுசிறு விபத்து வந்து நீங்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 4-ல் இருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்து நீங்கும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேற்றி வெற்றி பெற வேண்டிய நேரம் இது!

தனுசு
தனுசு

தனுசு : 13-ம் தேதிவரை சூரியன் 4-ல் இருப்பதால் புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் வீண் டென்ஷன், பிள்ளைகளால் செலவுகள் வந்து செல்லும். 3-ல் செவ்வாய் நிற்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். 14-ம் தேதி முதல் குரு 4-ல் அமர்வதால் தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான சூழலில் இருப்பதால் தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நினைத்ததை நடத்திக் காட்டும் பொன்னான காலம் இது!

மகரம்
மகரம்

மகரம் : சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் குரு 3-ல் மறைவதால் முக்கிய வேலைகள் தாமதமாகி முடியும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

வாகனப் பழுது சரியாகும். பணம் வரும். நிலம், வீடு வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீட்டீல் மகிழ்ச்சி உண்டு. செவ்வாய் 2-ல் நிற்பதால் நாவடக்கம் தேவை. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினரை உதாசினப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

பட்ட மரம் துளிர்க்கும் பசுமையான காலம் இது!

கும்பம்
கும்பம்

கும்பம் : 13-ந் தேதிவரை சூரியன் 2-ல் நிற்பதால் கண் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் ஆனால் 14-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் நுழைவதால் புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு வேலைகள் வேகமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

14-ம் தேதி முதல் குரு 2-ல் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலை புரிந்து கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவும் உண்டு. வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

கடின உழைப்பால் கரையேறும் காலம் இது!

மீனம்
மீனம்

மீனம் : சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் படிப்படியாகக் குடும்ப வருமானம் உயரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்றைப் பைசல் செய்ய முயல்வீர்கள். தொழிலுக்காகக் குறைந்த வட்டியில் புதுக் கடன் கிடைக்கும். உங்களின் தோற்றப் பொலிவு கூடும். சூரியன் சாதகமாக இல்லாததால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

14-ம் தேதி முதல் குருவும் ராசிக்குள் வந்தமர்வதால் இனந்தெரியாத கவலைகள், மனஇறுக்கம் வந்து செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

சகிப்புத் தன்மை தேவைப்படும் காலம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism