Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்

ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்

மேஷம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் தன் தவற்றை உணர்ந்து செயல்படுவார். உங்களுக்கும் விட்டுக்கொடுக்கும் மனசு வரும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேலைச்சுமை, வீண்பழி, செலவுகள் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத் தில் அதிரடி லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் உயரதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் நேரமிது.

ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். கனிவாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். பழைய சொத்தை மாற்றி புதிய வீடு வாங்குவீர்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். திருமண முயற்சிகள் கைகூடும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வீண் வாக்கு வாதம், இனந்தெரியாத கவலைகள், ஏமாற்றங்கள் வந்து விலகும். வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறும் நேரமிது.

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவர், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். உறவினர்கள், தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரை கவருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. கணவருடன் உரிமையாகப் பேசி கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வி.ஐ.பி-க்களின் உதவியால் சாதிக்கும் நேரமிது.

சிம்மம்: உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கணவர், நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளின் உத்தி யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள், உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார்கள். சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். புதிய சலுகைகளும் வாய்ப்புகளும் கிடைக்கும். அதிரடி திட்டங்களைத் தீட்டும் நேரமிது.

கன்னி: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கணவர், வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நாத்தனார், உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் இருந்த பிரச்னைகள் தீரும். தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசி லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளால் மன அமைதி குறையும். சுப காரியங்கள் கூடி வரும் நேரமிது.

துலாம்: நீண்ட நாள் கனவு நனவாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமியார், நாத்தனார் கனிவாக நடந்துகொள்வார்கள். அரசாங்க வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இட மாற்றமும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

விருச்சிகம்: எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளால் உதவிகள் உண்டு. நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவீர்கள். கணவர், உங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவார். அயல்நாட்டுப் பயணம் அமையும். சகோதரர்களால் பிரச்னை, வாகன விபத்து, வீண் செலவுகள் வந்து செல்லும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பழைய சிக்கல்கள் தீரும் நேரமிது.

தனுசு: உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். பணம் வரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கணவரின் அன்பு பெருகும். கணவர் புதிய தொழில் தொடங்குவார். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மாமியார், நாத்தனார் உங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். திடீர்ப் பயணங்கள் அமையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

மகரம்: உங்கள் கை ஓங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். கணவர், உங்களின் தியாக மனதைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க புதிய வழி யோசிப்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். சொன்ன சொல்லை நிறைவேற்றும் நேரமிது.

கும்பம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பணம் வரும் என்றாலும் பற்றாக்குறை நீடிக்கும். கணவர், உங்களுக்கு சாதகமாகப் பேசுவார். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். உறவினர்கள், தோழிகளுடன் மனஸ்தாபம் வரும். பூர்வீகச் சொத்து சிக்கலுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வாகனம் பழுதாகி சரியாகும். மாமியார், நாத்தனார் வகையில் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். வளைந்து நிமிரும் நேரமிது.

மீனம்: மனப்போராட்டங்கள் ஓயும். எதிர்பாராத பண வரவு உண்டு. தோழியிடம் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவருடன் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். நாத்தனாரின் மனம் மாறும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். பிரச்னைகளிலிருந்து விடுபடும் நேரமிது.