Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஆகஸ்ட் 2-ம் முதல் 15-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஆகஸ்ட் 2-ம் முதல் 15-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: இங்கிதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வியாபாரத்தில் வரவு உயரும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். இங்கிதமான பேச்சால் எதையும் முடிக்கும் நேரமிது.

ரிஷபம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். கணவர், உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். சொத்து பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். தோழிகள், உறவினர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

மிதுனம்: பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். அழகு, இளமை கூடும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். கணவர் உங்களை முழுமையாக நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பால் முன்னேறும் நேரமிது.

கடகம்: முயற்சிகள் வெற்றியடையும். சொத்து பிரச்னை தீரும். கணவர் பாசமழை பொழிவார். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சொந்தங்களின் சுயரூபம் தெரிய வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத் தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கடினமான வேலை களையும் எளிதாக முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் தீட்டும் நேரமிது.

சிம்மம்: சவாலான விஷயங்களைக்கூட சாதுர்யமாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். கணவர், உங்கள் மனம்கோணாமல் நடந்து கொள்வார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உறவினர், தோழிகளின் அன்புத் தொல்லை குறையும். வேலைச்சுமை, தூக்கமின்மை வந்து போகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

கன்னி: மாறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வரும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். கணவர், உங்கள் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதம் தளரும். அரசால் அனுகூலம் உண்டு. உற வினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். பள்ளி, கல்லூரிக் கால தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத் தில் உயரதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். வசதி, வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

துலாம்: ஓரளவு பணம் வரும். கணவர் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். உறவினர்கள், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும். வதந்திகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

விருச்சிகம்: சில விஷயங்களை சாதிப்பீர்கள். கணவர், உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். வாகன வசதி பெருகும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக்காட்டுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

தனுசு: தளர்ந்திருந்த நீங்கள், உற்சாகமடைவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. கணவரின் சந்தேகம் தீரும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலகிச் சென்ற உறவினர், தோழிகள் வலிய வந்து பேசுவார்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களிட மிருந்து தொழில் யுக்திகளைக் கற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். குடும்ப ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது..

மகரம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவரால் சங்கடங்கள் வந்து விலகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மறப்போம், மன்னிப்போம் என்றிருக்க வேண்டிய நேரமிது.

கும்பம்: அடிப்படை வசதிகளைப் பெருக்குவீர்கள். பணவரவு உண்டு. கணவர், உங்கள் எண்ணங் களுக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகளை உற்சாகப்படுத்த, கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர் களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்கப் புதிய வழி கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்பு களைத் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய பிரச்னைகளில் ஓன்று தீரும் நேரமிது.

மீனம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் வரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை குறை கூறுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு தேடும் நேரமிது.