தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஆகஸ்ட் 3 முதல் 16 வரை

மேஷம்: முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மகன் உங்களைப் புரிந்துகொள்வார். பள்ளிப் பருவ உறவுகளைச் சந்திப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். மச்சின ருக்கு நல்ல வேலை கிடைக்கும். சைனஸ் தொந்தரவு, சோர்வு, சலிப்பு, சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். புதிதாக ஆடியோ, வீடியோ சாதனங்கள் பழுதாகும். வியா பாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் பலத்தால் முன்னேறும் நேரமிது.

ரிஷபம்: குடும்பத்தில் நல்லது நடக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புது நிலம், வீடு வாங்க லோன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. கண்டுகொள்ளாமல் இருந்த கணவர் கனிவாகப் பேசுவார். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிள்ளை களைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். அடகிலிருந்து நகையை மீட்பீர்கள். நாத்தனார் கோபப்படுவார். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்துப் பிரச்னை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிரடி முடிவுகளால் வெற்றி பெறும் நேரமிது.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அழகு கூடும். உங்கள் ரசனைக்கேற்ற ஆபரணங்களை வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் களால் ஆதாயம் உண்டு. கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். வியா பாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றியின் விளிம்பைத் தொடும் நேரமிது.

சிம்மம்: இங்கிதமான பேச்சால் எல்லோரை யும் கவர்வீர்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்னை குறையும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். மாமியார், நாத்தனாரால் இருந்த பிரச்னைகள் தீரும். அண்டை வீட்டாருடன் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப் படுவீர்கள். வெளிச்சத்தை நோக்கி பயணிக்கும் நேரமிது.

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி தொடரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். மனக் குழப்பம் நீங்கி துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். கை கால் வலி குறையும். மாமியார் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சிலர் புதிதாக வீடு மாற யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தி யோகத்தில் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். ஒருபடி முன்னேறும் நேரமிது.

துலாம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய பிரச்னைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதை கூடும். நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கணவர் அடிக்கடி சலித்துக்கொள்வார். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.மாமியாரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிருங்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கடின உழைப்பால் சாதிக்கும் நேரமிது.

விருச்சிகம்: தொட்ட காரியம் துலங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். கணவர் உங்களின் தியாகத்தைப் பாராட்டுவார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்கு வீர்கள். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் நேரமிது.

தனுசு: சாதுரியமாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும். சிலர் புது வேலையில் சேர்வீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று வேறு இடம் வாங்குவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந் தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். திடீர் பயணம், வீண் செலவுகள், வயிற்று வலி வந்து நீங்கும். மாமியார், நாத்தனாருடன் பனிப்போர் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் குறையாது. உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். தடைகளைத் தாண்டும் நேரமிது.

மகரம்: எதிர்பார்த்த பணம் வரும். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். நட்பு வட்டம் விரியும். வீடு, வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கணவருடன் பனிப்போர், மாமியார், நாத்தனாரால் பிரச்னைகள் வந்து நீங்கும். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். உடன்பிறந்தவர்களுடன் சச்சரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தன்னம்பிக்கையால் தலைநிமிரும் நேரமிது.

கும்பம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உயரதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். கணவர் சில நேரங் களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். தாயாரின் உடல்நிலை சீராகும். சகோதர வகையில் சொத்து பிரச்னைகள் வந்து நீங்கும். கொடுத்த கடனைப் போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பக்குவமாகப் பேசி சாதிக்கும் நேரமிது.

மீனம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிகப் பெரியோர், சாதுக்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதில் அதிக தடைகள் வந்து போகும். ஓரளவு பணம் வரும். ஆனால், செலவுகள் இருக்கும். கணவர் அவ்வப்போது கோபப்பட்டுப் பேசுவார். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சகோதர சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் நேரமிது.