Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை

ராசி பலன்கள்

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மாமனார், மாமியார் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதிய பாதையில் சென்று வெற்றிபெறும் நேரமிது.

ரிஷபம்: புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். ஓரளவு பணவரவு உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். கணவர், வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டில் காட்டுவார். அவரிடம் அனுசரித்துப்போவது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப் பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு தேடும் நேரமிது.

மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் ஆகி வரும். கணவர், வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகள், உங்களைப் புரிந்துகொள்ளாமல் கோபப்படுத்துவார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கில் வழக்கறிஞரை ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வெற்றிகள் தொடங்கும் நேரமிது.

கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பயணங்களில் முக்கிய சந்திப்புகள் நிகழும். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை அதிகரிக்கும். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வரவு உயரும். அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திடீர் திருப்பங்களைத் தரும் நேரமிது.

சிம்மம்: பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய காலி இடத்தை விற்றுவிட்டுப் புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவருக்கிருந்த தயக்கத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து, புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். நேர்மறை எண்ணங்களால் வெற்றி பெறும் நேரமிது.

கன்னி: அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்கள் பட்ஜெட்டுக்குத் தகுந்த வீடு அமையும். கணவர் பாசம் காட்டுவார். இருவரும் கலந்துபேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். இழுபறி நிலை மாறி ஏற்றம் பெறும் நேரமிது.

துலாம்: சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். ஓரளவு பணவரவு உண்டு. பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு. உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

விருச்சிகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். சொத்து வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். மாமனார், மாமியாருக்கு சில ஆலோசனைகளை வழங்குவீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியாக வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சகிப்புத் தன்மையால் வெற்றி பெறும் நேரமிது.

தனுசு: எதிலும் உங்கள் கை ஓங்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்கப் பணம் கிடைக்கும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கணவர் உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமியார், நாத்தனார் உங்களை ஆதரிப்பார்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவர், உங்களைப் புகழ் பேசுவார். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகள், நீண்ட நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் ஏற்றுமதி வகைகளால் லாபம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெற்றிகள் தொடரும் நேரமிது.

கும்பம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். பள்ளி, கல்லூரிக் காலத் தோழிகளின் பாசமான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நேரமிது.

மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். கணவர் பாராமுகமாய் இருப்பார். வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நெருங்கிய உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் வேறு பேச்சு என்று இருப்பார்கள். வியாபாரத்தில் யாரையும் நம்பி, பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மௌனத்தால் சாதிக்கும் நேரமிது.