ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ராசிபலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

டிசம்பர் 6 முதல் 19 வரை

மேஷம்: எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்களை நல்லவர்களின் நட்பால் விரைந்து முடிப்பீர்கள். கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்தங்கள் தேடி வருவார்கள். முன்கோபத்தைக் குறையுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகின்றன என்று பார்த்து சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதை அலைச்சலுடன் முடித்துவிடுவீர்கள். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது.

ரிஷபம்: வெற்றிக்கான செயல்களைத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவருடன் ஆரோக்கியமான விவாதம் வரும். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வீடு கட்ட, வாகனம் வாங்க வங்கிக்கடன் உதவி கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களின் சமயோஜித புத்தியைப் பாராட்டுவார்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். அவ்வப்போது சோர்வடைவீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும் நேரமிது.

மிதுனம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மனச்சோர்வு விலகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரை அறிவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் ஓரளவு நன்மை உண்டு. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள். தொடர் முயற்சியால் சாதிக்கும் நேரமிது.

கடகம்: மனோபலம் அதிகரிக்கும். தைரியம் கூடும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவரின் சாந்தமான பேச்சில் சந்தோஷப்படுவீர்கள். உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். மாமனார், மாமியார் வகையில் மதிப்பு கூடும். பிள்ளைகளை விட்டுப்பிடிப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் இருந்தாலும், அதிகாரிகளால் உதவிகள் உண்டு. சூட்சுமங்களை அறிந்துகொள்ள வேண்டிய நேரமிது.

சிம்மம்: நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணவர் உரிமையுடன் எதையாவது பேசினால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தன்னடக்கத்தால் தடைகளைத் தாண்டும் நேரமிது.

கன்னி: சவாலில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவரும் பிள்ளைகளும் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், தோழிகளால் அனுகூலம் உண்டு. விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மாமியார் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். உள்மனதில் பயம், சின்னச் சின்ன போராட்டம் வந்து போகும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் கடைநிலை ஊழியர்களைக் கனிவாக நடத்துங்கள். எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் நேரமிது.

துலாம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த காரியங்கள் விரைந்து முடியும். கணவருக்குக் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். மாமனார், மச்சினர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள். திடீர்ப் பயணங்கள் அமையும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசாங்க காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும் நேரமிது.

விருச்சிகம்: பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள். கணவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். மாமனார், மாமியாருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சவால்களை சமாளிக்க வேண்டிய நேரமிது.

தனுசு: புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். கணவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார். கணவருக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதால் மேலதிகாரி உங்களின் துணிச்சலைப் பாராட்டுவார்.அதிரடி வளர்ச்சி காணும் நேரமிது.

மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். போட்டித் தேர்வு களில் வெற்றி பெறுவீர்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். கணவர் உங் களுக்கு முழுச் சுதந்திரம் தருவார். பிள்ளைகளின் திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். மாமியாரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

கும்பம்: தொட்ட காரியம் துலங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவரின் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நண்பர்கள், தோழிகளின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையைப் போக்கக் கூடுதலாக உழைப்பீர்கள். சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். சகோதரர்களிடையே சச்சரவு வந்து நீங்கும். மாமனார், மாமியார் வகையில் டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பதால் முன்னேறும் நேரமிது.

மீனம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவரும் பிள்ளைகளும் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். உறவினர், தோழிகளால் உதவிகள் உண்டு. மாமனார், நாத்தனார் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். மறதியால் விலையுயர்ந்த நகைகளை இழக்க நேரிடும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரும். தன் பலவீனத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது.