Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

டிசம்பர் 7 முதல் 20 வரை

ராசி பலன்கள்

மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பணப்புழக்கமும் கணிசமாக உயரும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். மகனின் அலட்சியப் போக்கு மாறும். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். மாமியார் பாசமழை பொழிவார். சகோதர வகையில் சங்கடங்கள், சொத்து சிக்கல்கள், வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். நாத்தனார் ஏதேனும் குறை கூறுவார். சுபச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வேற்று மதத்தினர் உதவுவார்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டு. விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்: நிர்வாகத் திறன் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்களால் ஆதாயம் உண்டு. பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கணவர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு, ஏற்றுக்கொள்வார். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை, காரிய தாமதம், மாமியார், நாத்தனார் வகையில் செலவுகள் வந்து போகும். சகோதரர் கோபித்துக்கொள்வார். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னை தீரும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். ஓரளவு பணம் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள். கணவர் உங்களின் தியாக மனதைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாகச் சரிசெய்வீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது விரைந்து முடியும். மாமனார், மாமியார் பிரச்னைகள் முடிவுக்கு வரும். சகோதரர் ஓடி வந்து உதவுவார். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். நட்பு வட்டம் விரியும். ஆனாலும் முன்கோபம், கணவருடன் வாக்குவாதம், வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். முற்பகுதியில் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெரிய பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிட்டும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். மகனின் கூடாப் பழக்கம் விலகும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார். ஏளனமாகவும் இழிவாகவும் பேசியவர்கள் இனி உங்களை மதிப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், எதிலும் அவசரப்பட வேண்டாம். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: தடைகளும் ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். புதுத் தெம்பு பிறக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். கணவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். மாமனார், நாத்தனார் வகையில் மனத்தாங்கல் இருந்தாலும் உறவு பாதிக்காது. உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வேலைச்சுமை இருக்கும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை எதிர்க்க வேண்டாம். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புது வீடு கட்டிக் குடி புகுவீர்கள். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். கணவர் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார். அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். எதிரும் புதிருமாக இருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள். மாமியார், நாத்தனார் மெச்சுவார்கள். மருத்துவச் செலவுகள், வாகனப் பழுது, மன உளைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். புதிய கோணத்தில் யோசித்து வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: மனவலிமை கூடும். சவாலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். பணத்தட்டுப்பாடு குறையும். வீடு, வாகன வசதி பெருகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். அவ்வப்போது வேலைச்சுமை, இனம்தெரியாத கவலைகள், உறவினர் பகை வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கணவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சொந்தங்களின் தொல்லை குறையும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். ஆனாலும் ஒருவிதப் படபடப்பு வந்து செல்லும். மூத்த சகோதர வகையில் பயனடைவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிக்கல்களில் இருந்து விடுபடும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். கணவர் உங்களை ஆழம் பார்ப்பார். பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று விட்டுப்பிடிப்பது நல்லது. வெளியூர் பயணம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பிற மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. தாழ்வுமனப்பான்மை, சலிப்பு வந்து நீங்கும். உறவினர்களிடம் இடைவெளி தேவை. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். கோபத்தை அடக்குவதால் மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். மாமனாரின் ஆதரவு உண்டு. வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. நாத்தனாரிடம் மோதல் வேண்டாம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மன உறுதியால் வெல்லும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புது வீடு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார். பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். மாமனார், மாமியாரின் மனம் மாறும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இங்கிதமான பேச்சால் உயரும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். எதற்கெடுத்தாலும் கோபப்பட்ட கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். மாமியாரிடம் இருந்த மன வருத்தங்களைச் சரிசெய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் நேரமிது.