லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்கள்

பிப்ரவரி 14 முதல் 27 வரை

மேஷம்: எதிர்பார்த்த பணம் வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கணவர் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார். உங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவார். மகளுக்கு எதிர்பார்த்தபடி வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். நல்ல வேலை கிடைக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருக்கும் உறவினர், தோழிகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிடுதல் மூலம் வெற்றி பெறும் நேரமிது.

ரிஷபம்: மதிப்பு, மரியாதை கூடும். வீடு கட்டும் வேலைகளைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். கல்யாண முயற்சி கைகூடும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மாமனார், நாத்தனார் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் கடையை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர் களால் மதிக்கப்படுவீர்கள். எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்கும் நேரமிது.

மிதுனம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மாமியார், நாத்தனார் உங்களின் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வீண் செலவு, தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையால் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்கும் நேரமிது.

கடகம்: மனப்போராட்டங்கள் ஓயும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பழைய இடத்தை நல்ல விலைக்கு விற்று, புது வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பி-க்களிடமிருந்து கிடைக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். பிள்ளைகள் அவ்வப்போது கோபப்படுவார்கள். தள்ளிப்போன கல்யாணம் நிச்சயமாகும். அரசால் அனுகூலம் உண்டு. வீண் செலவுகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரமிது.

சிம்மம்: உங்கள் கை ஓங்கும். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் ரசனைப்படி மனை அமையும். கணவர் உங்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். மகளின் பிடிவாதம் தளரும். மகனின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெற வைப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். உறவினர் வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வேலைச்சுமை, தூக்கமின்மை, மன இறுக்கம் வந்து செல்லும். அரசு விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். சாதித்துக் காட்டும் நேரமிது.

கன்னி: குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நல்ல வேலை அமையும். கணவரின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். திடீர்ப் பயணம் அமையும். உறவினர்களுடன் அளவாகப் பழகுங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நீண்ட கால சிக்கல்கள் தீரும் நேரமிது.

துலாம்: மன திடத்தால் முன்னேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டை சீர் செய்வீர்கள். கணவர் கொஞ்சம் புலம்புவார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். உறவினர் வழியில் நல்ல செய்தி வரும். தோழியிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியைக் கொடுக்க முயற்சி செய்வீர்கள். சகோதரர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அதிகாரிகளை ஆச்சர்யப்படுத்துவீர்கள். சமயோஜித புத்தியுடன் நடந்துகொள்ள வேண்டிய நேரமிது.

விருச்சிகம்: உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் ரசனைக் கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். மாமியார் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

தனுசு: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். நல்ல வேலை கிடைக்கும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். பாதி பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். மாமனார், மாமியார் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். வெற்றிக் கனியை சுவைக்கும் நேரமிது.

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவர், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகும். எதிரும், புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மாமியார் ஒத்தாசையாக இருப்பார். எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து போகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நேர்மறை எண்ணங்களால் சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

கும்பம்: புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகத் திரும்பும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவர் பாசமழை பொழிவார். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். உறவினர், தோழி வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முன்கோபம், காரிய தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றும் நேரமிது.

மீனம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவர், உங்களை பற்றி பெருமையாகப் பேசுவார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது.