ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

அக்டோபர் 18 முதல் 31-ம் தேதி வரை

மேஷம்
மேஷம்

மேஷம் : சுக்கிரன் ராசிக்கு 7-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். 12-ல் நிற்கும் குருவால் புண்ணிய யாத்திரை செல்லும் யோகம் உண்டாகும். வீடு-மனை, வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடனுதவி உண்டு. 22-ம் தேதி வரை 6-ல் புதன் நிற்பதால் வீண்பகை, உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வரக்கூடும்; 23-க்குப் பிறகு நிலைமை மாறும்.

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 7-ல் அமர்ந்ததால் சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது வியூகம் அமைப்பீர்கள்; போட்டிகளை உடைப்பீர்கள். லாபம் வரும். உத்தி யோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். புது வேலை கிடைக்கும். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

தன்னம்பிக்கை துளிர்விடும் நேரம் இது.

ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்

சூரியன் 6-ல் நிற்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. தாயாரின் உடல் நலம் பாதிக்கும். சுக்கிரன் 6-ல் நிற்பதால் தொண்டைவலி, காய்ச்சல், கண் எரிச்சல் வந்து போகும். 11-ல் குரு சாதகமாக தொடர்வதால் மனோபலம் கூடும்; பணப் பற்றாக்குறை நீங்கும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள்.

புதன் 22-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் பண வரவு, பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வென்று லாபத்தை அதிகரிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். பணிகளை விரைந்து முடிக்கவும். கலைஞர்களுக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மனநிறைவுடன் வாழும் காலம் இது.மி

மிதுனம்
மிதுனம்

மிதுனம் : சுக்கிரன் 5-ல் ஆட்சி பெற்றிருப்பதால் சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. தெய்வ அனுக்கிரகம், திடீர் யோகம், வீடு - வாகனச் சேர்க்கை உண்டு. பங்காளிப் பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், தடைப்பட்ட காரியங்களைச் சாமர்த்தியமாக முடித்துக் காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்களுக்குக் கல்யாணம் ஏற்பாடாகும்.

சூரியன் 5-ல் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் கர்ப்பிணிகள் கவனமாக இருக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பதில் சற்று அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அலைச்சல், வீண் பழி வந்து போகும்; பேச்சில் நிதானம் தேவை. கலைஞர்களுக்குச் சிறு சிறு விமர்சனங் கள் வந்துபோகும்.

சிந்தனைத்திறனால் சாதிக்கும் நேரம் இது.

கடகம்
கடகம்

கடகம் : சுக்கிரன் 4-ம் வீட்டில் ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால் வீடு, சொத்து, வாகனம் வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றி உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். குரு சாதகமாக இருப்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க வேலைகளில் தேக்க நிலை மாறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சூரியன் நீச்சமானாலும் அவர் 4-ல் அமர்ந்ததால், தடைகள் உடைபடும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங் களில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். வேலையாட்களை அரவணைத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். மேலதிகாரியிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

புதிய பாதையில் பயணிக்கும் காலம் இது.

சிம்மம்
சிம்மம்

சிம்மம் : ராசிநாதன் சூரியன் 3-ம் வீட்டில் இருப்பதால், எதிர்பார்ப்புகள் தடை யின்றி முடியும். பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக் கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளை களால் பெருமை அடைவீர்கள். ராசிக்கு 3-ல் சுக்கிரன் சாதகமாக இருப்ப தால் உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வீட்டில் நல்லது நடக்கும்.

8-ல் குரு நிற்பதால் அரசுக் காரியங்களில் அவசரம் வேண்டாம். புதன் வலுவாக இருப்பதால் பணத் தட்டுபாடு ஓரளவு சீராகும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வாடிக்கை யாளர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் தேக்கநிலை மாறும். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நேரம் இது.

கன்னி
கன்னி

கன்னி : சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்ந்ததால் ஓரளவு டென்ஷன் குறையும். ஆனால் பேச்சால் பிரச்னை வரும். யோகாதிபதி சுக்கிரன் 2-ல் ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால், எதிர்பார்த்தபடி பணம் வரும். வீட்டில் நல்லது நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குரு வலுவாக இருப்பதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளை சுமுகமாக முடிப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். ராசிநாதன் வலுவாக இருப்பதால் அலைச்சல், வீண் விரயம் மற்றும் டென்ஷன் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

வாழ்வின் சூட்சுமம் அறிந்து செயல்பட்டு வெற்றி பெறும் நேரம் இது.

துலாம்
துலாம்

துலாம் : ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே வலுவாகத் தொடர்வதால் சவால்கள், எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள். தடுமாறி- தடைப்பட்டிருந்த காரியங்களை முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். 6-ல் நிற்கும் குருவால் வேலைச் சுமை, விரக்தி, பகைமை வரக்கூடும். ராசிக்குள் சூரியன் நுழைந்திருப் பதால் முன்கோபம், மனஉளைச்சல், தலைவலி ஆகியவை வந்து போகும்.

பாக்கியாதிபதி புதன் ஒரளவு சாதகமாக இருப்பதால் பணவரவு இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கிகளை வசூலிப்பீர்கள். வேலையாட்களின் தொந்தரவு நீங்கும். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரித்தாலும் சோர்வு அடையாமல் முடித்துக் காட்டுவீர்கள். கலைத் துறையினர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள்; அவர்கள் வீண் விமர்சனத்தைத் தவிர்ப்பது நல்லது.

உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நேரம் இது.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம் : குரு பகவான் 5-ல் சாதகமாக இருப்பதால், புதுத் திட்டங்களுக்கு வழிவகுப்பீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். 12-ல் சுக்கிரன் நிற்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு. கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். சூரியன் 12-ல் அமர்ந்ததால் திடீர்ப் பயணங்கள், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முழுமையடையும். பால்ய நண்பர்களின் சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

எதிலும் ஏற்றம் நிறையும் காலம் இது.

தனுசு
தனுசு

தனுசு : சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டில் நல்லது நடக்கும். மகனுக்கு நல்ல வேலை அமையும். 4-ல் குரு இருப்பதால் தாய்க்கு உடல்நலக் குறைபாடுகள் வரக்கூடும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து நீங்கும். சிலர், வீடு மாறுவீர்கள். பாக்கியாதிபதி சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்ததால், எதிரிகளும் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சொந்த பந்தங்களின் உதவி உண்டு. பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் வருகை உண்டு. வேலையாட்களை அனுசரித்துப் போவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதியுண்டு அவ்வப்போது வேலைசுமை அதிகரிக் கும். கலைஞர்கள் வீண் விமர்சனங்களுக்கு ஆளாவார்கள்.

ஏமாற்றங்களிலிருந்து விடுபடும் காலம் இது.

மகரம்
மகரம்

மகரம் : சூரியன் 10-ல் அமர்ந்ததால் புதுப் பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் பணப் பற்றாக்குறையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய கடன் பைசலாகும். எடுத்த காரியம் வெற்றி அடையும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் கல்யாணப்பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.

3-ல் குரு நிற்பதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறையுங்கள். புதன் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் வந்துசேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபார ரீதியாக அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பணி களை விரைந்து முடிப்பீர்கள். கலைஞர்களின் சம்பளப் பாக்கி கைக்கு வந்து சேரும்; புதிய வாய்ப்புகளும் தேடி வரும்!

நெடுநாள் எண்ணங்கள் பூர்த்தியாகும் காலம் இது.

கும்பம்
கும்பம்

கும்பம் : குரு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக் கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். 9-ல் சுக்கிரன் இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். கேட்ட இடத்தில் பண உதவி உண்டு. அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தையின் உடல் நலனில் பாதிப்பு, வாழ்க்கைத் துணையுடன் பிணக்குகள் வந்து நீங்கும்.

புதன் ஓரளவு சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும்; ஆடை, ஆபரணங்கள் சேரும். பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்ல முற்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிக்கப் படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

சோதனைகளைக் கடந்து முன்னேற வேண்டிய நேரம் இது.

மீனம்
மீனம்

மீனம் : புதன் சாதகமான வீடுகளில் அமர்வதால் ஓரளவு பணவரவு உண்டு. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். ராசிக்கு 8-ல் சுக்கிரன் நிற்பதால் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். நீண்ட நாளாகத் தடைப்பட்டு வந்த காரியங்களை இப்போது முடிப்பீர்கள். ஜன்மகுரு தொடர்வதால் அவ்வப்போது விரக்தி, மன உளைச்சல் இருக்கத்தான் செய்யும்.

சூரியன் ராசிக்கு 8-ல் மறைந்ததால் கணவன்-மனைவிக்குள் பிணக்கு கள் குறையும். ஷேர் லாபம் தரும். வாழ்க்கைத்துணையின் உடல் ஓரளவு சீராகும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரப் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினருக்கு, சம்பளப் பாக்கி வந்து சேரும்.

காத்திருந்து காரியம் சாதிக்கவேண்டிய காலம் இது.