Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை.

ராசிபலன்!

செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை.

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம் : பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 17-ம் தேதி வரை ஆட்சி பெற்று நிற்பதால், பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். பிள்ளை களின் பிடிவாதம் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வீடு வாங்குவது, மாறுவது நல்ல விதத்தில் முடியும்.

மேஷம்
மேஷம்


புதன் 6-ல் மறைவதால் உறவினர், நண்பர்களுடன் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். 14 -ம் தேதி முதல் குரு 10-ல் வருவதால், கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். ராசிநாதன் செவ்வாய் 6-ல் நிற்பதால், திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

புகழும் கௌரவமும் உயரும் நேரம் இது.

ரிஷபம் : குரு பகவான் 14-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சேமிக்கும் எண்ணம் வரும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். உங்கள் சுகாதிபதி சூரியன் 4-ம் வீட்டில் ஆட்சி பெற்று 17 - ம் தேதி வரை அமர்ந்திருப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகளை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் ஒத்தாசையாக இருப்பர். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும்.

ரிஷபம்
ரிஷபம்


புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சுக்கிரன் 6-ல் மறைவதால், வீட்டில் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில், புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத் தில், சக ஊழியர்களால் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் நேரம் இது.

மிதுனம் : ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உற்சாகம் அடைவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சூரியன் வலுவான வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். விவேகமாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

மிதுனம் :
மிதுனம் :


சுக்கிரன் ஆட்சிபெற்று நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய எண்ணங்கள் மேலோங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். 14-ம் தேதி முதல் 8 - ல் குரு நிற்பதால் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை. கலைத்துறையினர், மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

சாமர்த்தியத்தால் சாதிக்கும் காலம் இது.

கடகம் : சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால், உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது நட்பு மலரும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைக் கும் முயற்சியில் இறங்குவீர்கள். மனதுக்கு இதமான செய்திகள் கேட்பீர் கள். 14 - ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 7 - ம் வீட்டில் நிற்பதால் ஆரோக்கியம் குறையாது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கடகம்
கடகம்


சுக்கிரன் 4-ல் நிற்பதால் வீடு கட்ட, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். பழைய சொத்தை விற்று விட்டு, புதிய சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில், இங்கிதமாகப் பேசி வாடிக்கை யாளர்களைக் கவர்வீர்கள். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத் தில், பலரும் வியக்கும்படி சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும்.

நினைத்ததை முடித்துக் காட்டும் நேரம் இது.

சிம்மம் : ராசிநாதன் சூரியன் 17-ம் தேதி வரை ராசிக்குள் ஆட்சி பெற்றிருப்ப தால் எதிர்த்தவர்களும் நண்பர்களாவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக் கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும்.

சிம்மம்
சிம்மம்


14-ம் தேதி முதல் குரு வலுவிழந்து காணப்படுவதால், ஒருவித மன இறுக்கம், சோம்பல், சின்னச் சின்ன தாழ்வுமனப்பான்மை, காரிய தாமதம், மனக்கசப்புகள் வந்து போகும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். புது வீடு, மனை வாங்குவீர்கள்.வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினர் வித்தியாசமாக படைப்புகளால், கவனம் ஈர்ப்பார்கள்.

புதிய பதவிகள், பாராட்டுகள் தேடி வரும் காலம் இது.

கன்னி : சூரியன் மறைந்திருப்பதால் எதிர்பாராத பயணங்கள் உண்டு. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 14 - ம் தேதி முதல் குரு சாதகமாக இருப்பதால், எங்கும் எதிலும் வெற்றி கிடைக்கும். மகனுக்கு நல்ல மணமகள் அமையும். சுக்கிரன் 2 - ல் ஆட்சி பெற்றிருப்பதால் திடீர் பணவரவு, பொருள் சேர்க்கை, வீட்டில் விசேஷம் உண்டு.

கன்னி
கன்னி


புதன் ஆட்சி பெற்றிருப்பதால் அக்கம்பக்கத்தாரின் ஆதரவு கிட்டும். உங்களின் ஆளுமைத் திறன் வளரும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டி எங்கும் பாராட்டு கிடைக்கும்.

பழைய பிரச்னைகள் யாவும் தீரும் தருணம் இது.

துலாம் : புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. பால்ய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். 4-ல் சனி நிற்பதால், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஊர் பொது விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். 17-ம் தேதி வரை லாப வீட்டில் சூரியன் நிற்பதால் மூத்த சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

துலாம்
துலாம்


4-ல் நிற்கும் குரு சற்று அலைக்கழிப்பார். நாவடக்கத்துடன் இருப்பது நல்லது. ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் தோற்றப்பொலிவு, அழகு, இளமை கூடும். உங்கள் ஆலோசனைக்கு எல்லோரும் செவி சாய்ப்பார்கள். வீட்டில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபம் வரும். வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில், பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறை கூறவே செய்வார். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

பொறுமையால் காரியம் சாதிக்கும் காலம் இது.

விருச்சிகம் : சூரியன் 17-ம் தேதி வரை 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்றிருப்பதால் தைரியம் பிறக்கும்; சாதிக்கும் நம்பிக்கை வரும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வேலை கிடைக்கும். தந்தைவழியில் மதிப்பு கூடும். புதனும் சுக்கிரனும் வலுவாக இருப்பதால் பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்


14-ம் தேதி முதல் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளியிலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு இதமாக இருக்கும். கலைத் துறையினர், புது வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பார்கள்.

விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் தருணம் இது.

தனுசு : சூரியன் சாதகமான வீடுகளில் தொடர்வதால் வேலை கிடைக்கும். உங்களுடைய ஆலோசனைகளை உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புதன் வலுவாக இருப்பதால், வேற்று மொழி பேசுபவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு
தனுசு


12-ல் சுக்கிரன் மறைந்திருந்தாலும் சொந்த வீட்டில் நிற்பதால் வீடு, மனை வாங்க லோன் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். 14-ம் தேதி முதல் 3-ல் குரு நிற்பதால், உங்களின் வேலைகள் இழுபறி யாகி முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதுச் சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

பண்பாளர்களால் பாராட்டப்படும் நேரம் இது.

மகரம் : சுக்கிரன் ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால் வேலை கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உருவாகும். தொய்வான காரியங்கள் இனி முழுமை அடையும். வீடு கட்ட லோன் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சூரியன் ஓரளவு வலுவாக இருப்பதால் திடீர்ப் பயணங்கள் உண்டு. தந்தைவழியில் சொத்துப் பிரச்னைகள் நீங்கும்.

மகரம்
மகரம்


புதன் சாதகமாக அமர்வதால் புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். குருவின் சஞ்சாரம் சஞ்சலம் தரும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

கும்பம் : உங்கள் ராசியை சூரியன் பார்த்துக் கொண்டிருப்பதால் அடி வயிற்றில் வலி, வேனல் கட்டி வந்து செல்லும். புதன் வலுவாக இருப்பதால் நண்பர்கள் ஓரளவு உதவிகரமாக இருப்பார்கள். உங்களின் சுக-பாக்கியாதிபதியான சுக்கிரன் வலுவடைந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.

கும்பம்
கும்பம்


வழக்கில் சாதகமான சூழல் ஏற்படும். 14-ம் தேதி முதல் ராசிக்கு 12 - ல் நிற்கும் குருவால் தலைச்சுற்றல், கனவுத்தொல்லை, டென்ஷன், ஏமாற்றம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள். எதிலும் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் நேரம் - காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையி னருக்கு அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.

சவால்களைச் சந்தித்து முன்னேறும் காலம் இது.

மீனம் : சூரியன் 17-ம் தேதி வரை 6-ல் நிற்கிறார். உங்களின் தகுதி உயரும்; சாதிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்கள் ஆலோச னையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய, புதுக் கடனுதவி கிடைக்கும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். நண்பர்களுடன் சுமுகமான சூழல் ஏற்படும்.

மீனம்
மீனம்


14-ம் தேதி முதல் குரு லாப வீட்டில் வலுவாகத் தொடர்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். கலைத்துறையினரின் வருமானம் உயர வழி பிறக்கும்.

செலவுகளைத் தவிர்த்து சிக்கனம் காட்ட வேண்டிய நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism