ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜனவரி 17 முதல் 30 வரை

மேஷம்: சாதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை, பொறுப்புகள் தேடி வரும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். கணவர், வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமனார், நாத்தனார் மதிப்பார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புதிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டுகள் ஆறுதல் தரும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டும் நேரமிது.

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். கணவர், உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளிடம் குவிந்துகிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். நாத்தனார், மச்சினர் உங்கள் பரந்த மனதைப் புரிந்து கொள்வார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வழக்கு சாதகமாகும். எதிலும் ஈடுபாடற்ற நிலை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வி.ஐ.பி-க்களின் ஆதரவால் வெற்றியைச் சுவைக்கும் நேரமிது.

மிதுனம்: உங்களின் நிர்வாகத்திறன் கூடும். புது வீடு, மனை வாங்குவீர்கள். வி.ஐ.பி-க்களுக்கு நெருக்கமாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவரின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்தங்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அந்தஸ்து ஒரு படி உயரும் நேரமிது.

கடகம்: வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள். பழைய நகையை மாற்றிப் புதிதாக வாங்குவீர்கள். கணவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார். பெரிதாக்க வேண்டாம். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். அரசாங்க காரியங்கள் தடைப்பட்டு முடியும். கடன் பிரச்னையைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலைதூக்கும். துணிவே துணை என்று நினைக்கும் நேரமிது.

சிம்மம்: அதிரடியாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவர், உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். நல்ல வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். மகளின் பிடிவாதம் தளரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். வாகனம் வாங்குவீர்கள். சகோதரர் சாதகமாக இருப்பார். மச்சினரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் வந்து போகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தி யோகத்தில் உயர்வு உண்டு. முயற்சியால் முன்னேறும் நேரமிது.

கன்னி: ஓரளவு நிம்மதி கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய சொத்தை மாற்றிப் புது வீடு வாங்குவீர்கள். காரண காரியமேயில்லாமல் கணவர் கோபப்படுவார். அவரின் பணிகளை இழுத்துப் போட்டுச் செய்தாலும் குறை கூறத்தான் செய்வார். மாமனார் உதவுவார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். முன்கோபத்தால் உங்களின் நற்பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும் உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். விடாமுயற்சி தேவைப்படும் நேரமிது.

துலாம்: இங்கிதமாகப் பேசி வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். அழகு, இளமை கூடும். வீடு வாங்க லோன் கிடைக்கும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பூர்வீகச் சொத்தால் வருமானம் பெருகும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நட்பு வகையில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். மாமியார், நாத்தனார் பிரச்னைகள் முடிவுக்கு வரும். சொந்தங்கள் தேடி வருவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கத் தூண்டும் நேரமிது.

விருச்சிகம்: அச்சம் விலகும். மனோபலம் அதிகரிக்கும். ஆளுபவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரசு காரியங்கள் உடனே முடியும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். சவால்களை சமாளிக்கும் நேரமிது.

தனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவர், நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். செல்வம், செல்வாக்கு கூடும் நேரமிது.

மகரம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைகளைச் சரி செய்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். கணவரின் கூடா நட்பு விலகும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். மாமனார் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். உறவினர்களால் நன்மை உண்டு. பழைய இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். தோழிகள் சிலர் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். கணவர், உங்களுக்கு ஒத்தாசையாகச் சில பணிகளைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். புதியவர்கள் நண்பர்களா வார்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். பழைய உறவினரைச் சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் திறமைசாலி என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அனுசரித்துப்போவதன் மூலம் அதிகாரம் பெறும் நேரமிது.

மீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணம் வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் தன் தவற்றை உணர்வார். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மாமனார், மாமியார் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் நேரமிது.