Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜனவரி 18 முதல் 31 வரை

ராசி பலன்கள்

ஜனவரி 18 முதல் 31 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வேலை, பொறுப்புகள் தேடி வரும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். கணவர், வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். பழைய வழக்கில் வெற்றிபெறுவீர்கள். மாமியார், நாத்தனார் மதிப்பார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டும் நேரமிது.

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். விலையுயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். நாத்தனார், மச்சினர் உங்கள் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சகோதரர் ஓடி வந்து உதவுவார். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். வி.ஐ.பி-க்களின் ஆதரவால் வெற்றியைச் சுவைக்கும் நேரமிது.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். வி.ஐ.பி-க்களுக்கு நெருக்கமாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவரின் புதிய முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அந்தஸ்து ஒருபடி உயரும் நேரமிது.

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிரபலங்களின் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதிதாக நகை வாங்குவீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். கணவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார். பெரிதாக்க வேண்டாம். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். மாமனார், மாமியாரை அனுசரித்துப் போங்கள். திடீர்ப் பயணங்கள் உண்டு. பழைய கடன் பிரச்னையைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலைதூக்கும். துணிவே துணை என்று நினைக்கும் நேரமிது.

சிம்மம்: அதிரடியாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவர் முக்கியத்துவம் தருவார். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். மகளின் பிடிவாதம் தளரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சகோதரர் சாதகமாக இருப்பார். மச்சினரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். மாமியார் மெச்சுவார். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு பெறுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நேரமிது.

கன்னி: ஓரளவு நிம்மதி கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும். அக்கம் பக்கத்தில் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். பழைய சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள். மாமனார் உதவுவார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். உறவினர்களால் நஷ்டம், புகைச்சல் வந்து போகும். காரண காரியமேயில்லாமல் கணவர் கோபப்படுவார். அவரின் பணிகளை இழுத்துப்போட்டு செய்தாலும் குறை கூறத்தான் செய்வார். மாமியார் புலம்புவார். வியாபாரத்தில் எதிர் பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கூடும். விடாமுயற்சி தேவைப்படும் நேரமிது.

துலாம்: இங்கிதமாகப் பேசி வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அழகு, இளமை கூடும். வீடு வாங்க லோன் கிடைக்கும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நட்பு வகையில் ஆதாயம் உண்டு. மாமியார், நாத்தனார் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சகோதரிக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கத் தூண்டும் நேரமிது.

விருச்சிகம்: அச்சம் விலகும். மனோபலம் அதிகரிக்கும். ஆளுபவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். நாத்தனார் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். சவால்களைச் சமாளிக்கும் நேரமிது.

தனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நாத்தனார், மச்சினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் சில சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். செல்வம், செல்வாக்கு கூடும் நேரமிது.

மகரம்: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்தை சரி செய்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வழக்கில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவரின் கூடா நட்பு விலகும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். மாமனார் உங்களுக்காகப் பரிந்துபேசுவார். உறவினர்களால் நன்மை உண்டு. தோழிகள் சிலர் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும். மாமியார் அதிருப்தி அடைவார். அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். வெறுத்துப் போகாமல் பொறுத்து நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ள நேரமிது.

கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். வீடு வாங்க, கட்ட எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் உங்களுக்கு ஒத்தாசையாகச் சில பணிகளைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். பழைய உறவினரைச் சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். நாத்தனார் அனுசரித்துப்போவார். வியாபாரத்தில் பழைய சரக்கு களைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் திறமைசாலி என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அனுசரித்துப்போவதன் மூலம் அதிகாரம் பெறும் நேரமிது.

மீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணம் வரும். நல்ல வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் தன் தவற்றை உணர்வார். மகனை, விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மாமனார், மாமியார் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism