ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜனவரி 4 முதல் 17 வரை

மேஷம்: சவால்களைச் சமாளிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மச்சினருக்கு நல்ல மணப்பெண் அமைவார். நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். சகோதரர்களால் பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.

ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவர் பாசமாக நடந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். மாமனார், மச்சினர் உதவுவார்கள். புண்ணிய தலங்கள் செல்வீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அவ்வப்போது நம்பிக்கையின்மை, ஏமாற்றம், மன இறுக்கம் வந்து போகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். பணபலம் உயரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். கணவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார். மகள் உங்களைப் புரிந்துகொள்வார். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். பழைய சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். வெற்றிக்கு வித்திடும் நேரமிது.

கடகம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். அரசால் அனுகூலம் உண்டு. கணவர் உங்களை நம்பிப் பெரிய பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். மாமனார், நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். தொண்டை வலி, காய்ச்சல், சளித் தொந்தரவு, உறவினர்களால் சங்கடங்கள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் நேரமிது.

சிம்மம்: உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்களிடம் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வழக்கில் வெற்றி உண்டு. பிள்ளைகளால் செலவுகள் இருக்கும். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எதிர்பார்த்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரியின் மனம் மாறும். அடிப்படை வசதிகள் பெருகும் நேரமிது.

கன்னி: புதிய யோசனைகள் பிறக்கும். வீடு வாங்கத் திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள். தோழிகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிட்டும். வீண் செலவு, சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து செல்லும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். நாத்தனாரின் கோபத்தைப் பொருட்படுத்த வேண்டாம். கணவருடன் கருத்து மோதல் வரும். மின்சார, மின்னணு சாதனங்கள் பழுதாகும். வியாபாரத்தில் போராடி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சிக்கல்களில் இருந்து விடுபடும் நேரமிது.

துலாம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். சகோதரி மனம்விட்டுப் பேசுவார். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வழக்கில் திருப்பம் ஏற்படும். மாமனார், மாமியார் ஒத்தாசை யாக இருப்பார்கள். கோயில் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் நேரமிது.

விருச்சிகம்: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். கணவரின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். திடீர்ப் பயணம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் நேரமிது.

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவர் முழுமையாக நேசிப்பார். அவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. தள்ளிப்போன திருமணம் முடியும். மாமியார் புகழ்வார். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்தங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். முன்கோபம், மன உளைச்சல், மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை நடத்திக்காட்டும் நேரமிது.

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மாமியார் அன்பாக நடந்துகொள்வார். கணவர் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப்போவது நல்லது. வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வழக்கில் அவசரம் வேண்டாம். சகோதரர்கள், நாத்தனார் வகையில் பிரச்னைகள் வரும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் நேரமிது.

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகத் திரும்பும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமெனத் துடிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. நாத்தனார், மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். திடீர்ப் பயணம், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் லாபம் குறையாது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் கூடும் நேரமிது.

மீனம்: நினைத்தது நிறைவேறும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். புதுப் பதவிகள் தேடி வரும். அரசியலில் செல்வாக்கு கூடும். தண்ணீரும் தாமரை இலையுமாய் இருந்த கணவர் விரும்பி வந்து பேசுவார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். சொத்து வாங்குவீர்கள். மாமியார், நாத்தனாருக்குக் கொடுத்து உதவுவீர்கள். உறவினர்கள், தோழிகளுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். எனினும், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரமிது.