Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜூலை 19-ம் முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூலை 19-ம் முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: உற்சாகமாகப் பல வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கணவர் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். வீட்டில் கூடுதல் அறைகளைக் கட்டுவீர்கள். நல்ல வேலை அமையும். மாமனார், நாத்தனார் அன்பாக நடந்துகொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதக மாக முடியும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சி களைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். தன் பலம், பலவீனம் உணரும் நேரமிது.

ரிஷபம்: தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகளால் உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வாகனம் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மாமனார், மாமியார் உங்களின் சமயோஜித புத்தியைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதித்துக் காட்டும் நேரமிது.

மிதுனம்: எதிர்ப்புகள் இருந்தாலும் சளைக்காமல் போராடுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவர் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து செல்லும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

கடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர், தோழிகளைச் சந்தித்து மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கணவருடன் ஆரோக்கியமான விவாதங்கள் அடிக்கடி வரும். மாமியார், நாத்தனார் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னை விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவரின் அன்பு பெருகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும் நேரமிது.

கன்னி: தொட்ட காரியம் துலங்கும். பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். கணவரின் புது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சி செய்வார்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாளு வீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். வசதி, வாய்ப்புகள் கூடும் நேரமிது.

துலாம்: உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கணவருக்கு நம்பிக்கை தருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரம் தழைக்கும். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். பழைய பிரச்னைகள் தீரும் நேரமிது.

விருச்சிகம்: தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவரை தைரியப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்நீச்சலில் கரையேறும் நேரமிது.

தனுசு: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும். கணவருக்கு சில முக்கிய அறிவுரை தருவீர்கள். திடீர் பயணம் செல்வீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் போக்கைக் கண்காணிப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

மகரம்: உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். கணவர் நீங்கள் சங்கடப்படும்படி நடந்துகொள்வார். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வந்தாலும் எதிர்பாராதவிதமாக செலவினங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அரசாங்க விஷயங்கள் இழுபறியாகும். வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலை யாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் பயனடைவார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நேரமிது.

கும்பம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். மாமியார், நாத்தனார் மனம்விட்டுப் பேசுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். செல்வம், செல்வாக்கு கூடும் நேரமிது.

மீனம்: ஓரளவு நிம்மதி கிட்டும். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவருடன் மோதல் வேண்டாம். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். சொத்து வாங்கும் முன் தாய்ப்பத்திரத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள், ஏமாற்றங்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மன அமைதியைத் தேடும் நேரமிது.