Published:Updated:

ராசி பலன்கள்

 ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை

மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். கற்பனைவளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கல்யாணப் பேச்சு கூடி வரும். பணவரவு அதிகரிக்கும். கணவர் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். மாமனார், மாமியார் உங்களைப் பாராட்டுவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். உறவினர், தோழிகள் உங்கள் உதவியை நாடுவார்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். நினைத்ததை முடிக்கும் நேரமிது.

ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். கணவர் உங்களைத் தாமதமாகப் புரிந்துகொள்வார். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பள்ளி, கல்லூரிக் காலத் தோழியைச் சந்திப்பீர்கள். மாமியார் ஒத்தாசையாக இருப்பார். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். கூடாப் பழக்கமுள்ள நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிரடியாகச் செயல்பட்டு வெற்றி பெறும் நேரமிது.

மிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்துவீர்கள். உங்களிடம் பழகும் தோழிகள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வேற்றுமதத்தவரால் ஆதாயம் உண்டு. மச்சினருக்குப் புது வேலை கிடைக்கும். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். பதற்றப்பட்டுப் பேச வேண்டாம். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்து முன்னேறும் நேரமிது.

கடகம்: நினைத்ததை முடிப்பீர்கள். புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். விலகிச் சென்ற சொந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நேரமிது.

சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய இடத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். கணவருக்கிருந்த பிரச்னைகள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். உறவினர், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சகோதரருக்கு வேலை கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடை வீர்கள். பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் நேரமிது.

கன்னி: எதிலும் வெற்றி கிட்டும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவரின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி மாற்றுவீர்கள். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். மாமியார் மதிப்பார். நாத்தனார் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார். சொத்து வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மூளை பலத்தால் முன்னேறும் நேரமிது.

துலாம்: பதவிகள் தேடி வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. கணவர் ஒத்தாசையாகப் பணிகளைச் செய்வார். அரசாங்க அதிகாரி களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் தவற்றை உணர்வார்கள். உறவினர்கள் எதிர் பார்ப்புகளுடன் பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நட்பு வட்டம் விரியும். அரசியலில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகும். கடன் பணத்தை வசூலிப்பீர்கள். கணவரின் அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உத்தியோகம், திருமணம் நல்ல விதத்தில் முடியும். புதிதாக அழகு சாதனப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். தந்தையின் உடல்நலம் பாதிக்கலாம். அரசாங்க விஷயங்கள் தள்ளிப்போகும். மாமனார், மாமியார் மெச்சு வார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

தனுசு: உங்களின் நிர்வாக, ஆளுமைத் திறன்கள் அதிகரிக்கும். பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். கணவரின் கனவுகள் நனவாகும். புது வேலை கிடைக்கும். கட்டட வேலைகளைத் தொடங்கு வீர்கள். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்கு வீர்கள். கடன் பிரச்னையைச் சமாளிப்பீர்கள். நீண்ட நாள் களாக எதிர்பார்த்த உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமனார், நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

மகரம்: அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடை வீர்கள். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். கணவர் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவார். அனுசரித்துப் போங்கள். நாத்தனார் வகையில் டென்ஷன் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். உறவினர்களிடம் செல்வாக்கு கூடும் நேரமிது.

கும்பம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஆளுபவர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவர் அலுத்துக்கொள்வார். உறவினர், தோழிகளின் வருகையால் உற்சாகம் பொங்கும். தாழ்வுமனப்பான்மை, முன்கோபம் வந்து செல்லும். சொத்துப் பிரச்னையில் அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். மாமியார், நாத்தனார் வகையில் சங்கடங்கள் வரும். உணவில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். புதுச் சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். பழைய சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.

மீனம்: யதார்த்தமான பேச்சால் கவர்வீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மாமியார் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மின்சாரப் பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். மாமனாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியா பாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தி யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.