Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

ஜூலை 5 முதல் 18-ம் தேதி வரை

ராசிபலன்கள்

ஜூலை 5 முதல் 18-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

மேஷம்: தைரியம் பிறக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் வரும். கணவர், வீட்டு வேலை களைப் பகிர்ந்துகொள்வார். உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். உங்கள் ரசனைக் கேற்ற வீடு அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் நேரமிது.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இங்கிதமாகப் பேசி இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளை, கவனமாகக் கையாளுங்கள். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் பாசம் குறையாது. பிள்ளைகள் ஆறுதல் தருவார்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பணிவால் எதையும் சாதிக்கும் நேரமிது.

மிதுனம்: முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். கணவரின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி அவரை சரி செய்வீர்கள். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் பிரச்னை தந்தவர்கள் தங்கள் தவற்றை உணர்வார்கள். தலை நிமிர்ந்து நடக்கும் நேரமிது.

கடகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். மாமனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வார்கள். திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வீண் பழி வந்து விலகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்தவற்றில் சில நிறைவேறும் நேரமிது.

சிம்மம்: பிரச்னைகளின் வேகம் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் நேரமிது.

கன்னி: புதிய முயற்சிகள் வெற்றியடையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கணவர், நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சலுகைகள் அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மதியூகத்தால் வெற்றி பெறும் நேரமிது.

துலாம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். திட சிந்தனையால் வெல்லும் நேரமிது.

விருச்சிகம்: ஓரளவு பணம் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பேச்சிலிருந்த கடுகடுப்பு குறையும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் நேரமிது.

தனுசு: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவர் புதிய தொழில் தொடங்குவார். பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். மாமியார், நாத்தனார் உங்களின் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். விஸ்வரூபமெடுக்கும் நேரமிது.

மகரம்: சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். தோழிகள் உதவுவார்கள். கணவருடன் இருந்த மோதல் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுங்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் நேரமிது.

கும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பழைய நகையை மாற்றி நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர்கள், தோழிகளுடன் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் வரும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். காலநேரம் கனிந்து வரும் நேரமிது.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் லாபம் தரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வாகன வசதி பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். கணவர், உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். வெற்றியின் விளிம்பைத் தொடும் நேரமிது.