Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்கள்

ஜூலை 6 முதல் 19 வரை

மேஷம்: வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். கணவர், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வார். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. தைரியம் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். மாமனார் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப் பீர்கள். இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் நேரமிது.

ரிஷபம்: எதிர்பார்த்தவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். இங்கிதமாகப் பேசி இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக் குறையை எளிதாகச் சமாளிப்பீர்கள். பழைய சம்பவங்களை நினைத்துப் பெருமூச்சு விடுவீர்கள். நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என வருந்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளை கவன மாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத் தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பணிவால் சாதிக்கும் நேரமிது.

மிதுனம்: புது முடிவுகள் எடுப்பீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். தோற்றப்பொலிவு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை சரி செய்வீர்கள். பிள்ளை களின் கூடாப் பழக்கம் விலகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நாத்தனார், மச்சினர் உங்கள் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். பார்வைக் கோளாறு சரியாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி உங்கள் உழைப்பைப் புரிந்து கொள்வார். தலை நிமிர்ந்து நடக்கும் நேரமிது.

கடகம்: எப்படியும் வெற்றிபெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். மாமனார், மாமியார் அன்பாக நடந்து கொள்வார்கள். சகோதரர்கள் மனம்விட்டுப் பேசுவார்கள். திடீர்ச் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வீண் பழி வந்து விலகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர் பார்த்தவற்றில் சில நிறைவேறும் நேரமிது.

சிம்மம்: பிரச்னைகளின் வேகம் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். இறைபணிகளில் ஈடுபடுவீர்கள். மாமனார், மாமியார் மெச்சுவார்கள். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்ட தொடங்குவீர்கள். நாத்தனாருடன் கருத்து மோதல் வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்குப் பாராட்டு கிடைக் கும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் நேரமிது.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்பாராத பணவரவு உண்டு. நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மாமனார், நாத்தனாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சலுகைகள் அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மதியூகத்தால் வெற்றிபெறும் நேரமிது.

துலாம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறி வீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமியார், நாத்தனாரின் தொந்தரவுகள் குறையும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். திட சிந்தனையால் வெல்லும் நேரமிது.

விருச்சிகம்: ஓரளவு பணம் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பேச்சில் இருந்த கடுகடுப்பு குறையும். சகோதரிக்குத் திருமணம் முடியும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத் தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங் களைத் திணிக்க வேண்டாம் எதிர்ப்புகள், சலிப்பு, சோர்வு வந்து போகும். மாமனார், மாமியார் குறைபட்டுக் கொள்வார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் நேரமிது.

தனுசு: திட்டமிட்ட காரியங்கள் வெற்றி யடையும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவர் புதிய தொழில் தொடங்குவார். பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். மாமியார், நாத்தனாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். விஸ்வரூபமெடுக்கும் நேரமிது.

மகரம்: சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்தை விற்று சில பிரச்னை களிலிருந்து வெளிவருவீர்கள். மாமனாரின் ஆதரவு கிட்டும். கணவருடன் மோதல் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். நாத்தனாரின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுங்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் நேரமிது.

கும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். புது வாகனம் வாங்குவீர்கள். கணவர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பழைய நகையை மாற்றி புதிய நகைகளை வாங்குவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர்கள், தோழிகளுடன் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் வரும். வேலையாட்கள், பங்கு தாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கால நேரம் கனிந்து வரும் நேரமிது.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் லாபம் தரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வாகனம் வசதி பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பள்ளிப்பருவத் தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். பழைய கடனை நினைத்து பயம் வேண்டாம். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். வெற்றியின் விளிம்பைத் தொடும் நேரமிது.