Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை

ராசி பலன்கள்

ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கு சாதகமாகும். கணவர், உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். சாதுர்யமான பேச்சால் சிலவற்றை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நாத்தனாரின் ஆதரவு கிடைக்கும். மாமியாருடன் இருந்த மோதல் நீங்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். சமயோஜித புத்தி தேவைப்படும் நேரமிது.

மிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். ஆளுபவர்களின் நட்பு கிட்டும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பணவரவு அதிகரிக்கும். நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது.

கடகம்: எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். திடீர்ப் பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவர், உங்களின் புதிய முயற்சிகளைப் பாராட்டுவார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்குத் திட்டமிடுவீர்கள். வாகன வசதி பெருகும். இங்கிதமான பேச்சால் மாமியார், நாத்தனாரைக் கவர்வீர்கள். வேலைச்சுமை, தூக்கமின்மை, அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். செல்வம், செல்வாக்கு கூடும் நேரமிது.

சிம்மம்: புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மாமியார் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்ப்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். தடைகள் உடைபடும் நேரமிது.

கன்னி: எதையும் எளிதில் சாதிப்பீர்கள். யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கணவர், நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளின் திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். மாமியார் கனிவாக நடந்துகொள்வார். அரசால் அனுகூலம் உண்டு. முன்கோபம், சகோதர வகையில் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். தடைகளைத் தாண்டி தன்னம்பிக்கையுடன் செயல்படும் நேரமிது.

துலாம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கணவர் கடுகடுத்தாலும் நீங்கள் கனிவாகப் பேசுவது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். வீண் டென்ஷன், திடீர்ப் பயணங்கள், தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத் தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். விடாமுயற்சி தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவர், உங்களை நம்பிப் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்தும் நேரமிது.

தனுசு: புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவர் அவ்வப்போது உங்களைக் குறை கூறுவார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மாமியார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். மாமனார், மாமியார் வகையில் செலவுகள் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் சக ஊழியர்கள் வெறுப்பாகப் பேசினாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. நிதானித்துச் செயல்படுவதால் நினைத்ததை சாதிக்கும் நேரமிது.

மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவரின் அலட்சியம், கோபம் மாறும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாமியார், நாத்தனார் மனம்விட்டுப் பேசுவார்கள். வியாபாரம் செழிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். மன இறுக்கம் நீங்கி உற்சாகம் பொங்கும் நேரமிது.

கும்பம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கணவர் அடிக்கடி புலம்புவார். பிள்ளைகளின் போக்கைக் கண்காணிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க, கொஞ்சம் போராட வேண்டி வரும். பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.

மீனம்: பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். கணவருக்குக் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்கப் புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism