லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்கள்

ஜூன் 22 முதல் ஜூலை 05 வரை

மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கு சாதகமாகும். கணவர் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வார். பிள்ளை களால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். சமையலறை சாதனங்களைப் புதுப்பிப் பீர்கள். மாமியார், நாத்தனார் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். எதிர்பார்த்த அளவுக்குப் பணம் வரா விட்டாலும் ஓரளவு வரும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நாத்தனாரின் ஆதரவு கிடைக்கும். அவ்வப்போது கண்வலி, முதுகுவலி வந்து விலகும். மாமியாருடன் இருந்த மோதல் நீங்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர் களால் டென்ஷன் அதிகரிக்கும். சமயோஜித புத்தி தேவைப் படும் நேரமிது.

மிதுனம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும். ஆளுபவர் களின் நட்பு கிட்டும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். மகள் உங்களைப் புரிந்துகொள்வாள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வேற்றுமொழிக் காரர்களால் ஆதாயம் உண்டு. மாமியார், நாத்தனார் வகையில் மனவருத்தம் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது

கடகம்: புது முயற்சியில் வெற்றி கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிரபலங் களின் நட்பு கிட்டும். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நாத்தனாருக்கு நல்ல வாழ்க்கை அமையும். கடன் பிரச்னை தீரும். அலைச்சல், தூக்கமின்மை விலகும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரமிது.

சிம்மம்: நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல வேலை அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். நாத்தனார், மச்சினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். பள்ளி, கல்லூரிக் கால தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய பேசுவார்கள். வியாபார ரகசியங்கள் கசிவதை அறிந்து அதற்கேற்பச் செயல்படுவீர்கள். உத்தி யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

கன்னி: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்ட கடன் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவர் தன் தவற்றை உணர்வார். விட்டுக்கொடுக்கும் மனது வரும். செல்வாக்கு கூடும். பணம் வரும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குறைப்பட்டுக்கொண்டிருந்த மாமனார், மாமியாரின் மனது மாறும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த அதிகாரி இடம் மாறுவார். தள்ளிப்போன காரியங்கள் விரைந்து முடியும் நேரமிது.

துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவர் முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். எதிலும் தெளிவு பிறக்கும். மாமனார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். பழைய தோழிகளின் சந்திப்பு நிகழும். திருமணம் கூடி வரும். மாமியார் ஏதேனும் குறை கூறுவார். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் நேரமிது.

விருச்சிகம்: தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிட்டும். பணவரவு திருப்தி தரும். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல வரன் அமையும். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பாகப் பிரிவினை சுமுகமாகும். சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கலைப்பொருள்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. மாமனார் ஒத்துழைப்பார். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நேரமிது.

தனுசு: தன்னம்பிக்கை பெருகும். கௌரவப் பதவியில் அமர்வீர்கள். பணவரவு உண்டு. கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். மகளுக்குத் திருமணம் கூடிவரும். உறவினர் கள், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்து போகும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கடன் பிரச்னை கள் தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாமனார், மாமியார் புகழும்படி சிலவற்றைச் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய மனையை விற்பீர்கள். சகோதரர் பாசமழை பொழிவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங் களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும் நேரமிது.

மகரம்: இழுபறியான வேலைகள் முழுமையடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை குறையாது. பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். அடிக்கடி சண்டைபோட்ட நாத்தனாரின் மனது மாறும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்து தொழிலை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய சிக்கல்கள் தீரும் நேரமிது.

கும்பம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். கணவரின் வேலைச் சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். மாமனார் உதவுவார். மாமியார் ஏதேனும் குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். பள்ளிப் பருவத் தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தந்தை வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் பொறாமையால் பேசுவார்கள். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பங்குதாரருடன் கருத்து மோதல் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் செல்வாக்கும் உயரும். காத்திருந்து காய் நகர்த்தும் நேரமிது.

மீனம்: தட்டுத்தடுமாறிய காரியங்கள் கைகூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவர் உங்களின் பெருந் தன்மையைப் புரிந்துகொள்வார். பணப் புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திடீர்ப் பயணங்களால் கையிருப்பு கரையும். மாமியார் நாத்தனாருடன் கருத்துமோதல் வெடிக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. அக்கம் பக்கத்தினரின் தொல்லை விலகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமாவதால் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். தைரியமாக முடிவுகள் எடுக்கும் நேரமிது.