Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜூன் 7 முதல் 20 வரை

ராசி பலன்கள்

ஜூன் 7 முதல் 20 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வாகன வசதி பெருகும். கணவர், உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். மாமனார், மாமியார் புதிய பொறுப்புகளைத் தருவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம்விட்டுப் பேசுவார்கள். சாதிப்பவர்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் நேரமிது.

ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். ஓரளவு பணம் வரும். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கணவர் மற்றும் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் தாமதமாகும். தோழிகளைச் சந்தித்து ஆறுதல் அடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். தன் பலம், பலவீனத்தை உணரும் நேரமிது.

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கம்பீரமாகப் பேசுவீர்கள். கணவருடன் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விடாமுயற்சியால் இலக்கை எட்டும் நேரமிது.

கடகம்: எதிலும் வெற்றி கிட்டும். பணபலம் உயரும். பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். திடீர்ப் பயணங்கள், செலவுகள் வந்து போகும். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்ட காரியங்கள் துலங்கும் நேரமிது.

சிம்மம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவருக்குப் புதிய ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். உறவினரின் அன்புத் தொல்லை குறையும். மாமனார், மாமியாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மூளை பலத்தால் முன்னேறும் நேரமிது.

கன்னி: உங்களின் புகழ், கௌரவம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார்கள். புதிய வேலை கிடைக்கும். தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் முடியும். வியாபாரத்தில் வரவு உயரும். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் உண்டு. வெற்றிக்கு வித்திடும் நேரமிது.

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும் மீண்டு வெளியே வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். வளைந்து கொடுத்து முன்னேறும் நேரமிது.

விருச்சிகம்: உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். திடீர்ப் பணவரவு உண்டு. கணவர் உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார். பிள்ளைகளின் உத்தியோகம், திருமண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். சகோதரர் சாதகமாக இருப்பார். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் கௌரவ பொறுப்புகள் தேடி வரும். அதிரடி முன்னேற்றங்களைச் சந்திக்கும் நேரமிது.

தனுசு: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் வகையில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். திடீர்ப் பயணம் அமையும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

மகரம்: திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். கண்டுகொள்ளாமல் இருந்த கணவர் கனிவாகப் பேசுவார். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். மாமனார், மாமியார் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

கும்பம்: சவால்களை சமாளிப்பீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கணவர் உங்களிடம் அன்பாக நடந்துகொள்வார். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலை தூக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறும் நேரமிது.

மீனம்: எதையும் தைரியமாக முடிப்பீர்கள். சில முக்கிய முடிவுகளைத் திடமாக எடுப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். கணவர் உங்களுக்கு ஒத்தாசையாகச் சில பணிகளைச் செய்வார். வேற்று மதம், மொழியினர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஏமாற்றம், வீண் விரயம், சிறு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism