Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மே 10 முதல் 23 வரை

ராசி பலன்கள்

மே 10 முதல் 23 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். கணவர் உங்களின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வார். பணபலம் உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மாமியார் புதிய பொறுப்புகளைத் தருவார். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். சாதித்துக் காட்டும் நேரமிது.

ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். திடீர்ப் பயணம் சென்று வருவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும் என்றாலும் மாமனார், மாமியாருடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நேரமிது.

மிதுனம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். முன்கோபம் குறையும். பழுதாகியிருந்த வாகனம் சரியாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். மச்சினர், நாத்தனாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களைப் பாராட்டுவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மாமனார், மாமியாருக்கு உங்கள்மீது நம்பிக்கை அதிகரிக்கும். அவ்வப்போது செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். வசதி, வாய்ப்பு கூடும் நேரமிது.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவர் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசாங்க அதிகாரிகள் நட்பாவார்கள். மதிப்பு, மரியாதை கூடும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வந்து சேரும் என்றாலும் எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். விட்டதைப் பிடிக்கும் நேரமிது.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கேற்ப பொறுப்பாக இருப்பார்கள். கணவரின் போக்கு மாறும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களைப் புரிந்துகொள்வார்கள். திட்டமிட்ட காரியங்கள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்த்த அதிகாரி இடம் மாறுவார். புது முயற்சிகளில் வெற்றி பெறும் நேரமிது.

துலாம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு பெறுவீர்கள். ஒதுங்கி நின்ற உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளின் பிடிவாதத்தை அன்பால் மாற்றுங்கள். அலுப்பு, சலிப்பு நீங்கும். ஓரளவு பணம் வரும். கோபம் குறையும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம்: நினைத்தது நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவர் அவ்வப்போது கோபப்படுவார். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். நாத்தனாரை அனுசரித்துப் போங்கள். எதிர்பாராத பயணம் உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் முடங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

தனுசு: எதிர்ப்புகள் நீங்கும். கணவருடன் இருந்த சச்சரவு விலகும். பழுதான வாகனத்தைச் சரி செய்வீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள் பிறக்கும். பூர்வீகச் சொத்தில் ஒரு பகுதியை விற்பீர்கள். வியாபாரத்தில் பழைய கடனை பைசல் செய்வதில் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட பழி விலகும். அவசரப்பட்டு வேலை மாற வேண்டாம். சமயோஜித புத்தி தேவைப்படும் நேரமிது.

மகரம்: தடைப்பட்ட வேலைகள் உடனடியாக முடியும். குழப்பம் விலகும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. கணவரும் மாமியாரும் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை தீரும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நேரமிது.

கும்பம்: உங்கள் மீது சுமத்தப்பட்ட பழி, வதந்திகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பி-க் களிடமிருந்து கிடைக்கும். பணபலம் உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். கணவரின் பாராமுகம் மாறும். உயர் பதவிகள் தேடி வரும். பிள்ளைகளின் ஓவியம், இசைத் திறமையை வளர்ப்பீர்கள். மாமியார், நாத்தனாரால் இருந்த தொந்தரவுகள் குறையும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். வியாபாரத்தில் புதிய தொடர்பால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். இழந்ததைப் பெறும் நேரமிது.

மீனம்: குடும்பத்தில் சச்சரவு நீங்கும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பழைய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். வீடு கட்ட தொடங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். வருங்காலத்தைப் பற்றிய திட்டங்கள் உருவாகும். புதியவர்களை நம்பி, பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வரவு உயரும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள், உத்தியோகத்தில் அதிக அளவு உழைத்தும் அதிகாரியிடம் நல்ல பெயர் இருக்காது. அனுசரித்துச் செயல்படுவது நல்லது. தன் பலம், பலவீனத்தை உணரும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism