Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மே 11 முதல் 24 வரை

ராசி பலன்கள்

மே 11 முதல் 24 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். கணவர் உங்களின் வேலைச் சுமையைப் பகிர்ந்துகொள்வார். அவருடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களின் பண பலம் உயரும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மகனின் உயர்கல்வி குறித்து யோசிப்பீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். மாமியார் புது பொறுப்புகளைத் தருவார். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். சாதித்துக்காட்டும் நேரமிது.

ரிஷபம்: சுறுசுறுப்பாவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். முன்கோபம், காரிய தாமதம், அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். மாமனார், மாமியாருடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நேரமிது.

மிதுனம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். சோம்பல், அசதி நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். தூக்கமின்மை விலகும் படபடப்பு, முன்கோபம் குறையும். வாகனப்பழுது சரியாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். மச்சினர், நாத்தனாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.

கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்து வீர்கள். கணவர் உங்களைப் பாராட்டுவார். பணப் புழக்கம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்குவீர்கள். நவீன ரக சாதனங்கள் வாங்கு வீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மாமனார், மாமியாருக்கு உங்கள்மீது நம்பிக்கை வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வசதி, வாய்ப்பு கூடும் நேரமிது.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் உண்டு. கணவர் கொஞ்சம் புலம்புவார். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசாங்க அதிகாரிகள் நட்பாவார்கள். மாமியாரின் கோபம் தீரும். மதிப்பு, மரியாதை கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார். விலையுயர்ந்த ஆபரணங்கள் வந்து சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். விட்டதைப்பிடிக்கும் நேரமிது.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். கணவரின் சந்தேக புத்தி மாறும். சிறு சிறு விபத்துகளிலிருந்து மீள்வார். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் உங்களைப் புரிந்துகொள்வார்கள். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்த்த அதிகாரி இடம் மாறுவார். புது முயற்சிகளில் வெற்றிபெறும் நேரமிது.

துலாம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். ஒதுங்கி நின்ற உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளின் பிடிவாதத்தை அன்பால் மாற்றுங்கள். அலுப்பு, சலிப்பு நீங்கும். ஓரளவு பணம் வரும். முன்கோபம் குறையும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம்: நினைத்தது நிறைவேறும். பண வரவு உண்டு. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நல்ல வேலை அமையும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப்பெண் அமைவார். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மாமியாரின் ஆதரவு உண்டு. கணவர் அவ்வப்போது கோபப்படுவார். அவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அவசரப்பட்டு வேறு வேலை மாற வேண்டாம். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

தனுசு: கணவருடன் இருந்த சச்சரவு நீங்கும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீட்டில் அடிக்கடி குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் அடைப்பு வந்துபோகும். அவ்வப்போது எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும், தலைச்சுற்றல், முதுகு வலி வந்து நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் பழைய கடனை பைசல் செய்வதில் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட பழி விலகும். சமயோஜித புத்தி தேவைப்படும் நேரமிது.

மகரம்: குழப்பம் விலகும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. மாமியார் உதவுவார். சொத்துப் பிரச்னை தீரும். கணவருக்கு அலைச்சலும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவரின் மன இறுக்கத்தை கனிவான பேச்சால் மாற்றுவீர்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நேரமிது.

கும்பம்: உங்கள் மீது சுமத்தப்பட்ட பழி, வதந்திகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பி-களிடமிருந்து கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பணபலம் உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். கணவரின் பாராமுகம் மாறும். பாசமாகப் பேசுவார். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் திறமையை வளர்ப்பீர்கள். மாமியார், நாத்தனாரால் இருந்த தொந்தரவுகள் குறையும். வியா பாரத்தில் புதிய தொடர்பால் ஆதாயம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமையை மேலதிகாரி பாராட்டுவார். இழந்ததைப் பெறும் நேரமிது.

மீனம்: குடும்பத்தில் நிலவிய சச்சரவு நீங்கும். அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல்நலனின் அக்கறை தேவை. எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்யுங்கள். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் ஓடி ஓடி உழைத்தும் உயரதிகாரியிடம் நல்ல பெயர் இருக்காது. தன் பலம் பலவீனத்தை உணரும் நேரமிது.