Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மே 24 முதல் ஜூன் 6 வரை

ராசி பலன்கள்

மே 24 முதல் ஜூன் 6 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களுக்காகப் பரிந்துபேசுவார். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பழைய சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி சாதனை படைப்பீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரம் இது.

ரிஷபம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். அயல்நாடு செல்ல அனுமதி கிடைக்கும். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். திடீர்ப் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். மாமியார், நாத்தனாருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரம் இது.

மிதுனம்: தன்னம்பிக்கை பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. நாடாளுபவர்கள் உதவுவார்கள். கணவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கணவரிடம் கனிவாகப் பேசி அவரின் கூடாப்பழக்க வழக்கங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். நட்பு வட்டம் விரியும். சகோதரர் பாசமழை பொழிவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

சிம்மம்: புதிய முயற்சிகள் நிறைவேறும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். கணவர், வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு. முக்கியப் பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் தேங்கிக்கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத்தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தலைமைக்கு உதவுவீர்கள். பழைய கடன் தீரும் நேரமிது.

கன்னி: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். கணவர் அவ்வப்போது உங்களைக் குறை கூறுவார். நீங்களும் சும்மா இருக்க மாட்டீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். உறவினர்களின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் மௌனம் தேவைப்படும் நேரமிது.

துலாம்: தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். வழக்கில் திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். பதவி உயரும். வி.ஐ.பிக்களால் இனம் காணப்படும் நேரமிது.

விருச்சிகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். கணவர் அவ்வப்போது கடிந்துகொள்வார். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. மனக்குழப்பம், தாழ்வுமனப்பான்மை, உறவினர்களுடன் விரிசல்கள் வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீடு வாங்குவது, கட்டுவதற்கு உதவி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். மனம் விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களை எதிர்த்தவர்கள் இடம் மாறுவார்கள். சக ஊழியர்களால் மதிப்பு உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும் நேரமிது.

மகரம்: சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. கணவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உறவினர்களால் உதவிகள் கிட்டும். அலைச்சல், தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்தை விற்றுச் சில பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். மாமியாரை அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

கும்பம்: தடைப்பட்ட வேலைகள் நிறைவடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். கணவரிடம் பக்குவமாகப் பேசி அவரின் திறமையை வெளிக்கொணர்வீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகத் திரும்பும். தோழியிடம் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள்.உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நேரமிது.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அரசியல்வாதிகளின் அறிமுகம் கிட்டும். வராது என்றிருந்த பணம் வரும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாமனார், கொழுந்தனார் உதவுவார்கள். சொந்தங்களால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். சில நேரத்தில் குடும்பத்தில் சலசலப்பு, வீண் டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறு களை சுட்டிக்காட்டுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism