பிரீமியம் ஸ்டோரி

மேஷம்: புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். கணவர் உங்களுக்காகப் பரிந்துபேசுவார். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பழைய சொந்தங்கள் தேடி வரு வார்கள். மாமனார், நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். சகோதரர் உதவுவார். பழைய கடன் தீர வழி பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

ரிஷபம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர் உங்கள் ஆலோ சனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். திடீர்ப் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். மாமியார், நாத்தனாருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். வியாபாரத்தைப் பெருக்கத் திட்டமிடுவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

மிதுனம்: தன்னம்பிக்கை பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கணவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். முன்கோபம், வீண் செலவு, ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நிலம், வீடு வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். வாகன வசதி பெருகும். கணவரைக் கடிந்து பேசி அவரின் கூடாப் பழக்க வழக்கங்களை மாற்றுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். பழைய சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

சிம்மம்: புது முயற்சிகள் நிறைவேறும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். மனத்தில் தெளிவு பிறக்கும். கணவர் வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கொழுந்தனாருக்குத் திருமணம் நிச்சயமாகும். உயர் பதவி தேடி வரும். அரசியலில் செல்வாக்கு கூடும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். நாத்தனாரின் கோபம் விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத்தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தலைமைக்கு உதவுவீர்கள்.பழைய கடன் தீரும் நேரமிது.

கன்னி: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். மன உறுதி கிடைக்கும். தோல்வி பயம் நீங்கும். மாமனார் உதவுவார். டென்ஷன், செலவுகள் வந்து போகும். கணவர் அவ்வப்போது உங்களைக் குறை கூறுவார். நீங்களும் சும்மா இருக்க மாட்டீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள் ளுங்கள். சில நேரங்களில் மௌனம் தேவைப்படும் நேரமிது.

துலாம்: தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். வழக்கில் திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்குத் தக்க பதிலடி தருவீர்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், சிறு விபத்துகள் வரக்கூடும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். பதவி உயரும். பலரால் பாராட்டப்படும் நேரமிது.

விருச்சிகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. பணப்பற்றாக்குறை நீடிக்கும். மனக்குழப்பம், தாழ்வுமனப்பான்மை, உறவினர்களுடன் விரிசல்கள், யதார்த்தமாக நீங்கள் பேசுவதை மாமியார், நாத்தனார் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீடு வாங்குவது, கட்டுவதற்கு லோன் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்த்த அதிகாரி இடம் மாறுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும் நேரமிது.

மகரம்: சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. கணவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உறவினர்களால் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். மாமியாரை அனுசரித்துப்போங்கள். பிற்பகுதியில் சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

கும்பம்: தடைப்பட்ட வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். கணவரிடம் பக்குவமாகப் பேசி அவரின் திறமையை வெளிக் கொணர்வீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகத் திரும்பும். தோழியிடம் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். மாமியார், நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடனைத் தீர்க்க புதிய வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றிபெறும் நேரமிது.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வராது என்றிருந்த பணம் வரும். புது வீடு, மனை வாங்குவீர்கள். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாமனார், நாத்தனார் உதவுவார்கள். சொந்தங்களால் அனுகூலம் உண்டு. அரசால் ஆதாயம் கிட்டும். வழக்கு சாதகமாகும். அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, வீண் டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக்காட்டுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு