
மே 9 முதல் 22 வரை
மேஷம்: நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். விலையுயர்ந்த வாகனம், ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்களிடம் சில நேரங்களில் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். அனுசரித்துப்போவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தாலும் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரம் இது.
ரிஷபம்: செலவுகள், திடீர்ப் பயணங்கள், தூக்கமின்மை, வீண் டென்ஷன் வந்து போகும். பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவரின் குற்றம், குறைகளை அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி விஷயத்தில் அலைச்சல் இருக்கும். பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்களின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால், சிறு சிறு அவமானங்கள் வந்து நீங்கும். ஆனால், அதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். மௌனத்தால் முன்னேறும் நேரம் இது.
மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவருடன் இருந்த மோதல்கள் விலகும். பிள்ளைகள் பாசமழை பொழிவார்கள். உங்கள் ரசனைக்கேற்ப சொந்த வீடு அமையும். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். செல்வம், செல்வாக்கு கூடும் நேரம் இது.
கடகம்: செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். கணவர், உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடிவரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். உறவினர், தோழிகள் உங்கள் உதவியை நாடுவார்கள். மாமியார், நாத்தனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதிலும் முதல் மரியாதை கிடைக்கும் நேரம் இது.
சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கணவரின் கூடாப்பழக்கம் விலகும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளின் பிடிவாத குணம் மாறும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்து வார்கள். சகோதரர் ஓடி வந்து உதவுவார். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முக்கிய சந்திப்புகளால் முன்னேறும் நேரம் இது.
கன்னி: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் அடிக்கடி கோபப்படுவார். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினர்கள், தோழிகளுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வழக்கில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் நேரம் இது.
துலாம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். அதிரடி திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். கணவர், உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார். மகளுக்கு, மாப்பிள்ளை தேடுவதில் தீவிரம் காட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். திடீர்ப் பயணம் செல்வீர்கள். விலகி நின்ற சொந்தங்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் நேரம் இது.
விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் இருந்த பயம் விலகும். பூர்வீகச் சொத்தால் வருமானம் பெருகும். கணவர், உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கொழுந்தனாருக்குத் திருமணம் நிச்சயமாகும். நாத்தனார் வகையில் வீண் பழி வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.
தனுசு: தொட்ட காரியம் துலங்கும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். கணவர், உங்கள் வார்த்தைகளைக் கேட்டுக்கொள்வார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். மாமனார், நாத்தனார் மெச்சுவார்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். முன்கோபம் தணியும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். புயல் அடங்கி தென்றல் திரும்பும் நேரம் இது.
மகரம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஆடை, ஆபரணம் சேரும். மாமியார், நாத்தனார், உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். வழக்கில் வெற்றி உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது ஏஜென்சி கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். இழந்ததை மீட்கும் நேரம் இது.
கும்பம்: விமர்சனங்களைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். கணவர், உங்கள் செயல்களுக்கு ஒத்தாசையாக இருப்பார். பிள்ளைகளுக்கு எதிர் பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நாத்தனார், உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். கடின முயற்சியால் காரியத்தை முடிக்கும் நேரம் இது.
மீனம்: பழைய சிக்கல்கள் தீரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் நேரம் இது.