பிரீமியம் ஸ்டோரி

மேஷம்: ஆளுமைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் உங்களுக்கு சாதகமாகப் பேசுவார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புது வாகனம் வாங்குவீர்கள். மச்சினர், நாத்தனார் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் அமையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அவ்வப்போது சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தைரியத்தால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவரின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாமனார், மச்சினர் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரியின் போக்கு மாறும். பழைய பிரச்னை தீரும் நேரமிது.

மிதுனம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவர் உங்கள் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மாமனார், மாமியார் அன்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஒருபடி முன்னேறும் நேரமிது.

கடகம்: நினைத்தது நிறைவேறும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகளால் மரியாதை கூடும். வழக்கு சாதகமாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் செலவுகள் கூடும். ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மாமியார் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். மனக் குழப்பம், வீண் அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டும்படியாக நடந்துகொள்வீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

சிம்மம்: சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு கிட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவருடன் உரிமையாகப் பேசி அவரை மாற்றுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். சகோதரிக்குத் திருமணம் முடியும். மாமியார் உங்களைப் புரிந்துகொள்வார். ரியல் எஸ்டேட் லாபம் தரும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தொடர் முயற்சியால் சாதிக்கும் நேரமிது.

கன்னி: மதிப்பு, மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். நாத்தனாரின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அனுபவம் உள்ள நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். சகிப்புத் தன்மையால் வெற்றி பெறும் நேரமிது.

துலாம்: முகப்பொலிவு கூடும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கண்டுகொள்ளாமல் இருந்த கணவர் கனிவாகப் பேசுவார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். மாமியார், நாத்தனாரால் இருந்த பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பழைய வழக்குகளால் மன அமைதி குறையும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

விருச்சிகம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த கசப்புணர்வு நீங்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர்களை சந்திப்பீர்கள். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். அவ்வப்போது காரிய தாமதம் வந்து நீங்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வி.ஐ.பி-க்களால் பாராட்டப்படும் நேரமிது.

தனுசு: பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மாமனார் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். கணவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார். பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். வளைந்து நிமிரும் நேரமிது.

மகரம்: புது முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். வீண் கவலைகள், சகோதரப் பகை வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சத்தமின்றி சாதிக்கும் நேரமிது.

கும்பம்: குழம்பிக்கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கணவரின் கூடா நட்பு விலகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் நேரமிது.

மீனம்: குடும்ப வருமானம் உயரும். வீடு, வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். மாமனாரின் கோபம் குறையும். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கணவர் கொஞ்சம் புலம்புவார். அவருக்கு சரிசமமாக நீங்களும் அலுத்துக்கொள்ளாதீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். புரட்சிகரமான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு