லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

அக்டோபர் 11 முதல் 24 வரை

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். கணவருடன் இருந்த பனிப்போர் நீங்கும். பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள். மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். அரசாங்க வேலைகள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ரிஷபம்: புதிய முயற்சிகள் பலிதமாகும். தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவருடன் கருத்து மோதல் வரும். எதிர்வாதம் வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மாமியார் உங்களுக்குப் பரிந்து பேசுவார். உறவினர்கள், தோழிகளுடன் நெருக்கம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். தன் பலவீனத்தை உணரும் நேரமிது.

மிதுனம்: செல்வம், செல்வாக்கு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். கணவர், உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

கடகம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் எளிதில் முடிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உறுதுணையாக இருப்பார். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மனக் கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் நெருக்கமாவார்கள். நட்பு வட்டம் விரியும். நல்ல வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வேலையாட்கள் தேடி வருவார். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அந்தஸ்து ஒருபடி உயரும் நேரமிது.

சிம்மம்: நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதம் தளரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரம் சூடுபிடிக்கும். வரவு உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிகாரிகள் உங்களை நம்புவார்கள். பிற்பகுதியில் சாதித்துக் காட்டும் நேரமிது.

கன்னி: சவால்களில் வெற்றி கிட்டும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்களை முழுமையாக நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை விரைவடையும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். தோழிகளைச் சந்திந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மனம்விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வரும். விட்டுக்கொடுப்பதால் வெற்றி பெறும் நேரமிது.

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். உறவினர்கள் மனம்விட்டுப் பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நாத்தனார் உங்களைப் புரிந்துகொள்வார். உடல் உஷ்ணத்தால் சிறு சிறு தொல்லைகள் வந்து விலகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் நேரமிது.

விருச்சிகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவரின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். கடன் பிரச்னைகள் ஒருபக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். விமர்சனம், வீண் டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்ப்புகளை எளிதாக சமாளிக்கும் நேரமிது.

தனுசு: எதிலும் வெற்றி கிட்டும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். கணவர், உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். மாமனார் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். நினைத்ததை நிறைவேற்றும் நேரமிது.

மகரம்: இதமாகப் பேசி சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்தங்கள் மதிப்பார்கள். மாமியார் உதவுவார். பதவிகள் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சகிப்புத்தன்மையால் முன்னேறும் நேரமிது.

கும்பம்: நிர்வாகத் திறன் கூடும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். உறவினர்களின் தொந்தரவு குறையும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். தடைகள் நீங்கும் நேரமிது.

மீனம்: ஓரளவு நிம்மதி உண்டு. வாழ்வின் சூட்சுமத்தை உணருவீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். கணவர், பிள்ளைகளிடம் சந்தேகம் வேண்டாம். வேற்றுமாநிலத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர், தோழிகள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மாமியார், நாத்தனாருடன் உரசல்போக்கு வந்து நீங்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.