Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

அக்டோபர் 12 முதல் 25 வரை

ராசி பலன்கள்

அக்டோபர் 12 முதல் 25 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். கணவருடன் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றிப் புது வீடு வாங்குவீர்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார். பிற்பகுதியில் உடல்நலம் சற்று பாதிக்கும். அரசு வேலைகள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் பலிதமாகும். தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். சொத்தை விற்றுப் பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மாமனார் உங்களுக்குப் பரிந்துபேசுவார். தடைகளும் போராட்டங்களும் இருந்தாலும் தளரமாட்டீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. மாமியார் மதிப்பார். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பலவீனத்தை உணருவீர்கள்.

மிதுனம்: ஆளுமைத்திறன் அதிகமாகும். உங்கள் ஆலோசனைகளைக் குடும்பத்தில் ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்யச் சில வழிகள் தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. கணவரின் ஆரோக்கியம் பாதிக்கும். சிறுசிறு விபத்துகளும் வரும். குடிநீர்க் குழாய் அடைப்பு போன்ற வீட்டுப் பராமரிப்புச் செலவுகளும் வந்துபோகும். பிள்ளைகளைக் கொஞ்சம் கனிவாக நடத்துங்கள். அவர்களின் பிடிவாதம் அதிகமாகும். மாமனார், மாமியார் குறைபட்டுக்கொள்வார்கள். அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

கடகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். உறவினர்களின் கல்யாண வேலைகளை முன்னின்று கவனிப்பீர்கள். கணவர் உங்களை நம்பிப் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நாத்தனார் அனுசரித்துப்போவார். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். அவ்வப்போது உடல் அசதி ஏற்பட்டு நீங்கும். மாமியாரிடம் வளைந்துகொடுத்துப் போங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் உயரதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வசதி வாய்ப்புகள் கூடும்.

சிம்மம்: நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதம் தளரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நாத்தனாரின் வளைகாப்பை எடுத்து நடத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சுபச் செலவுகள் வந்துகொண்டேயிருக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். வரவு உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிகாரிகள் உங்களை நம்புவார்கள். பிற்பகுதியில் சாதித்துக் காட்டுவீர்கள்.

கன்னி: சவால்களில் வெற்றி கிட்டும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். கணவர் உங்களை முழுமையாக நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளின் அடிமனத்திலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை விரைவடையும். நாத்தனார் உதவுவார். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். மாமியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். கல்லூரிக் காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வரும். விட்டுக்கொடுப்பதால் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வர். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். சகோதரி மனம்விட்டுப் பேசுவார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நாத்தனார் உங்களைப் புரிந்துகொள்வார். முன்கோபம், மனஉளைச்சல், மாதவிடாய்க் கோளாறு, உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி வந்து போகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரமிது.

விருச்சிகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவரின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். கடன் பிரச்னைகள் ஒருபக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசித் தீர்ப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மறைமுக விமர்சனம், வீண் டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள்.

தனுசு: எதிலும் வெற்றி கிட்டும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். கணவர் உங்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். மாமனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவர். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். எப்போதோ நடந்ததைச் சொல்லி இப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். நினைத்ததை நிறைவேற்றும் நேரமிது.

மகரம்: இதமாகப் பேசி சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்தங்கள் மதிப்பார்கள். மாமியார் உதவுவார். பதவிகள் தேடி வரும். நல்ல வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மச்சினரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சகிப்புத்தன்மையால் முன்னேறுவீர்கள்.

கும்பம்: நிர்வாகத் திறன் கூடும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். சொந்தங்களின் பலவீனங்களையும் உங்களிடம் விவரிப்பார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்று மதத்தவர்களால் திருப்பம் உண்டாகும். மாமியாருக்கு உங்கள்மீது நம்பிக்கை வரும். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தடைகள் நீங்கும் நேரமிது.

மீனம்: சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தை விற்று புது வீடு கட்டுவீர்கள். கணவர் உங்களை நேசிப்பார். அவ்வப்போது வீண் டென்ஷன், கர்ப்பப்பை வலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். நாத்தனார் கோபப்படுவார். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்பு மரியாதை கூடும் வேளையிது.