தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மாமனார் உங்களுக்குப் பரிந்துபேசுவார். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள். கணவரை சந்தேகப்படாதீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் தள்ளிப்போகும். பயணங்களுக்குத் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமிது.

ரிஷபம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அயல்நாட்டிலிருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். கணவர், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். பூர்வீகச் சொத்து பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இடைவெளி தேவை. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது.

மிதுனம்: உலக நடப்புக்கேற்ப உங்களையும் கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் பிரச்னைகள், அலைச்சல் இருக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி சில நேரத்தில் கடிந்து பேசினாலும் பல நேரங்களில் கனிவாக நடந்துகொள்வார். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

கடகம்: அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நிச்சயமாகும். கணவருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மதிப்பு, மரியாதை கூடும் நேரமிது.

சிம்மம்: எதையும் எளிதாக சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், தோழிகள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். நாத்தனார், மச்சினரின் ஆதரவு பெருகும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

கன்னி: யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். சாதனையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு கட்ட வங்கிக்கடன் உதவி கிட்டும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள். சொந்தங்கள் தேடி வருவார்கள். மாமனார், மாமியார் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வாக்குவாதங்கள் வந்து செல்லும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது இடத்துக் குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரமிது.

துலாம்: பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் ஆதரவாக இருப்பார். உறவினர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மாமியார் அரவணைத்துப் போனாலும் நாத்தனார் தொந்தரவு தருவார். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ரகசியங்களை ஊழியர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உணவுக் கட்டுப்பாடு தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம்: சவாலான காரியங்களை சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ரசனைக்கேற்ப புது வீட்டுக்கு மாறுவீர்கள். கணவர், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மச்சினரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மனக்குழப்பம், வீண் டென்ஷன், அலைச்சல் வந்து செல்லும். வியாபாரத்தில் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சம்பளம் உயரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நேரமிது.

தனுசு: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர், உங்களுக்கு ஒத்தாசையாகச் செயல் படுவார். பிள்ளைகளுக்கிருந்த கூடாப்பழக்கம் விலகும். அரசாங்க காரியங்கள் சுலபமாக முடியும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். சகோதரர்கள் மனம்விட்டுப் பேசுவார்கள். சொத்துத் தகராறு தீரும். சிலர் உங்களைத் தவறான போக்குக்குத் தூண்டுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆளுமைத்திறன் கூடும் நேரமிது.

மகரம்: நிர்வாகத் திறன் கூடும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பதவிகளும் வாய்ப்புகளும் தேடி வரும். கணவர் உங்களை முழுமையாக நம்புவார். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர், தோழிகளால் அனுகூலம் உண்டு. வெளிநாடு, வேறு மாநிலத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி பாராட்டுவார். வசதி, வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

கும்பம்: புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவரின் நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். மாமியார் ஒத்தாசையாக இருப்பார். மச்சினர் மதிப்பார். அரசாங்க விஷயங்கள் தள்ளிப் போகும். வழக்கை நிதானமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தொட்டதெல்லாம் துலங்கும் நேரமிது.

மீனம்: பழைய பிரச்னைகள் தீரும். தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய வீட்டை இடித்துக்கட்டுவீர்கள். கணவர் சுறுசுறுப்பாகச் செயல்படுவார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தை எடுத்து நடத்துவீர்கள். மாமியார் உங்களைப் புரிந்துகொள்வார். வழக்கு சாதகமாகத் திரும்பும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். நாத்தனார் உங்களை விமர்சிப்பார். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய வழக்குகளால் மன அமைதி குறையும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நேரமிது.