Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

செப்டம்பர் 13 முதல் 26 வரை

ராசிபலன்கள்

செப்டம்பர் 13 முதல் 26 வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய வீட்டில் குடி புகுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். கணவர் சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் திணறுவார். உங்கள் அனுபவ அறிவால் அவரை வழி நடத்துவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: எதையும் சாமர்த்தியமாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவர் வழி சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். மாமனார், மாமியாரின் மனம் மாறும். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளின் போக்கைக் கண்காணிப்பது நல்லது. அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தன் கையே தனக்கு உதவி என்பதை உணரும் நேரமிது.

மிதுனம்: சமயோஜித புத்தியால் கடினமான பணிகளை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய வேலைக்கு முயன்றவர்களுக்கு நல்ல பதில் வரும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவரின் குழப்பத்தைப் போக்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள். நாத்தனார் ஆதரவாக இருப்பார். பிள்ளைகளைக் கண்டிக்கிறேன் என்ற பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நேரமிது.

கடகம்: எதிர்பார்ப்புகள் எளிதாக முடிவடையும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்ட அரசாங்க அனுமதி கிட்டும். கணவரின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். உங்களைப் பற்றி விமர்சிப்பவர்களை உதாசீனப்படுத்துங்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பள்ளி, கல்லூரிக் காலத் தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைப் புகழ்வார்கள். புதிய பொறுப்பும், வாய்ப்புகளும் கதவைத் தட்டும் நேரமிது.

சிம்மம்: நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய பிரச்னைகளுக்குப் புதிய வழியில் யோசிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவருக்கு இருந்த தாழ்வுமனப்பான்மையைச் சரி செய்வீர்கள். பிள்ளைகளை உற்சாகப்படுத்த, கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் சுமுகமாக முடியும். மாமியார் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனதை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். இங்கிதமான பேச்சால் உயரும் நேரமிது.

கன்னி: மன தைரியம் கூடும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் அடிமனதிலிருந்த பயத்தைப் போக்குவீர்கள். கணவர் சில பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பார். உறவினர், தோழிகள் வீடு தேடி வருவார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் நேரமிது.

துலாம்: உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவரின் உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் குணத்தை மாற்றுவீர்கள். நெருக்கடி நேரத்திலும் நிதானமாகச் செயல்படும் மனப்பக்குவத்தைத் தருவீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். உறவினர் களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். தலை நிமிர்ந்து நடக்கும் நேரமிது.

விருச்சிகம்: எதிலும் வெற்றி அடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. கணவரின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டத் திட்டமிடுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய வழி பிறக்கும். சொத்து வாங்குவதில் வில்லங்கம் வரக்கூடும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நேரமிது.

தனுசு: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வேடிக்கையாகப் பேசி விபரீதங்களில் சிக்கிக்கொள்ளும் கணவரின் போக்கை மாற்றுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்குப் புது வேலை அமையும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்று, புது வீடு வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நேரமிது.

மகரம்: தொட்டது துலங்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வீடு வாங்க, கட்ட வங்கிக்கடன் உதவி கிடைக்கும். கணவரின் முன்கோபத்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து அவரை நெறிப்படுத்துவீர்கள். பிள்ளைகளைக் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். உறவினர்கள், உங்கள் உதவியை நாடுவார்கள். வீண் செலவுகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். ஈகை குணத்தால் எல்லோராலும் பாராட்டப்படும் நேரமிது.

கும்பம்: நீண்ட காலக் கனவு நனவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். கணவரின் ஆடம்பரச் செலவுகளை குறைக்க வழி செய்வீர்கள். அவரின் கலகலப்பாகப் பேசும் சுபாவத்தை ஆதரிப்பீர்கள். பிள்ளைகள், உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வார்கள். மாமனார், மாமியார் சில பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். தோழிகளின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஒருபடி முன்னேறும் நேரமிது.

மீனம்: சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். தொலைநோக்குச் சிந்தனை இருந்தால் போதாது அதைச் செயல்படுத்தத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உங்கள் கணவருக்கு உணர்த்துவீர்கள். மாமியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். வழக்கை நிதானமாகக் கையாளுங்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். கோபத்தை அடக்குவதால் மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.