Published:Updated:

ராசி பலன்கள்

 ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

செப்டம்பர் 14 முதல் 27 வரை

ராசி பலன்கள்

செப்டம்பர் 14 முதல் 27 வரை

Published:Updated:
 ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: பிரச்னைகளைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் ஆளுமைத் திறன் கூடும். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி அவரைத் தேற்றுவீர்கள். சொந்த வீடு அமையும். சகோதரிக்குத் திருமணம் முடியும். நாத்தனாருடன் இருந்த மோதல் விலகும். தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். கைமாற்றாகக் கொடுத்த பணத்தைக் கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். ஷேர் லாபம் தரும். பிள்ளைகளால் அவ்வப்போது மன அழுத்தம் வந்து விலகும். வியாபாரத்தில் புது ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது நட்பால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: தடைகள், ஏமாற்றங்கள் விலகும். புதுத் தெம்பு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வர வேண்டிய பூர்வீகச் சொத்து வந்து சேரும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஓரளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். புது முயற்சிகள் வெற்றியடையும். மாமியார் அதிருப்தி அடைந்தாலும், நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். சலிப்பு, சோர்வு, மாதவிடாய்க் கோளாறு, சகோதர வகையில் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நேரமிது.

மிதுனம்: தொட்ட காரியம் துலங்கும். எதிர்பார்த்த பணம் வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். கணவர் அளவுக்கதிகமாக நேசிப்பார். அவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. மகனின் கூடா நட்பு விலகும். மாமனார், மாமியார் மெச்சும்படி சிலவற்றைச் செய்வீர்கள். மூத்த அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் அமையும். நல்ல வேலை அமையும். தள்ளிப்போன வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களின் சகிப்புத் தன்மையைப் புரிந்துகொள்வார். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன வசதி பெருகும். சகோதரிக்கு நல்ல வேலை கிடைக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். மாமனார், மாமியார் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். வெற்றிக்கனியைச் சுவைக்கும் நேரமிது.

சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுப் புது இடம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார். கணவர் சில நேரங்களில் முணுமுணுப்பார். நெருங்கியவர்களாக இருந்தாலும் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது.

கன்னி: எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வீடு மாறுவீர்கள். வி.ஐ.பி-க்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கணவருடன் ஆரோக்கியமான விவாதம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வீண் அலைச்சல், தலைவலி, ஹார்மோன் கோளாறு வந்து நீங்கும். மாமியார், நாத்தனார் வகையில் பனிப்போர் உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும். இங்கிதமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

துலாம்: திட்டவட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மாமியார் உதவுவார். நாத்தனார் மனசு மாறும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.

விருச்சிகம்: ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை அடைவீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பிப் புதுப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தோழி வீட்டு கல்யாணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் உணவு, துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வியக்கும்படி நடந்துகொள்வீர்கள். தொட்டது துலங்கும் நேரமிது.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர் உதவுவார். கணவருக்கிருந்த வயிற்று வலி, தலைவலி குணமாகும். அன்பாகப் பேசுவார். வீடு கட்ட, வாங்க லோன் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். மாமியார் சில நேரங்களில் குறை கூறினாலும் மனசுக்குள் உங்களைப் புகழ்வார். மச்சினருக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நேரமிது.

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கணவரின் முன்கோபத்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து அவரை நெறிப்படுத்துவீர்கள். ஆபரணம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். நல்ல வாழ்க்கைத் துணை அமைவார். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மோதல் வந்து நீங்கும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கடின உழைப்பால் முன்னேறும் நேரமிது.

கும்பம்: வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மாமியார், நாத்தனார் அவ்வப்போது குறைபட்டுக்கொள்வர். வீடு, மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். கணவருடன் சின்னச் சின்ன வாக்குவாதம், சந்தேகம் இருக்கத்தான் செய்யும். பிள்ளைகளிடம் மறைந்து கிடந்த திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப் படுத்துவீர்கள். பயணங்களால் சேமிப்பில் ஒரு பகுதி குறையும். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்துச் செய்வது நல்லது. பங்குதாரர்களுடன் வளைந்துகொடுத்து போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். பகுத்தறிவால் பலனடையும் நேரமிது.

மீனம்: சோர்வு நீங்கி உற்சாகம் பொங்கும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கனத்த மனசு லேசாகும். வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. கணவருக்கு நெஞ்சுவலி, வயிற்றுவலி வந்து நீங்கும். அவருடன் வீணாகச் சண்டையிடாதீர்கள். மாமியார், நாத்தனார் வகையில் பொறுமை காப்பது நல்லது. கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். பட்டறிவால் பயனடையும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism