ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை

மேஷம்: வேலைகளை உற்சாகமாக விரைந்து முடிப்பீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தை மீட்கும் பணியில் இறங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவர் அடிக்கடி கோபப்படுவார். கொஞ்சம் அனுசரித்துப்போவது நல்லது. பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். மாமனார் மெச்சுவார். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். தொடர் முயற்சியால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கணவர் ஏதேனும் குற்றம், குறை கூறுவார். பிள்ளைகள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் தொந்தரவுகள் இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் மூளைக்கு வேலை தர வேண்டிய நேரமிது.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசாங்க வேலைகள் வேகமாக முடியும். தாய்வழி சொத்து கைக்கு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் பாசம் குறையாது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வழக்கில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். இங்கிதமான பேச்சால் மாமியாரைக் கவருவீர்கள். அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். வியா பாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தி யோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம்விட்டுப் பேசுவார்கள். பலரால் பாராட்டப்படும் நேரமிது.

கடகம்: உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். கணவர், நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தந்து அசத்துவார். பிள்ளைகளின் கூடாநட்பு விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தி யோகத்தில் உயர்பதவியில் அமர்வீர்கள். மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் நேரமிது.

சிம்மம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவர் இணக்கமாகப் பேசுவார். அவரின் வருமானம் உயரும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமெனத் துடிப்பார்கள். சகோதரர் ஓடி வந்து உதவுவார். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். நாத்தனார் பாசமழை பொழிவார். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பி-க்கள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் நேரமிது.

கன்னி: திடீர் பணவரவு உண்டு. கணவர், உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் பலம், பலவீனத்தைக் கண்டறிவீர்கள். மாமனார், மாமியாரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சகோதர வகையில் இருந்த மோதல்கள் விலகும். சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வழக்கை நிதானமாகக் கையாளுங்கள். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரமிது.

துலாம்: விடாமுயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். கணவர், வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னை களிலிருந்து வெளிவருவீர்கள். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். ஆனால், நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். மாமனார், மச்சினர் வகையில் செலவுகள் வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். தட்டுத் தடுமாறி முன்னேறும் நேரமிது.

விருச்சிகம்: தைரியம், புகழ், செல்வாக்கு கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவர், உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் அக்கறை செலுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மாமனார், நாத்தனார் உங்களின் தியாக மனத்தைப் புரிந்துகொள்வார்கள். உறவினர், தோழிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.

தனுசு: ஷேர் மூலம் பணம் வரும். பிரபலமாக இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். கணவர் பாசமாகப் பேசுவார். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாமியார், நாத்தனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவர். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் திருப்பம் உண்டாகும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். மதிப்பு, மரியாதை கூடும் நேரமிது.

மகரம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். கணவரின் அடி மனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மாமனார், மாமியார் பிரச்னைகள் முடிவுக்கு வரும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. பழைய உறவினர்கள், தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் நேரமிது.

கும்பம்: மனப்போராட்டங்கள் நீங்கும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். கணவர், தன் தவறுகளை உணர்வார். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். முன்கோபம், வேலைச்சுமை, காரியத் தாமதம் வந்துசெல்லும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். புது அணுகுமுறையால் முன்னேறும் நேரமிது.

மீனம்: புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. கணவரும் பிள்ளைகளும் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக்கூட மாமியார், நாத்தனார் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு மாறும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி யிடம் நற்பெயர் எடுக்கக் கொஞ்சம் போராட வேண்டி வரும். பொறுமை காக்க வேண்டிய நேரமிது.