Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை

ராசி பலன்கள்

செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கணவர் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகள் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரும். மாமனார், மாமியார் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். விலையுயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பிரச்னை தந்த பங்குதாரர் விலகுவார். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும் நேரமிது.

ரிஷபம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொத்தை விற்றுப் பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். நாத்தனார் வகையில் ஆதாயம் உண்டு. கணவருக்கு அலைச்சல் இருக்கும். கோபப்படுவார். வருமானம் ஓரளவு உயரும் ஆனால் வாகன, வீடு பராமரிப்புச் செலவுகளால் பற்றாக்குறை ஏற்படும். மாமியாருடன் விவாதம் வரும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் நேரமிது.

மிதுனம்: நிர்வாகத் திறமை கூடும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகளின் திருமண முயற்சி கூடிவரும். வீடு கட்ட கடன் கிடைக்கும். உறவினர்கள், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மாமியார் மனம்விட்டுப் பேசுவார். பழைய மனையை விற்று, புதிய இடம் வாங்குவீர்கள். அவ்வப்போது தாயாருடன் கருத்து மோதல்கள், காரியத் தாமதம் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் நேரமிது.

கடகம்: புது திட்டங்கள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசு வேலைகள் வேகமாக முடியும். கணவர், வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். பிள்ளைகளின் கூடாப்பழக்கம் விலகும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நேரமிது.

சிம்மம்: சாதுர்யமாகப் பேசி சில வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். பிள்ளைகளின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். நெடுநாள்களுக்குப் பிறகு பழைய சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். உடன்பிறந்தோர் உதவுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மாமியார், நாத்தனார் வகையில் வீண் டென்ஷன், செலவுகள் வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

கன்னி: நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கேட்ட இடத்தில் பண உதவியுண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவரின் புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பாதிப்பணம் தந்து முடிக்காமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். டி.வி, ஃபிரிட்ஜ், விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அவ்வப்போது உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்தவற்றில் சில நிறைவேறும் நேரமிது.

துலாம்: புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். விலையுயர்ந்த பொருள்கள் வீடு வந்து சேரும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். அவ்வப்போது முன்கோபம், பயம், கண் எரிச்சல் வந்து நீங்கும். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். மாமனார் குறைபட்டுக்கொள்வார். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம்: திடீர் யோகம் உண்டாகும். கம்பீரமான பேச்சால் காரியங்களைக் கச்சிதமாக முடிப்பீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பிரபலங்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கணவர் உங்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். பிள்ளைகள் பாசமாக இருப்பார்கள். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் புகழாரம் பாடுவார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் வீண் பழி சுமத்தியவர்களுக்குப் பதிலடி தருவீர்கள். வேலைச்சுமை குறையும். புதிய கண்ணோட்டத்தில் பயணிக்கும் நேரமிது.

தனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். கணவரின் குறைகளைச் சீர்செய்வீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். பங்காளிப் பிரச்னை தீரும். சகோதரிக்குத் திருமணம் முடியும். நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர்கள், தோழிகளைச் சந்திப்பீர்கள். நாத்தனார், மச்சினர் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சில சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். மனநிறைவுடன் செயல்படும் நேரமிது.

மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அழகு, இளமை கூடும். வரவேண்டிய பணமும் வரும். கணவர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பாசமழை பொழிவார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுது சரியாகும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்லூரிக் காலத் தோழிகள் உதவுவார்கள். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் முக்கியமான விஷயங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். சாமர்த்தியமாகக் காய் நகர்த்த வேண்டிய நேரமிது.

கும்பம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். அரைகுறையாக நின்ற வேலைகள் இனி முடிவுக்கு வரும். குடும்பத்தில் சச்சரவு நீங்கி அமைதி நிலவும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு, கணவர் உறுதுணையாக இருப்பார். மகளுக்கு நல்ல வரன் பேசி முடிப்பீர்கள். முன்கோபம், அடி வயிற்றில் வலி, ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். அடிக்கடி முன்கோபம் வரும். கணவருக்கு அலைச்சலுடன் ஆதாயமும் உண்டு. கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிந்தித்துச் செயல்படவேண்டிய நேரமிது.

மீனம்: புதிய யோசனைகள் பிறக்கும். பழைய சிக்கல்கள் தீரும். நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. கணவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். நாத்தனார் வகையில் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கிய சொந்தங்களுடன் நெருடல் வந்து நீங்கும். அந்நிய நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. பொறுமையும், எச்சரிக்கை உணர்வும் தேவைப்படும் நேரமிது.