Published:Updated:

ராசிபலன்: இந்த வாரம் பணவரவு எந்த ராசிக்கு? #Video

ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்
ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் இரா. கார்த்திகேயன்.

பொதுவாக தினபலன்களும் வாரபலன்களும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுபவைதான். காரணம் சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாள்களில் கடக்கும். மற்ற கிரகங்கள் எல்லாம் ஒரு ராசியைக் கடக்க ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் எடுத்துக்கொள்ளும். மேலும் சூரியன் சந்திரன் தவிர பிற கிரகங்கள் வக்ரமாகவும் சில அதிசாரமாகவும் சஞ்சாரம் செய்யும் தன்மை கொண்டவை.

சந்திரன்
சந்திரன்

சனி, குரு, ராகு - கேது ஆகிய கிரகங்கள் ஆண்டுகிரகங்கள். எனவே குறுகிய கால பலன்கள் சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படும்.

அந்த வகையில் 6.6.21 முதல் 12.6.21 வரையிலான ஒரு வார காலத்துக்கான ராசிபலன்களை சந்திரனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் இரா. கார்த்திகேயன். இந்த வாரம் சந்திரன் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

முதல் மூன்று நாள்கள் மேஷராசியிலும் (8.6.21 அன்று மதியம் 12.23 வரையிலும்) அடுத்த இரண்டு கால் நாள்கள் ரிஷப ராசியிலும் (11.6.21 அன்று அதிகாலை 1.09 மணி வரையிலும்) வார இறுதி வரை மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

மிதுன ராசியில் சஞ்சாரம் செய்த செவ்வாய் 3.6.21 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாகியிருக்கிறார். இதுவும் முக்கியமான பெயர்ச்சியாகக் குறிப்பிடலாம். கடக ராசியில் செவ்வாய் நீசம் அடைகிறார். இது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு இந்த வார ராசிபலன்களை நமக்காகத் தந்திருக்கிறார் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். பன்னிரு ராசிகளுக்கான பலன்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு